Monday 20 April 2015

துன்பம்


ஒரு அறிவாளி பாட்டி தன்னைச் சூழ
அமர்ந்திருந்தவர்களுக்கு ஒரு நகைச்சுவை கூறினாள்.

அனைவரும் நீண்டநேரம் கைதட்டிச் சிரித்தனர்.
பின்னர் மீண்டும் அவன் அதே நகைச்சுவையை கூறினாள்.
அப்போதும் சிறுவர்கள் பலர் கைதட்டிச்சிரித்தனர்.
மீண்டும் அதே நகைச்சுவையை அவன் சொன்னாள். அப்போது சிலர் மட்டும் சிரித்தனர்.
மீண்டும் அவள் அதே நகைச்சுவையைச் சொன்னபோது எவரும் சிரிக்கவில்லை.
அப்போது அந்த அறிவாளி பாட்டி சொன்னாள் ஒரு நகைச்சுவையை மீண்டும் மீண்டும் சொல்லும்போது தொடர்ந்து உங்களால் சிரித்து மகிழமுடியவில்லை
அல்லவா?
ஆனால் எதற்காக நாம் எல்லோரும்
வாழ்வில் நடந்த ஒரு சில துன்பங்களை மட்டும் மீண்டும் மீண்டும் நினைத்து கவலைப்படுகிறோம்?
இதேபோல ஒரு துன்பதிற்காக வாழ்நாள் முழுவதும் எதற்காக கவலை கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment