Sunday, 20 July 2014

கைக்குத்தல் அரிசி நன்மைகள்

கைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும். இதில் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை அரிசியைக்காட்டிலும் கைக்குத்தல் அரிசியானது அதிக சுகாதார பலன்களை கொண்டது. கைக்குத்தல் அரிசியை அதன் வெளித்தோலான உமியை நீக்கி பதப்படுத்துவார்கள். வெள்ளை அரிசியில் நீக்கப்படும் பலவாரியான தோல் நீக்கத்தால் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகின்றது. இதனைகாட்டிலும் கைக்குத்தல் அரிசியில் ஊட்டச்சத்து நீங்கிவிடும் வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும். கைக்குத்தல் அரிசியானது நார்ச்சத்தை தக்கவைப்பதால் நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க உதவும் உணவுவகைகளில் இது ஒரு முக்கிய உணவாகும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கைக்குத்தல் அரிசியை ஜீரணிக்க அதிக சக்தி தேவைப்படும். உங்கள் பசியை நீண்ட நேரம் வரை கட்டுக்குள் வைத்து அதிக அளவில் உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும். இந்த கைக்குத்தல் அரிசி ஒரு நாளில் நமக்கு தேவைப்படும் 80%மாங்கனீஸ் அளவை தரக்கூடியது. மேலும் கார்போஹைட்ரேட் மற்றும் ப்ரோடீன் சக்திகளையும் தரக்கூடியது. எல்லா வகை அரிசிகளான பாஸ்மதி, ஜாஸ்மின் மற்றும் சுஷி அரிசிகளிலும் கைக்குத்தல் வகை வந்துள்ளது. இதனால், சராசரியாக அரிசி உட்கொள்ளுபவர்கள் வெள்ளை அரிசியை தவிர்த்து கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தலாம்.

மாங்கனீஸ் நிறைந்துள்ளது

ஒரு கப் கைக்குத்தல் அரிசியில் நமக்கு ஒரு நாளில் தேவைப்படும் 80% மாங்கனீஸ் சக்தியை கொண்டுள்ளது. மாங்கனீஸ் நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட் இருந்து சக்தியைப் பெற்று நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை தொகுத்து கட்டுப்படுத்த உதவுகின்றது.

எடை குறைப்பு
கைக்குத்தல் அரிசியின் முக்கிய சுகாதார பலன் அதில் உள்ள எடைகுறைக்கும் தன்மை தான். அதில் நிறைந்துள்ள நார்ச்சத்து நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைத்து அதனை ஜீரணிக்க அதிக சக்தி தரும். இவை மட்டுமல்லாது நார்ச்சத்து நமது பசியை நீண்ட நேரம் வரை தக்க வைத்து அதிக உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும்.

நல்ல எண்ணெய் வகைகளை நிறைந்துள்ளது
கைக்குத்தல் அரிசியில் நமது உடலுக்கு தேவையான இயற்கை எண்ணைகளை அதிக அளவில் உள்ளது. நமது உடல் சுகாதாரத்திற்கு தேவையான அதிக பலன்களை கொண்டுள்ளது. இந்த நல்ல எண்ணைகளில் உள்ள நல்ல கொழுப்புச்சத்து நமது உடலின் இரத்தகொழுப்பை இயல்பாக்கி கட்டுப்படுத்தும்.

இதயத்திற்கு நல்லது
கைக்குத்தல் அரிசியின் பதபடுத்தலில் அதன் மேல்தோல் மட்டுமே நீக்கப்படுவதால் அதன் தன்மை குறையாமல் முழுதானியமாக இருக்கின்றது. இதன் முழுதன்மையினால் நமது உடலில் அர்டீரியல் பிளேக் உருவாக்குவதிலும் இதய நோய்கள் வாராமல் தடுப்பது மற்றும் அதிக இரத்தகொழுப்பையும் கட்டுப்படுத்தும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்
தற்போது வெளிவந்துள்ள ஆராய்ச்சிகளின் படி, கைக்குத்தல் அரிசியில் அதிக ஆண்டி ஆக்சிடன்ட்கள் தன்மை நிறைந்துள்ளது என உறுதிபடுத்தியுள்ளனர். இதில் உள்ள பைடோநியூற்றிசியன்ட்கள் அதன் முழுதன்மையை தக்கவைகின்றன. கைக்குத்தல் அரிசியில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட்கள் நோய்களை வராமல் தடுத்து வயது மூப்படைதலையும் மெதுவாக்குகின்றது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள மெக்னீஷியம் நமது உடலில் க்ளுகோஸ் இன்சுலின் சுரக்கும் நொதிகள் போன்ற 300 மேலான நொதிகள் உருவாக்க உதவுகின்றது. பதப்படுத்தப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் தரும் கார்போஹைட்ரேட்டுகளை காட்டிலும் கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

எலும்புகளுக்கு நல்லது
கைக்குத்தல் அரிசியில் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் நமது நரம்புகளையும் சதைகளையும் சீராக்குவதற்கும் கால்சியம் தன்மையை சமன் செய்வதற்கும் உதவுகின்றது. மெக்னீஷியம் மற்றும் கால்சியம் நமது எலும்புகளுக்கு இன்றியமையாதது. நமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு மெக்னீஷியம் எலும்புகளில் உள்ளது.

குழந்தைகளின் உணவு
கைக்குத்தல் அரிசியில் இயற்கை சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த முதல் உணவாக இருக்கின்றது. வளர்ந்து வரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவைப்படும். கைக்குத்தல் அரிசியானது குழந்தைகளிடையே ஆஸ்துமா நோயை 50% வரை கட்டுப்படுத்தியுள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment