Thursday, 31 July 2014

நம் உடலின் கால அட்டவணை

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு. இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை. இதோ கால அட்ட வணை:

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.
காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.
காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.
காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.
பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.
மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.
இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.
இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

எது மதிப்பு வாய்ந்தது????????????

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
நீதி: வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

கடவுள் எங்க இருக்கிறார்

ஒரு அழகான குடும்பம், கணவன் மனைவி மற்றும் இரு மகன்கள் வாழ்ந்து வந்தனர், இரு மகன்களும் பெற்றோர்களுக்கு தொல்லைதரும் விஷயங்கள் மட்டுமே செய்து கொடிருப்பர்கள், திருடுவது, பொய் சொல்வது, அடுத்த வீட்டுப் பிள்ளைகளை அடிப்பது என எப்போதும் கொண்டிருந்தார்கள்.
அவர்களைத் திருத்த எத்தனையோ முறை முயன்று, தோற்றுப் போனார்கள் பெற்றோர்கள், இருவரையும் ஒரு பாதிரியாரிடம் அழைத்துப் போகலாம் என்று முடிவு செய்தார்கள்..
பாத்ரியாரை சந்தித்தார்கள், அவர் முதலில் ஒருவனை மட்டும் உள்ளே அழைத்தார், இங்கே தப்பு செய்தால் மேலுலகத்தில் கடவுள் தண்டிப்பார் என்பதைப் புரிய வைக்கும் முயற்சியாக, ‘கடவுள் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டார்.
அதற்க்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.
‘எங்கே கடவுள் என்பதற்குப் பதில் சொல்’
அவன் விழித்தான்.

‘கடவுள் எங்க இருக்கிறார்ன்னு சொல்லப் போறியா இல்லையா?’
அவன் அழ ஆரம்பித்தான்.
‘சரி. நீ போ. உனது சகோதரனை உள்ளே வரச் சொல்’ என்றார்
அவன் வேகமாக அறையை விட்டு ஓடிப்போய் தனது சகோதரனிடம் சொன்னான். ‘டேய்! இந்த தடவை பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம். கடவுளைக் காணோமாம் . நாம்தான் திருடியதாக சந்தேகப்படுகிறார்கள்’ என்று...!

அதிர்ஷ்டம்!!!!!!!!!!!!

அவன் மிகவும் ஏழை.
தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது.
அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை.
அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான்.
அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.
அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான்.
அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான்.
வெளியே எடுக்கமாட்டான்.

சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.
பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!
அந்தக் காசில் துளையே இல்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான்.
அவன் மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள்.
உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன்.
காசு தெருவில் விழுந்துவிட்டது.
எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை.
நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்” என்றாள்.
”இது எப்போது நடந்தது?” என்று கேட்டான்.
”அந்தக் காசு கிடைத்த மறுநாளே” என்றாள்.
அவன் அமைதியாக சிந்தித்தான்.

பாக்கெட் பால் எவ்வளவு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்?

''பாலில் உள்ள சில வகையான பாக்டீரியாக்கள் குளிர் நிலையில் மட்டுமே இறக்கும். சில பாக்டீரியாக்கள் அதிக வெப்பநிலையில்தான் இறக்கும். அதனால்தான், பால் பதப்படுத்தும் பண்ணைகளில் கொள்முதல் செய்யப்பட்ட பாலை, முதலில் வெப்பமூட்டி பிறகு குளிரூட்டு கிறார்கள். வெப்பமூட்டி, குளிரூட்டுவதுதான் 'பதப் படுத்துதல்’ எனப்படுகிறது. கறந்த பாலை இரண்டரை மணி நேரத்துக்குள் பண்ணைக்குக் கொண்டு வந்து 4 டிகிரி வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். தொடர்ந்து 71.5 டிகிரி வெப்பநிலையில் 15 விநாடிகள் சூடுபடுத்தி, பிறகு 4 டிகிரி வெப்பநிலையில் குளிர்விக்க வேண்டும்.

இப்படிச் செய்யும்போது பாலில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப் படும். இப்படி பதப்படுத்தப்பட்ட பாலை, குளிர்சாதனப் பெட்டியில் மூன்று நாட்கள் வரை மட்டுமே பாதுகாக்க முடியும். கறந்த பாலை பதப்படுத்தாமல், ஒரு நாள் மட்டுமேதான் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பராமரிக்க முடியும். தற்போது, ஏசெப்டிக் பேக்கேஜிங் (Aseptic packaging) என்ற முறையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாக்கெட்களில் அடைத்து, அறை வெப்ப நிலையிலேயே பராமரிக்கும் முறையும் உண்டு. இந்த முறையில், அதிகபட்சம் 90 நாட்கள் வரை மட்டும்தான் கெட்டுப் போகாமல் வைக்க முடியும். பாக்கெட்டை பிரித்து விட்டால், முழுவதையும் உடனே உபயோகப்படுத்தி விட வேண்டும்.''

லேப்டாப் பேட்டரிகள் பழுதடையாமல் தடுக்க எளிய வழிகள்!

remove-laptop-batteryலேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது.
அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும்.
லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது?

என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.
1. லேப்டாப்பின் திரைக்குதான் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே கரண்ட் இல்லாமல் பேட்டரியில் லேப்டாப்பை இயக்கும்போது அதன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வது அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும். அதுபோல் லேப்டாப் ஸ்டான்பை மோடில் வைத்திருக்கும்போது, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற இணைப்புகள் மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவ்கள் போன்ற இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. மின் சிக்கனம் மட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.
2. எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் :
நீண்ட நேரம் தொடர்ந்து லேப்டாப்பின் பேட்டரியை சார்ஜில் வைக்கக் கூடாது.
குறிப்பாக பேட்டரி 15%க்கும் குறைவான சார்ஜ் இருக்கும் போது மட்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும்.
குறிப்பாக பேட்டரி முழு சார்ஜில் இருக்கும் போது அதை மீண்டும் சார்ஜில் வைத்தால் பேட்டரி மிக விரைவாக பலவீனமாகிவிடும்.
3. லேப்டாப் மின் இணைப்பில் இருக்கும் போது அதன் பேட்டரியை அகற்ற வேண்டாம்.
அதுபோல் பேட்டரி இல்லாமல் நீண்ட நேரம் லேப்டாப்பை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம்.
பேட்டரியை ரிசார்ஜ் செய்வது நல்லது.
4. ஒரு வாரத்துக்கு மேல் லேப்டாப்பில் வேலை இல்லை என்று தெரிந்தால் அல்லது துணை பேட்டரி இருந்தால் பேட்டரியின் சார்ஜ் அளவை 50%க்கும் குறைவாக வைத்து அதை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது.
அதுபோல் லேப்டாப்பை நீண்ட நேரம் காரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது.
ஏனெனில் அதிக நேரம் லைப்டாப்பை காரில் வைத்திருந்தால் விரைவில் லேப்டாப் சூடாகிவிடும்.
5. பொதுவாக எல்லா லேப்டாப்புகளும் லித்தியம் பேட்டரிகளைக் கொண்டுள்ளன.
எனவே பேட்டரியின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் அதை முறையாக முழு சார்ஜில் வைத்திருப்பது, மற்றும் அதன் சார்ஜை 40 முதல் 50 சதவீதத்திற்கும் குறையாமல் வைத்திருப்பது நல்லது.
6. பேட்டரியை தேவைக்கேற்ப சார்ஜில் வைத்திருப்பதால் காலப்போக்கில் பேட்டரியின் திறன் பலவீனமடையும்.
எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது.
பேட்டரி பலவீனமடையும் போது அது லேப்டாப்பின் ஆயுளையும் பலவீனப்படுத்தும்.
ஆக உண்மையிலேயே பேட்டரி பலவீனமடையும் போது புதிய பேட்டரியை மாற்றுவது நல்லது.
அப்போது லேப்டாப்பின் ஆயுள் கெடாமல் இருக்கும்.

Wednesday, 30 July 2014

நன்றியுள்ள நாயும் நன்றியற்ற முதலாளியும்

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
கடைக்காரர் விரட்டி விட்டார்..
திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு…
என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…
கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். ..
நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.
கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..
அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது..
அப்போது ரெட் சிக்னல்.. 
அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது…
பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…
கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை…
அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்.
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.
ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.
கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.
இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது.
கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்.
நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது.
கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்.
நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்.
கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க??
ஏன் அடிக்கறீங்க??
அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …???
அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீட்டு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க..
நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.

Monday, 28 July 2014

மண்புழு உரம் தயார் செய்யும் முறை

மண்புழு உரம் தயார் செய்யும் முறை :
மேலே ஒளி படாமல் இருக்க பந்தல் போடவும்...
மண்புழு பற்றிய தகவல் :
வேளாண் பல்கலைக் கழக இணைய தளம் என்பது விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்களின் சொர்க்க பூமி. அதிலிருந்து ஒரு பயனுள்ள கட்டுரை.

