Wednesday 4 March 2015

பசுக்கள் மீது இரக்கம் காட்டுவது அவசியமான ஒன்று


பசு ஒரு சாதுவான விலங்கு.அது புல்லை திண்ணும் அல்லது காகிதத்தை தின்னும்! பசு வலிமை குன்றிய மிருகம் கிடையாது.எந்த பசுவும் தனக்கு புல் வேண்டும்,புண்ணாக்கு வேண்டும் என்று மனிதனிடம் கேட்டது கிடையாது.சுதந்திரமாக எங்கோ திரிந்துகொண்டிருந்த விலங்கை பிடித்து,அடிமையாக்கிக்கொண்டு வீட்டு விலங்கு என பெயர் சூட்டியிருப்பது அபத்தமானது.அதை விட அதன் பாலை வன்முறையால் அதனிடமிருந்து கறந்து கூறுபோட்டு பாலித்தின் பாக்கெட்டில் அடைத்து விற்பது கொடுமையானது.இதே போன்று மனிதனிடருந்து எந்த உயிரினமாவது பாலை அபாண்டமாக கவர்ந்து சென்றால் எப்படியிருக்கும்? அதேபோன்றுதான் பசுவிற்கும் இருக்கும்!

ஒரு உயிரை மனிதன் தனது தேவைக்காக கொன்று திண்பது தவறுதான்.அதேவேளையில் அடிமைபடுத்தி தனது கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு,கயிறு போட்டு கட்டி வைத்து கொடுமைபடுத்துவதும் தவறுதான்!
நன்மை செய்யும் விலங்கை நம் தேவைக்கு பயன்படுத்தி விட்டு அதை அடிமாட்டு விலைக்கு விற்பது கொடுமை

No comments:

Post a Comment