Saturday 29 June 2013

காவல்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..? என்ன செய்வது

காவல்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..? என்ன செய்வது? படியுங்கள்... பயன்படுத்துங்கள்!!

காவல்துறை அதிகாரி உங்களை தடுத்து நிறுத்துகிறார்.

1.1 சீருடையில் இல்லையெனில் அவர் காவல்த்துறை அதிகாரிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

'தயவு செய்து உங்களுடைய அதிகார அட்டையைக் காட்டுங்கள்' எனக் கேளுங்கள்.

1.2 காவல்த்துறை அதிகார அட்டை

சிவப்பு நிறம் : இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி. உங்களை எதுவும் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை. அங்கிருந்து புறப்பட்டு விடுங்கள்.

வேறு நிறங்கள்

நீல நிறம் : இன்ஸ்பெக்டர் அல்லது மேற்பட்ட பதவியில் இருப்பவர்.
மஞ்சள் நிறம் : இன்ஸ்பெக்டருக்கும் கீழ்பட்ட பதவியில் இருப்பவர்.
வெள்ளை நிறம் : சேமக் காவலர்

அவருடைய பெயரையும் அடையாள எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.

1.3 சீருடையுடன் இருக்கின்றார்

அவர் சீருடையில் உள்ள பெயரையும் அடையாள என்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.

1.4 காவல்த்துறை வாகனம்

காவல்த்துறை மோட்டார் வண்டி / மோட்டார் சைக்கிளின் என் பட்டையை குறித்துக் கொள்ளுங்கள்.

2. காவல்த்துறை அதிகாரி உங்களை தடுத்து நிறுத்தும் பொழுது கேள்விகள் கேட்கிறார்.

2.1 உங்களுடைய அடையாளம்

உங்கள் பெயர், அடையாள அட்டை எண், வீட்டு முகவரி ஆகியவற்றை மட்டும் தெரிவியுங்கள்.

2.2 காவல்த்துறை அதிகாரி வேறு கேள்விகளை கேட்கிறார்.

பணிவுடன் 'நான் கைது செய்யப்படுகின்றேனா?' எனக் கேளுங்கள்.

2.3 எப்பொழுது நீங்கள் கைது செய்யப்படுகின்றீர்கள்?

காவல்த்துறை அதிகாரி

உங்கள் கேள்விக்கு 'ஆமாம்' என்று பதில் சொன்னால்
உங்களை புறப்பட்ட அனுமதிக்காவிட்டால் / காவல்நிலையத்திற்கு உங்களைஅழைத்துச் செல்ல விரும்பினால் ; அல்லது உங்களை கைவிலங்கிட்டால்.
நீங்கள் கைது செய்யப்படவில்லையானால், அங்கிருந்து புறப்படலாம் / காவல்நிலையத்திற்கோ அல்லது வேறு இடத்திற்கோ அவருடன் வரச் சொன்னால்மறுத்து விடுங்கள்.

2.4 எப்பொழுது உங்களை கைது செய்ய முடியாது?

நீங்கள் சாட்சியாக ஆவதற்கு வாய்ப்புள்ள காரணத்தால், வாய்மொழி கேள்விகள் கேட்பதற்காகவும், அக்கேள்விகளுக்கான பதில்களை பதிவு செய்வதற்காகவும் உங்களை கைது செய்ய முடியாது.

3. கைது செய்யப்படாமல், காவல்த்துறையினர் கேட்கும் கேள்விகள்.

3.1 112 / வாக்குமூலம்

காவல்த்துறையினர் ஒரு வழக்கினை விசாரணை செய்யும் பொழுது, உங்களுக்கு அதுபற்றிய விபரங்கள் தெரியும் எனக் கருதினால், உங்களிடம் கேள்விகள் கேட்டு, அதற்கான பதில்களைப் பதிவு செய்யலாம்.

3.2 அதிகாரப்பூர்வமான / அதிகாரப்பூர்வமற்ற வேண்டுதல்

வழக்கமாக உங்களை 112 / வாக்குமூலம் வழங்க அதிகாரப்பூர்வமற்றவேண்டுதலை விடுப்பர். அந்த இடமும் நேரமும் உங்களுக்கு ஏதுவாக இருந்தால்ஒத்துழையுங்கள். இல்லையெனில், உங்களுக்கு ஏதுவான இடத்திலும்நேரத்திலும் அதனை வழங்குவதாகத் தெரிவியுங்கள்.
நீங்கள் முழுமையாக மறுத்துவிட்டீர்கள் எனில், உங்களை ஒத்துழைக்க வேண்டிவிசாரணை அதிகாரி கையொப்பமிட்ட அதிகாரப்பூர்வமான ஆணைப்பிறப்பிக்கப்படும்.

