Sunday, 15 June 2014

பூமியை நோக்கி வரும் சூரியகாந்த புயல்


பூமியை நோக்கி வரும் சூரியகாந்தப் புயலால், விமான சேவைகள், ராணுவ ரேடியோ, மொபைல் போன், செயற்கைக் கோள் கள் உள்ளிட்ட, ஜி.பி.எஸ்., தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படும்’ என, அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு ஒரு முறை, சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால், கொந்தளிப்பு ஏற்பட்டு, சூரியப்புயல் தோன்றும். மூன்று விதங்களில் சூரியகாந்தப் புயல் தோன்றும். முதலில், மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலை கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்னும் மேற்பரப்பில் தோன்றும், பிளாஸ்மா கதிர்வீச்சும் நிகழும். இந்த கதிர்வீச்சுக்கள், பூமியை நோக்கி வந்தாலும், பூமிக்கு எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படாது. ஆனால், உலக நாடுகள் அனைத்தும், தகவல்தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளன. இந்த செயற்கைக்கோள்களின் உதவியால் தான், பூமியில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புகள் இயங்குகின்றன. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், சூரியனின் வலது மேற்புறத்தில், பிளாஸ்மா புயல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட காந்த அலைகள், பூமியை நோக்கி வருவதை, அமெரிக்காவின் நாசா விண்?வளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த அலைகள், செயற்கைக்கோள்களைக் கடந்து வரும்போது, அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என, அவர்கள் கூறுகின்றனர். மேலும், பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த அலைகள், பூமியின் எந்தப் பகுதியை தாக்கும் என்பது தெரியவில்லை என்றும், இந்த புயலுக்கு, ‘எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
link 

No comments:

Post a Comment