 இந்த புவியியல் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அங்கக கழிவுகளை மட்கவைத்து உரமாக்கி மீண்டும் பயிர்கள் கிரகித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் மண்ணில் மண்புழுக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, நோய் கிருமிகளை இந்த மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில் அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றி அமைக்கிறது.
மண்புழு உரத்தின் தொழில்நுட்பம்
மண்புழு உரத்தின் தொழில் நுட்பமானது, அங்ககக் கழிவுகளை, மண்புழுக்களை கொண்டு மதிப்பூட்டுதல், கழிவுகளை அந்த இடத்திலேயே மேம்படச் செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல் மற்றும் உயிரியல் மாசுக்களை அப்புறப்படுத்துதல்.
மண்புழு உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்களை தேர்வு செய்வதற்கு வேண்டிய குணாதிசயங்கள்
அங்ககக் கழிவுகளில் அதிக எண்ணிக்கையில் வளரும் தன்மை உடையனவாக இருக்க வேண்டும்.
எல்லாச் சூழ்நிலைகளிலும் வளரும் இரகமாக இருக்க வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் இரகமாக இருக்க வேண்டும்.
அதிகஅளவில் உணவை உட்கொண்டு செரித்து, வெளியேற்றும தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
மண்புழு இரகங்கள்
வாழும் இடத்தை பொருத்து மண்புழு இரகங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன.
மண்ணின் மேற்பரப்பில் அங்ககக் கழிவுகள், மற்றும் கால்நடைக் கழிவுகளில் வளரும் தன்மை உடையது.
மண்ணில் சற்று உள்ளே வளரும் தன்மை உடையது.
மண்ணின் கீழ்பரப்பில் வளரும் தன்மை உடையது.
மண்ணின் மேற்பரப்பில், அங்ககக் கழிவுகளில், கால்நடைக் கழிவுகளில் வளரும் மண்புழுக்களுக்கு, எப்பிஜிக் (Epigeic) என்று பெயர். இந்த மண்புழுக்கள் நிறமானதாகவும், எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை உடையதாக இருக்கும். இதற்கு உதாரணம், லும்பிரிக்கஸ் மற்றும் எஹ்சீனியா மண்புழுக்கள். மண்ணில் சற்று கீழே வளரக் கூடிய மண்புழுக்களை, என்டோஜியிக் (Endogeic) என அழைப்பார்கள். இவைகள் மண்ணில் இருந்து 30 செ.மீ ஆழத்தில் வளரும் தன்மை உடையவை. இவை பொதுவாக மண் மற்றும் அங்கக பொருட்களை சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும். இவை மண்ணில் துளையிட்டு செல்லும் தன்மை உடையவை. இதனால் மேல் பாக மண்ணும் கீழ்பாக மண்ணும் ஒன்றாகக் கலந்துவிடும். மண்புழுக்கள் விட்டுச் செல்லும் துளைகளினால் காற்றும், நீரும், வேர்மண்டலத்தை சென்று அடைகிறது. இவ்வகை மண்புழுக்களுக்கு உதாரணம் அபரேக்டிடா (Aporrectedea) ஆகும்.
மண்ணின் கீழ்பாகத்தில் வசிக்கும் மண்புழுக்கள் அனிசிக் (Anecic) என்று அழைக்கப்படும். இவை மண்ணில் நீண்ட ஆழத்திற்கு (3 மீட்டர்) துவாரம் இட்டு செல்கிறது. இவை மண்ணில உள்ள அங்ககப் பொருட்களை மண்ணின் அடிப்பாகம் வரை எடுத்துச் செல்கிறது. இவ்வகை மண் புழுக்களுக்கு உதாரணம் லும்பரிக்கஸ் டெரஸ்டிரில், அபரோகிடா லாங்கா.
மண்ணின் மேற்பரப்பில் வளரும் மண்புழுக்களான யூட்ரில்லஸ், எய்சீனியா மற்றும் பிரியானிக்ஸ் மண்புழுக்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் ஆப்ரிக்கன் மண்புழு என்று அழைக்கப்படும் யூட்டிரில்லஸ் யூஜினியே அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்க வைக்கும் தன்மை கொண்டவை.
2. மண்புழு உரம் தயாரிப்பதற்கான பல்வேறு நிலைகள்
நிலை – 1
மட்கக்கூடிய கழிவுகளை சேகரித்தல், சிறு சிறு துண்டுகளாக மாற்றுதல், உலோகம், கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை பிரித்து எடுத்தல்.
நிலை – 2
மட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்கவிடுதல். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக உபயோகிக்கலாம்.
நிலை – 3
மண்புழு உரப்படுக்கை தயாரித்தல். மண்புழு உரம் தயாரிக்க கடின தரை மிகவும் அவசியம். தரை மிருதுவாக இருந்தால் மண்புழு மண்ணுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மண்புழு படுக்கையில் தண்ணீர் விடும் பொழுது, கரையக் கூடிய சத்துக்கள் எல்லாம் நீரில் கரைந்து மண்ணுக்குள் சென்றுவிடும்.
நிலை – 4
மண்புழு உரம் தயாரித்த பின்பு மண்புழுக்களை பரித்து எடுத்தல் அவசியமாகும். மண்புழு உரத்தை சல்லடையில் இட்டு சலிக்கும் பொழுது, நன்றாக மக்கிய உரம் மற்றும், மக்காத கழிவுகளை தனித்தனியாக பிரித்து எடுக்கப்படும். மக்காத கழிவுகளை மறுபடியும் மண்புழு படுக்கையில் இடவும்.
நிலை – 5
சேகரித்த மண்புழு உரத்தை அதிக வெயில்படாத காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் அதிக அளவில் வளரும்.
மண்புழு உர உற்பத்தி முறைகள்
உகந்த மண்புழுவை தேர்ந்தெடுத்தல்
மண்புழு உரம் உற்பத்திக்காக நிலப்பரப்பின் மேல் வாழக்கூடிய மண்புழுரகம் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. மண்ணின் ஆழத்தில் வாழக்கூடிய மண்புழுவானது, மண்புழு உரத்தின் உற்பத்திக்கு உகந்ததல்ல. ஆப்ரிகன் மண்புழு (யூடிரிலஸ் யுஜினியே), சிவப்பு புழு (எய்சினியா ஃபோய்டிடா), மக்கும் புழு (பெரியானிக்ஸ் எக்ஸ்கவேடஸ்) இவை அனைத்தும் மண்புழு உரத்தின் உற்பத்திக்கான சிறந்த மண்புழுக்களாகும். மூன்று மண்புழுக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மண்புழு உரத்தை உற்பத்தி செய்ய முடியும். மற்ற இரண்டை காட்டிலும் ஆப்ரிக்கன் (யூடிரிலஸ் யுஜினியே) புழுவானது மிகவும் சிறந்தது. ஏனெனில் குறைந்த கால இடைவெளியில் அதிகளவு மண்புழு உரம் மற்றும் புழுக்களையும் உற்பத்தி செய்கிறது.
அட்டவணை:1 மண்புழு உரம் தயாரிக்க உகந்த கழிவுகள்
கழிவுகள் கிடைக்கும் இடம் உபயோகிக்க கூடிய கழிவுகள்
வேளாண் பண்ணைகள் பயிர் தூர்,களைகள்,வைக்கோல்,உமி,எரு
மலைப் பயிர்கள் தண்டு,இலைகள்,பழத்தோல்கள்
கால்நடைகள் சாணம்,மூத்திரம்,சாண எரிவாயு கழிவு
உணவு பதப்படுத்தும் ஆலை தோல்,ஓடு,உபயோகப்படுத்தாத குழம்பு, காய்கறிகள்
சமையல் எண்ணெய் ஆலை விதை ஓடு, பிரஸ்மட்
வடிப்பாலை உபயோகப்படுத்தப்பட்ட கழிவு நீர், பார்லி கழிவுகள்
விதை பதப்படுத்தும் ஆலை பழங்கள் (மத்திய பகுதி), முளைக்காத விதைகள்
வாசனை திரவியங்கள் ஆலை தண்டு, இலை, பூக்கள்
தென்னை நார் ஆலை தென்னை நார்க் கழிவு
மண்புழு உர உற்பத்திக்கான இடம்
மண்புழு உரம் உற்பத்தி செய்ய நிழலுடன், அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பகுதியாக இருத்தல் வேண்டும். உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை மற்றும் கட்டிடங்களை உபயோகப்படுத்த முடியும். திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், நிழலான இடத்தை தேர்ந்தெடுக்கவும். வெயில் மற்றும் மழையிலிருந்துபாதுகாப்பதற்கு, தென்னைக் கீற்று கூரையை பயன்படுத்தலாம். மண்புழு உர உற்பத்திக்கான குப்பை குவியலை உபயோகமில்லாத ஈரமான சாக்குப்பை கொண்டு மூட வேண்டும்.
மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்புகள்