3.3 112/ வாக்குமூலம் வழங்குகின்றீர்கள்

வாக்குமூலம் வழங்கும்பொழுது ஒரு வழக்கறிஞரை உடன் வைத்திருக்கஉங்களுக்கு உரிமை உள்ளது. இதனையே செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
112 / வாக்குமூலம் வழங்கும் பொழுது, வினவப்படும் கேள்விக்கான பதில்உங்கள் மீது குற்றத்தை சுமத்த வாய்ப்பிருந்தால், நீங்கள் பதிலளிக்க மறுக்கலாம்மௌனமாக இருக்கலாம்.
தாள் அல்லது குறிப்பு புத்தகத்தை உங்களுடன் கொண்டு செல்லுங்கள்.
கேட்கப்படும் கேள்விகளை குறித்துக் கொள்ளுங்கள்.
கேள்விகள் புரிகின்றதா என்பதனை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
நன்கு சிந்தித்தப் பிறகு உங்களுடைய பதில்களை குறிப்பு புத்தகத்தில் எழுதுங்கள்.
காவல்த்துறை அதிகாரியிடம் உங்கள் பதில்களைச் சொல்லுங்கள்.
உங்களுடைய குறிப்பு புத்தகத்தை எதிர்கால தேவைக் கருதி பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.

3.4 112/ வாக்குமூலத்தினைக் கையொப்பமிடுதல்

வாக்குமூல அறிக்கையினை கையொப்பமிடுவதற்கு முன்பாக காவல்த்துறைஅதிகாரி கேட்ட கேள்விகளையும் நீங்கள் கொடுத்த பதில்களையும் கவனமாகப்படித்துப் பாருங்கள்.
கையொப்பமிட வழங்கப்பட்ட அறிக்கையினையும் உங்கள் குறிப்புபுத்தகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
கையொப்பமிடுவதற்கு முன்பாக அவ்வறிக்கையினை திருத்தவும் மாற்றவும்உங்களுக்கு உரிமை உள்ளது.
அந்த அறிக்கையின் இறுதி வரிக்கு கீழ் உடனடியாக கையொப்பமிடுங்கள்.

4. காவல்த்துறை அதிகாரி உங்களைக் கைது செய்கிறார்.

4.1 "நான் ஏன் கைது செய்யப்படுகிறேன்?" எனக் கேளுங்கள்.

காரணத்தை சொல்லாமல் கைது செய்தால் அக்கைது சட்டப்பூர்வமற்றதாகும்.

4.2 கைது செய்யப்படும்பொழுது அதனை தடுக்கவோ / எதிர்க்கவோ முயற்சி செய்யாதீர்கள்.

தகுந்த வலிமையைப் பயன்படுத்தி உங்களை கைது செய்ய காவல்த்துறைக்கு அதிகாரம் உண்டு.

4.3 "எந்த காவல்நிலையத்திற்கு என்னை அழைத்துச் செல்கின்றீர்கள்: எனக் கேளுங்கள்.

உடனடியாக உங்களை அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். வேறு எங்கும் அழைத்துச் செல்லக்கூடாது.

4.4 கைது செய்யப்படும்பொழுது என்ன செய்ய வேண்டும்?

தொலைப்பேசியில் தொடர்புக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு.

உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பருக்கு, வழக்கறிஞருக்கு அல்லது சட்ட உதவி மையத்திற்கு தொடர்புக் கொண்டு கீழ்கண்டவற்றை தெரிவியுங்கள்.

நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்
கைது செய்யப்பட்ட நேரம், இடம், காரணம்
காவல்த்துறை அதிகாரியின் அடையாளம்
நீங்கள் அழைத்துச் செல்லப்படவிருக்கும் காவல் நிலையம்

4.5 கைது செய்யப்பட்டப் பின்னர் என்ன நடக்கும்?

விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக 24 மணி நேரம் வரை உங்களை காவல் நிலையத்தில் / தடுப்புக் காவலில் வைத்திருக்கலாம்.

5. கைது செய்யப்பட்ட பிறகும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுதும், உங்களுக்குரிய உரிமைகள்

5.1 வழக்கறிஞருடன் தொடர்புக் கொள்ள உரிமை உண்டு.

வழக்கறிஞருடன் தொடர்புக் கொள்ளவும் / சந்திக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. அவ்வுரிமையை கட்டாயம் பயன்படுத்துங்கள்.

5.2 உடைகள்

தடுப்புக் காவலில் இருக்கும்பொழுது ஒரு ஜோடி உடையை வைத்திருக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

5.3 உங்களுடைய உடமைகள்

உங்களுடைய உடைமைகள் முறையாக பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும்.

நீங்கள் விடுவிக்கப்படும் பொழுது உங்களுடைய உடைமைகள் உங்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்

5.4 நலன்

நாளுக்கு இருமுறை குளிப்பதற்கு உங்களுக்கு உரிமையுண்டு.
உடல் நலம் இல்லையெனில் உடனடி மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்குஉங்களுக்கு உரிமை உண்டு.
உங்களுக்கு முறையான - போதுமான உணவும் நீரும் வழங்கப்பட வேண்டும்.

5.5 எத்தனை நாட்கள் உங்களை தடுத்து வைக்க முடியும்?

விசாரணைக்காக 24 மணி நேரம் வரை மட்டுமே உங்களை தடுத்து வைக்கலாம்.
24 மணி நேரத்திற்குள் விசாரணையை முடித்துவிட்டு, உங்களை உடனடியாகவிடுவிக்க வேண்டியது காவல்த்துறையினரின் கடமை.
24 மணி நேரத்திற்கு மேற்பட்டு உங்களை, தடுத்துவைக்க வேண்டுமானால், நீங்கள் மெஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தப்பட்டு காவல் நீட்டுப்பு 'ஆணைப்' பெறப்பட வேண்டும்.

No comments:

Post a Comment