Monday 14 November 2011

இந்தோனேசியா

இந்தோனேசியா, உத்தியோகபூர்வமாக இந்தோனேசிய குடியரசு, சுமார் 18,000தீவுகளாலான தென் கிழக்காசிய நாடாகும். இந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியின் இந்தியா என பொருள்படும் இந்துஸ் (indus) மற்றும் தீவுகள் எனப்பொருள்படும் நியோஸ் (nesos)என்ற பதங்களில் இணைப்பாகும். இதன் எல்லைகளாக பப்புவா நியூகினியா,கிழக்குத் திமோர், மலேசியா என்பற்றால் எல்லைப் படுத்தப் பட்டுள்ளது. இது உலகிலேயே முஸ்லிம் மக்கள் தொகை கூடிய நாடாகும்.

இந்தோனேசிய தீவுகளானது பிரதானமாக ஜாவா 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இப்பிரதேசம் சீனாவுக்கான வணிப பாதையில் அமைந்திருப்பதால் வாசனைத்திரவிய வாணிபத்தில் முன்னோங்கிக் காணப்பட்டது. இப்பிரதேசத்தை நோக்கி வளச்சியடைந்த இந்து இராச்சியங்கள், இந்து மற்றும் பௌத்த மதங்களைஇப்பகுதிகளுக்கு கொண்டு வந்தன. மத்திய காலத்தில் இப்பிரதேசம் இஸ்லாமிய ஆதிக்கத்துக்குள்ளானது. இப்பிரதேசம் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கீழ் நெதர்லாந்தின் காலணித்துவ பிரதேசமாக காணப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது சிறிது காலம் யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த நாடு 1945 இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது. ஒன்றுபட்ட சுதந்திர இந்தோனேசியாவானது 1949 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை 1953 இல் அங்கீகரித்தது.
நாட்டுப்பண்
இந்தோனேசிய ராயா
தலைநகரம்
பெரிய நகரம் ஜாகார்த்தா
ஆட்சி மொழி இந்தோனேசிய மொழி
அரசு குடியரசு
அதிபர் சுசிலோ பம்பாங் யுடொயோனோ
உப அதிபர் ஜுசுப் கல்லா
விடுதலை நெதெர்லாந்திடமிருந்து
பிரகடனம் ஆகஸ்டு 17 1945
அங்கீகாரம் டிசம்பர் 27 1949
பரப்பளவு
மொத்தம் 19,04,569 கிமீ² (16வது)
7,35,355 சது. மை
நீர் (%) 4.85%

No comments:

Post a Comment