ஒரு சிமென்ட் தொட்டி கட்டுவதற்கு அதன் உயரம் 2 அடி மற்றும் அகலம் 3 அடி ஆக இருக்கவேண்டும். அந்த அறையின் அளவை பொருத்து நீளமானது எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். அடிப்பகுதியான தொட்டியானது சாய்வான வடிவம் போன்று கட்டப்பட வேண்டும். அதிகளவு தண்ணீரை வடிகட்டுவதற்காக மண்புழு உரத்தின் அமைப்பிலிருந்து ஒரு சிறிய சேமிப்பு குழி அவசியம். ஹாலோ ப்ளாக்ஸ், செங்கல் இவற்றை பயன்படுத்தியும் மேலோ சொன்ன முறையில் கட்டமைப்புகளை உருவாக்கலாம். இந்த முறையில் சரியான அளவில் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். இதனால் தேவையற்ற நீர் வெளியேறாது.
மண்புழு உர உற்பத்திக்கான படுக்கை
நெல், உமி அல்லது தென்னை நார்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்திற்கு பரப்பவேண்டும். ஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்கு தோட்டக்கால் மண் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.
கழிவுகளை படுக்கையில் போடும்முறை
பாதி மக்கிய கழிவுகளை 30 சதவீதம் கால்நடை கழிவுடன் (எடை அல்லது கன அளவின் அடிப்படையில்) கலக்க வேண்டும். இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 60 சதம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம்X1மீட்டர் அகலம்X.5 மீட்டர் உயரத்திற்கு இரண்டு கிலோ மண்புழு (2000 மண்புழு) தேவைப்படுகிறது. மண்புழுவினை, கழிவுகளுக்குள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனை மேலே பரப்பினால் போதுமானது.
தண்ணீர் தெளிக்கும் முறை
தினமும் தண்ணீர் தெளித்தல் அவசியமானது, 60 சதவீதம் ஈரப்பதம இருக்க வேண்டும். தேவையான போது தண்ணீரினைத் தெளிக்க வேண்டும். ஊற்றக் கூடாது. அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதனை நிறுத்தி விடவேண்டும்.
மண்புழு உரத்தினை ஊட்டமேற்றுதல்
அசிட்டோபேக்டர், அஸோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா,சூடோமோனாஸ், போன்ற உயிர் உரங்கள் மூலம் மண்புழு உரத்தினை ஊட்டமேற்றலாம். ஊட்டமேற்றுதல் மூலம் பயிர்ச்சத்துக்கள் மற்றும் உயிர் சத்துக்கள் அதிகரிக்கின்றன. மேலும் நன்மை தரும் உயிரினங்கள், ஊட்டமேற்றிய மண்புழு உரத்தில் அதிகரிக்கின்றன. ஒரு டன் கழிவிற்கு ஒரு கிலோ அசோபாஸ் (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ – பேக்டீரியா) என்ற அளவில் இருபது நாட்களுக்கு பின் மண்புழு படுக்கையில் சேர்க்கலாம்.
மண்புழு உர அறுவடை செய்முறை
தொட்டி முறையில், மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழு கழிவினை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். இந்த அறுவடை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். கையால் மண் புழு கழிவினை சேகரித்து நிழலில் குவித்து வைக்க வேண்டும். இந்த அறுவடையினை மண்புழு தெரியும் இடம் வரை செய்யவேண்டும். இந்த அறுவடையினை தகுந்த இடைவெளியில் செய்வதன் மூலம் நல்ல தரமான மண்புழு உரத்தினை பெறமுடியும்.
சிறியபடுக்கை முறையில், தகுந்த இடைவெளியில் மண்புழு உர அறுவடை தேவையில்லை. இந்த முறையில் கழிவுகளின் குவிப்பு 1மீட்டர் வரை இருப்பதனால், இந்த கழிவுகள் முழுவதும் மக்கிய பிறகு அறுவடை செய்தால் போதுமானது.
மண்புழு அறுவடை முறை
மண்புழு உரம் தயாரிப்பு முடிந்தவுடன், மண்புழுக்கள் கருவுருதல் முறையில் உரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இம்முறையில் சிறிய மாட்டு சாணப்பந்துகள் உரக்குழியில் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும். இதனால் மண்புழுக்கள் அந்த சாணத்தினால் கவரப்படுகின்றன. பிறகு இதனை தண்ணீரில் போடுவதன் மூலம் சாணம் கரைந்து மண் புழுக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தப் புழுக்கள், அடுத்த மண்புழ உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
மண்புழு உர பயிர்ச்சத்துக்களின் அளவு
பயிர்ச்சத்துக்களின் அளவானது, நாம் பயன்படுத்தும் மூலப்பொருட்களுக்கு தகுந்தாற்போல் வேறுபடுகிறது. வெவ்வேறு விதமான கழிவுகளை பயன்படுத்தினால், பலதரப்பட்ட பயிர்ச் சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரே விதமான கழிவுகளைப் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமே அதிக அளவில் இருக்கும். மண்புழு உரத்தில் காணப்படும் பொதுவான பயிர்ச்சத்துக்களின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சத்து அளவு
கரிமச்சத்து 9.5 – 11.98 சதவீதம்
தழைச்சத்து 0.5 – 1.5 சதவீதம்
மணிச்சத்து 0.1 – 0.3 சதவீதம்
சாம்பல்சத்து 0.15 – 0.56 சதவீதம்
சோடியம் 0.06 – 0.30 சதவீதம்
கால்சியம்+மெக்னீசியம் 22.67 – 47.6 மி.இக்/100 கிராம்
தாமிரச்சத்து 2 – 9.5 மி.கிராம்/கிலோ
இரும்புச்சத்து 2 – 9.3 மி.கிராம்/கிலோ
துத்தநாகச்சத்து 5.7 – 11.55 மி.கிராம்/கிலோ
கந்தகச்சத்து 128 – 5485 மி.கிராம்/கிலோ
மண்புழு உர சேமிப்பு முறை
அறுவடை செய்யப்பட்ட மண் புழு உரத்தை இருட்டான அறையில் 40 சதவிகித ஈரப்பதத்தில், சூரிய ஒளி படாதவாறு வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் ஈரப்பதம் வீணாவதைத் தடுக்கலாம். மக்கிய உரத்தை பாக்கெட் செய்வதை விட திறந்த வெளியில் சேமிப்பது சாலச் சிறந்ததாகும். திறந்த வெளியில் மக்கிய உரத்தை சேமிக்கும் பொழுது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் நுண்ணுயிர்கள் அழிவதை தடுக்கலாம். 40 சதவிகித ஈரப்பதத்துடன் வைப்பதினால் மண்புழு உரத்தின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம். விற்கும் சமயத்தில் மட்டுமே பைகளில் நிரப்ப வேண்டும்.
மண்புழு உரத்தின் நன்மைகள்
மற்ற மக்கு உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகம்.
மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்களான அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.
இந்த நன்மை தரும் நுண்ணுயிர்கள் காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்புழு உரத்தில் நிலைநிறுத்துகிறது. பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து மண்புழு உரத்தில் நிலை பெறச் செய்கிறது.
கரையாமல் இருக்கும் மணிச்சத்தை கரைத்து கொடுக்கிறது.
திடக்கழிவுகளில் ஏதேனும் நச்சுத் தன்மை கொண்ட பொருட்கள் இருந்தால் அவை மண்புழு வயிற்றுக்குள் செல்லும் பொழுது அவைகளின் குணங்கள் மாற்றப்படுகின்றன.
மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம்
மண்புழு உரம் உபயோகப்படுத்துதல்
ஒரு எக்டேர் நிலத்திற்கு 5 டன் மண்புழு உரம் பரிந்துரைக்கப்படுகிறது. தொட்டில்களில் போடப்படும் மண் கலவையில் மண்புழு உரம் 40 சதவிகிதம் கலக்கப்பட்டு பின்பு தொட்டிகளில் இடப்பட்டு நாற்றுகள் நடப்படுகின்றன. வளர்ந்த மரங்களான தென்னை, வாழை போன்ற மரங்களுக்கு ஒரு மரத்திற்கு 5 கிலோ இடவேண்டும். மண்புழு உரத்தை மண்ணில் இடும் பொழுது, மண்ணின் அடிப்பாகத்தில் இடவேண்டும். மண்ணில் மேல் பரப்பில் இடக்கூடாது. மண்ணின் மேல் பரப்பில் இட்டால், மண்புழு உரத்தில் இருக்கும் நன்மைதரும் நுண்ணுயிர்கள் வெயில்படும் பொழுது இறந்து விடும் நிலை உள்ளது.
மண்புழு உரம் தயாரிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை
சரியான இரக மண்புழுவை தேர்ந்து எடுக்க வேண்டும்.
எல்லா நிலைகளிலும், மண்புழு வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மண்புழுக்கள் தேவைக்கும் அதிகமாக வளர்ந்துவிட்டால், தேவையான அளவுக்கு போக மீதமுள்ள எண்ணிக்கையை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில் இடவசதி இல்லாததால் மண்புழுக்கள் இறந்துவிடும்

Tuesday, 22 July 2014

கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 
2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும்.

Sunday, 20 July 2014

மஞ்சள் காமாலை

பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.


அறிகுறிகள்:
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.
அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.
கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.
வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.
வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.
15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.
ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.
செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.
சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.
அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.
நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.
பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை:
சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.

தவிர்க்க வேண்டியவை:
அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.

முடக்கறுத்தான்

ardiospermum halicacabum
முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்
முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்
முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம் ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும்.




இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம். இது மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம்.
"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-
கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.
முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.
இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.
இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.
இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:
ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.
முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.
குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.
சுகப்பிரசவம் ஆக:
முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.
மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக:
மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.
முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை:
ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.
பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.
சுக பேதிக்கு :
ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.
முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.
முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.
சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.
முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.
முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.
முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.

சோற்றுக்கற்றாழை


சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்



*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி


*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது


*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

பூவரசு

பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர்.

நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது.

இதில் கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.

பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்...

நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

பீர்க்கன் காய்

பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு.

tokado_5உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் லூஃபா அக்யுட்ஆங்குலா (Luffa Acutangula) என்ற வகைப் பீர்க்குதான் எல்லா நாடுகளிலும் பிரபலம்.

பழுத்த பிறகு தான் முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் சளிக் கோளாறுகள் போன்றவை தோன்றும்!

அதனால்தான் கடைகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன.

இதுவும் ஒரு டானிக் காய்கறிதான்!

P1015893100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது.

கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன.

நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இது சத்துணவாகவும் சத்து மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.

முற்றிய பீர்க்கன் காயை மட்டும் சமைத்துண்பதால் மேற்கண்ட நன்மைகள் நமக்குக் கிடைக்கும்.

பீர்க்கன்காய் கொடி இனத்தை சேர்ந்தது. இந்திய விவசாய சமூகம் கண்டுபிடித்துள்ள ‘பூசா கஸ்தார்’ என்னும் ரகம் மிகவும் உயர்வானது.

தமிழ்நாட்டில்தான் அதி நீள உயர் ரகம் பீர்க்கு என்னும் ஓர் ரகம் பயிரிடப்படுகிறது.

இவ்வகைக் காய்கள் 70 முதல் 90 செ.மீ. வரை நீளமானவையாகவும் 200 கிராம் எடை கொண்டனவாயும் இருக்கின்றன. காய்கள் பச்சை நிறத்திலும் காணப்படும்.

100 கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான்.

எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.

Luffa-Ridge-Gourdமுற்றிய பீர்க்கனில் லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது.

நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக்கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.

இதன் பொருட்டே பீர்க்கன் கொடியின் இலைகள், வேர், விதைகள் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையாய்த் திகழ்கின்றன.

புண்ணுக்கு மருந்து!

சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.

stock-footage-tree-angled-gourd-luffa-acutangula-linn-roxbபீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.

பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.

இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.

கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி இதுதான். கசப்புச் சுவை அதிகமாய் இருப்பதால் இதைக் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும்.

தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி!.

மலட்டுத் தன்மையை அகற்றும் முருங்கைக் கீரை !!!!!!!

* முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

* முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது.

* முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

* இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

* முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

* கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

* ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

இறாலின் நன்மைகள்

அசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது.

முக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.ஆனால் அது மீனோடு மட்டும் நின்று விடுவதில்லை.

மீனை போல் இன்னும் பல கடல் உணவுகளினாலும் நமக்கு பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது.

அப்படி ஒரு வகை உணவு தான் இறால்.

நம் விரல் அளவுக்கு கூட இல்லாத, இந்த சிறிய உயிரினத்தில் அப்படி என்ன பயன்கள் உள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

எடை குறைப்பு
இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது.

ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.

வயதான தோற்றத்தை நீக்கும் குணங்கள்
சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

எந்தவித பாதுகாப்பும் இன்றி, சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும், அதன் புறஊதா கதிர்வீச்சுக்கள், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும்.

ஆனால் இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.

இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது.

இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. அதனால் சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும்.

அதனால் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒவ்வொரு வாரமும் இறாலை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இந்த பிரச்சனை மெதுவாக நீங்கும்.

கண் பார்வை சிதைவு
இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும்.

மேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். முக்கியமாக கணினி திரை முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்குநல்ல நிவாரணியாக இருக்கும்.

தலை முடி உதிர்தல்
இறாலில் உள்ள கனிமங்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும்.

ஜிங்க் குறைபாடு இருந்தால், முடி உதிர்தல் ஏற்படும். தலை முடி மற்றும் சரும அணுக்களில் உருவாகும் புதிய அணுக்களை பாதுகாப்பதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால் முடி கொட்டுதல் ஏற்பட்டாலோ அல்லது முடி வளர்ச்சி நின்று போனாலோ இறால்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.

எலும்பு ஆரோக்கியம்
இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.
உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும்.

இது ஆஸ்டியோபோரோசிஸ்என்ற நோய்க்கான அறிகுறியாகும். எனவே உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், எலும்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை நீங்கி, அதற்கு மீண்டும் வலு சேர்க்கும்.

தைராய்டு ஹார்மோன்கள் சுரத்தல்
இறாலில் அயோடின் வளமையாக இருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அது உதவும்.
இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

உணவு அலர்ஜி
கடல் உணவுகளினால், இறால் உட்பட அலர்ஜி ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். புது வகை மீன் அல்லது இறாலை உண்ணும் போது கவனமாக இருங்கள்.

அதே போல் அதிக அளவில் உட்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பல விதமான அலர்ஜிக்கு உள்ளாக நேரிடும்.

சிறுநீரக கோளாறுக்கு மருந்து வாழைத்தண்டு

* சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.


* சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.


* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.


* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும், நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.


* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.


* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம்.


* சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.


* உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.


* உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Photo: சிறுநீரக கோளாறுக்கு அருமையான மருந்து வாழைத்தண்டு. * சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. * சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். * சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. * சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும், நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். * வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. * வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். * சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். * வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. * உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. * உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கைக்குத்தல் அரிசி நன்மைகள்

கைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும். இதில் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை அரிசியைக்காட்டிலும் கைக்குத்தல் அரிசியானது அதிக சுகாதார பலன்களை கொண்டது. கைக்குத்தல் அரிசியை அதன் வெளித்தோலான உமியை நீக்கி பதப்படுத்துவார்கள். வெள்ளை அரிசியில் நீக்கப்படும் பலவாரியான தோல் நீக்கத்தால் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகின்றது. இதனைகாட்டிலும் கைக்குத்தல் அரிசியில் ஊட்டச்சத்து நீங்கிவிடும் வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும். கைக்குத்தல் அரிசியானது நார்ச்சத்தை தக்கவைப்பதால் நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க உதவும் உணவுவகைகளில் இது ஒரு முக்கிய உணவாகும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கைக்குத்தல் அரிசியை ஜீரணிக்க அதிக சக்தி தேவைப்படும். உங்கள் பசியை நீண்ட நேரம் வரை கட்டுக்குள் வைத்து அதிக அளவில் உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும். இந்த கைக்குத்தல் அரிசி ஒரு நாளில் நமக்கு தேவைப்படும் 80%மாங்கனீஸ் அளவை தரக்கூடியது. மேலும் கார்போஹைட்ரேட் மற்றும் ப்ரோடீன் சக்திகளையும் தரக்கூடியது. எல்லா வகை அரிசிகளான பாஸ்மதி, ஜாஸ்மின் மற்றும் சுஷி அரிசிகளிலும் கைக்குத்தல் வகை வந்துள்ளது. இதனால், சராசரியாக அரிசி உட்கொள்ளுபவர்கள் வெள்ளை அரிசியை தவிர்த்து கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தலாம்.

மாங்கனீஸ் நிறைந்துள்ளது

ஒரு கப் கைக்குத்தல் அரிசியில் நமக்கு ஒரு நாளில் தேவைப்படும் 80% மாங்கனீஸ் சக்தியை கொண்டுள்ளது. மாங்கனீஸ் நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட் இருந்து சக்தியைப் பெற்று நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை தொகுத்து கட்டுப்படுத்த உதவுகின்றது.

எடை குறைப்பு
கைக்குத்தல் அரிசியின் முக்கிய சுகாதார பலன் அதில் உள்ள எடைகுறைக்கும் தன்மை தான். அதில் நிறைந்துள்ள நார்ச்சத்து நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைத்து அதனை ஜீரணிக்க அதிக சக்தி தரும். இவை மட்டுமல்லாது நார்ச்சத்து நமது பசியை நீண்ட நேரம் வரை தக்க வைத்து அதிக உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும்.

நல்ல எண்ணெய் வகைகளை நிறைந்துள்ளது
கைக்குத்தல் அரிசியில் நமது உடலுக்கு தேவையான இயற்கை எண்ணைகளை அதிக அளவில் உள்ளது. நமது உடல் சுகாதாரத்திற்கு தேவையான அதிக பலன்களை கொண்டுள்ளது. இந்த நல்ல எண்ணைகளில் உள்ள நல்ல கொழுப்புச்சத்து நமது உடலின் இரத்தகொழுப்பை இயல்பாக்கி கட்டுப்படுத்தும்.

இதயத்திற்கு நல்லது
கைக்குத்தல் அரிசியின் பதபடுத்தலில் அதன் மேல்தோல் மட்டுமே நீக்கப்படுவதால் அதன் தன்மை குறையாமல் முழுதானியமாக இருக்கின்றது. இதன் முழுதன்மையினால் நமது உடலில் அர்டீரியல் பிளேக் உருவாக்குவதிலும் இதய நோய்கள் வாராமல் தடுப்பது மற்றும் அதிக இரத்தகொழுப்பையும் கட்டுப்படுத்தும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்
தற்போது வெளிவந்துள்ள ஆராய்ச்சிகளின் படி, கைக்குத்தல் அரிசியில் அதிக ஆண்டி ஆக்சிடன்ட்கள் தன்மை நிறைந்துள்ளது என உறுதிபடுத்தியுள்ளனர். இதில் உள்ள பைடோநியூற்றிசியன்ட்கள் அதன் முழுதன்மையை தக்கவைகின்றன. கைக்குத்தல் அரிசியில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட்கள் நோய்களை வராமல் தடுத்து வயது மூப்படைதலையும் மெதுவாக்குகின்றது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள மெக்னீஷியம் நமது உடலில் க்ளுகோஸ் இன்சுலின் சுரக்கும் நொதிகள் போன்ற 300 மேலான நொதிகள் உருவாக்க உதவுகின்றது. பதப்படுத்தப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் தரும் கார்போஹைட்ரேட்டுகளை காட்டிலும் கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

எலும்புகளுக்கு நல்லது
கைக்குத்தல் அரிசியில் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் நமது நரம்புகளையும் சதைகளையும் சீராக்குவதற்கும் கால்சியம் தன்மையை சமன் செய்வதற்கும் உதவுகின்றது. மெக்னீஷியம் மற்றும் கால்சியம் நமது எலும்புகளுக்கு இன்றியமையாதது. நமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு மெக்னீஷியம் எலும்புகளில் உள்ளது.

குழந்தைகளின் உணவு
கைக்குத்தல் அரிசியில் இயற்கை சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த முதல் உணவாக இருக்கின்றது. வளர்ந்து வரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவைப்படும். கைக்குத்தல் அரிசியானது குழந்தைகளிடையே ஆஸ்துமா நோயை 50% வரை கட்டுப்படுத்தியுள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

நந்தியா வட்டை

தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவபயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம்.
இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களிலும் உதவுகிறது.
இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.

நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்குவி, கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.

வெங்காயம்

பொதுவாக சமையைலில் பயன்படுத்தப் படும் வெங்காயத்தின் மிகக் கடினமான உட்பகுதி அடுக்கை அடையும் வரை அதன் தோலை உறித்து எறிந்து விடுவது வழக்கம்!.

ஆனால் இன்றிலிருந்து இப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்! ஏனெனில் வெங்காயத்தின் தோலுக்கு இரத்த அழுத்தத்தைப் போக்கும் சக்தியும் உண்ணக் கூடாது எனத் தவிர்க்கும் அதன் வெளிப்புறத் தோல் அடுக்குகளுக்கு இரத்தக் குழாய் அடைப்புக்களை நீக்கும் சக்தியும் உண்டென புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

மேலும் வெங்காயம் உலகில் விலை குறைந்த உணவாகவும் அதே நேரம் மிக அரிதான இத்தகைய மருத்துவ குணங்களும் அதற்கு உண்டு என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் மிக முக்கிய சத்துக்களைக் கொண்ட பழங்கள் மற்றும் மரக்கறிகளில் இருந்து பூரண பலனைப் பெறுவதில்லை எனவும் அவற்றின் தோல் மற்றும் முக்கிய பாகங்களை நீக்கி எறிந்து விடுவதாகவும் குறித்த நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்வாறு நாம் வீசி விடும் உணவுப் பொருட்களில் வெங்காயத் தோலுடன் முலாம்பழப் பட்டை (melon rind) மற்றும் ஆரெஞ்ச் பழத்தின் தோல் ஆகியவை முக்கிய உடல் நலத்துக்குத் தேவையான சத்துக்களைக் கொண்டிருப்பவை என்றும் கூறப்பட்டுள்ளது.

இவெங்காயத் தோலில் அடங்கியுள்ள quercetin என்ற பதார்த்தம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது என்பதுடன் அழற்சி எதிர்ப்பு உடையவையும் ஆகும். இதைவிட வெங்காயத்தின் இலையான வெங்காயத் தாளும் விட்டமின் C, பெனோலிக்ஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற (antioxidants) தன்மை உடையதாகும். இந்த antioxidants பதார்த்தம் புற்று நோய், இதய நோய் என்பவற்றுக்கு எதிராகப் போராடும் தன்மை மட்டுமன்றி வயதாவதையும் குறைக்கும் தன்மை உடையவை எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

உடல் பருமன் சுலபமாக குறையும் முறை


நமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரும் முறைகளை பற்றி பார்போமா..


உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்...
1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.
காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

Saturday, 19 July 2014

சிறுதானியங்கள்

 உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதற்கு காரணம் மாறி வரும் உணவுப் பழக்கம் தான். இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறி விட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர்.
கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால் தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை..கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும் வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும். இது தாய்மார்களுக்கும் பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கவல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுபுண்னை ஆற்றும் வாய் துர்நாற்றத்தை போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. தானியங்களில் அதிக சத்துமிக்க கேழ்வரகு ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது, உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர்ச்சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம், கேழ்வரகை கொண்டுதான் ராகிமால்ட் தயாரிக்கிறார்கள்.
நாம் உன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி, என பல வகை உள்ளது. புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும், இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.
சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்ப நிலை, வாத நோய்களை போக்கவல்லது. பசியை ஊக்குவிக்கும் ஈக்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா. மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா, போன்றவை மருத்துவ குணம் போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை.
அரிசியை விட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. கோதுமையில், புரதம், சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் நியாசிக் போன்றவை பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது. எண்ணெய், நெய்விடாத சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும். குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி . நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.
நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்னை ஆற்றும். இருமலைத் தணிக்கும் எலும்புகளுக்கு உறுதி தரும்

