கப்பல் படைத்தளபதி ஒருவர் இரவில் மதுபானம் அருந்திவிட்டு கப்பலின் மேல்தளத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அவர் தலைகுப்புறக் கடலில் விழுந்தார்.
அந்தப் படையைச் சேர்ந்த ஒரு வீரன் இதைப் பார்த்தான். அவன் உடனே கடலில் குதித்து தளபதியைக் காப்பாற்றினான்.
மறுநாள் காலையில் தளபதி அந்த வீரனை அழைத்தார். ""என் உயிரைக் காப்பாற்றிய உனக்குப் பரிசு தரப் போகிறேன். என்ன பரிசு வேண்டுமானாலும் கேள்'' என்றார்.
""ஐயையோ எனக்குப் பரிசு வேண்டாம் சார்... இது மற்ற வீரர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் என்னைத் தூக்கிக் கடலில் வீசி எறிந்து விடுவார்கள்'' என்றான் அந்த வீரன்.
No comments:
Post a Comment