Sunday, 20 July 2014

நந்தியா வட்டை

தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவபயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம்.
இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களிலும் உதவுகிறது.
இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.

நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்குவி, கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.

No comments:

Post a Comment