Friday, 18 July 2014

சப்போட்டா பழம்


வெப்பமண்டல கனிகளில் பரவலாக சாப்பிடப்படும் பழவகை சப்போட்டா. தித்திப்பான சுவை கொண்ட இது அதிக ஆற்றல் தரக்கூடியது. பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை அடக்கியது. மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது சப்போட்டா.
மெக்சிகோ, பெலிசி போன்ற பகுதி மழைக்காடுகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. சப்போட்டா அதிக ஆற்றல் தரக்கூடியது.
100 கிராம் பழத்தில் 83 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. நிறைந்த நார்ச்சத்து கொண்டது சப்போட்டா. 100 கிராம் பழத்தில் 5.6 கிராம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது.
மேலும் சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளை குணமாக்கும் என்பது நல்ல செய்தி. சப்போட்டாவில் உள்ள நார்ப்பொருட்கள் புற்று நோயை உருவாக்கும் விஷப் பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது.
டேனின் எனப்படும் சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் சப்போட்டாவில் உள்ளது. (காயாக இருக்கும்போது வெளிப்படும் கசப்புத்தன்மை கொண்ட பால்போன்ற வேதிப்பொருள் தான் டேனின் ஆகும்) இது வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளிடம் இருந்து உடலுக்கு எதிர்ப்பாற்றல் வழங்கக் கூடியது.
உடல் எரிச்சலில் இருந்து விடுவிக்கும் திறன் கொண்டது. வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு போன்றவை வராமல் காக்கும். மூல வியாதிக்கும் எதிர்ப்பாற்றல் கொண்டது. குடல், இரைப்பை போன்ற உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து காக்கும் திறன் கொண்டது டேனின்.
சிறந்த அளவில் வைட்டமின்-சி சப்போட்டா பழத்தில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 24.5 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவு 'வைட்டமின்-சி' கிடைக்கிறது. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை நீக்குவதிலும், நோய்த் தொற்று ஏற்படாமல் காப்பதிலும் 'வைட்டமின்-சி'யின் பங்கு மகத்தானது.
அத்தியாவசிய வைட்டமின் ஆன, வைட்டமின்-ஏ குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. இது சருமம் மற்றும் செல் சவ்வுகள் சிறப்பான வளர்ச்சி பெற உதவும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் வழங்கும்.
புத்துணர்ச்சி மிக்க சப்போட்டாப் பழத்தில் பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும்,போலேட், நியாசின், பான்டோதெனிக் ஆசிட் போன்றவையும் உள்ளன. இவை வளர்ச்சிதை மாற்றச் செயல்களிலும், நொதிகளின் செயல்பாட்டிற்கு துணை புரிவதிலும் பங்கெடுக்கின்றன

Wednesday, 16 July 2014

கண்ணுக்கு புலப்படாத வானுயர்ந்த கட்டிடம்



தென் கொரியாவில் விரைவில் கட்டப்பட இருக்கும் கட்டிடம் தான் Tower Infinity.இந்த வானுயர்ந்த கட்டிடத்தின் சிறப்பு ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் இந்த கட்டிடம் இருப்பதே கண்ணுக்கு தெரியாது.
இந்த Invisible விளைவை ஏற்படுத்த நவீன LED தொழில்நுட்பம் இந்த கட்டிடத்தில் பயன்படுத்தப்பட உள்ளது.இந்த கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் தென் கொரிய அரசு வழங்கி விட்டது. விரைவில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும் போது உலகின் முதல் Invisible Skyscraper என்ற சிறப்பை பெறும்.

link 

Monday, 14 July 2014

மாத்தூர் தொட்டிப் பாலம்



மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இது தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது. இது திருவட்டாரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதற்கு 15 கி.மீ அருகாமையில் குளித்துறை இரயில் நிலையம் அமைந்துள்ளது. 70 கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் இரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்தியாவின் தென்முனையாகிய கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் உள்ளது. இவ்வூர் குழித்துறை இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலையிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 70 கி.மீ. தொலையிலும் அமைந்திருக்கிறது.

இந்த பாலமானது வறட்சியை தீர்பதற்காக அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கு.காமராசு அவர்களால் 1962ம் ஆண்டு கட்டத்தொடங்கப்பட்டு 1969ல் முடிக்கப்பட்டது. இந்த பாலம் ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு நீரை எடுத்துச் செல்கிறது.

இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது.

தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.
மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.

1962 ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது இந்தப்பாலம் நாகர்கோவிலில் இருந்து 45 (கி.மீ.) தூரத்திலும் திருவட்டாறிலிருந்து 3 (கி.மீ.) தூரத்திலும் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இங்கு செல்லலாம்.

Monday, 7 July 2014

பிரமாண்ட மால் முழு ஏசி நகரம் துபாய் அரசு முடிவு

துபாய்: உலகின் மிகப்பெரிய வணிக மையம், கேளிக்கை பூங்கா, ஹோட்டல், மருத்துவமனைகள், தியேட்டர்களை உள்ளடக்கிய முற்றிலும் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட நகரம் உருவாக்கப்படும் என துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அறிவித்துள்ளார். துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா 163 மாடிகளுடன் 828 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 37 மாடிகளுடன் 192 மீட்டர் உயரம் கொண்ட துபாய் மால் உலகின் முக்கிய வணிக வளாகங்களுள் ஒன்றாக உள்ளது. மேலும், நவீன தொழில் நுட்பத்துடன் காண்போர் வியக்கும் வகையில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உலகின் மிகப்பெரும் வணிக மையத்துடன் முழுவதும் குளிரூட்டப்பட்ட நகரம் அமைக்கப்படும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உலகின் மிகப்பெரிய கேளிக்கை பூங்காவை உள்ளடக்கிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட நகரத்தை நாங்கள் அமைக்க உள்ளோம். 7 கி.மீ நீளம் கொண்ட இந்த நகரத்தில், 44 லட்சம் சதுர மீட்டர் அளவுக்கு வணிக வளாகங்கள் அமைக்கப்படும். அதன் மேல் பரப்பு கண்ணாடிகளால் அமைக்கப்படும். கோடை காலங்களில் அந்த நகரம் முற்றிலும் குளிரூட்டப்படும். குளிர்காலங்களில் கண்ணாடி திறந்து வைக்கப்படும். அனைத்து காலங்களிலும் பல்வேறு நாட்டு மக்களை ஈர்க்கும் சுற்றுலா தலமாக விளங்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

இதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இதற்காகத்தான் நாங்கள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட நகரத்தை கோடை காலத்திற்காக அமைக்க உள்ளோம். மால் ஆஃப் த வேர்ல்டு என்ற பெயரில் நாங்கள் அமைக்க உள்ள வணிக வளாகத்திற்கு, ஆண்டுக்கு 18 கோடி பார்வையாளர்கள் வருவார்கள் என நம்புகிறோம்“ என்று குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப்பெரும் வர்த்தக கண்காட்சியை 2020ம் ஆண்டு துபாய் நடத்த உள்ளது.

Sunday, 6 July 2014

மின்சாரம் தயாரிக்கும் ப்ளூம் பாக்ஸ்

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.
அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.
ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.
இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.
இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.
இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.
அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.