Saturday, 14 June 2014

இதயத்தை பாதுகாக்க கொழுப்பு நிறைந்த உணவை தவிர்க்கவும்


மனித உடலில் இதயம் தான் எல்லாவற்றுக்கும் இதயமாக விளங்குகிறது. ரத்தத்தை பம்ப் செய்து சீராக விநியோகிக்கும் பணி, சுத்தகரிப்பு செய்வது போன்ற பணிகளை செய்கிறது. இதயத்தில் பிரச்னை ஏற்படுவதற்கு காரணம் உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, தவறான உணவுப்பழக்க வழக்கங்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவை தவிர்க்கவும்.
துரித உணவு வகைகளான ஆட்டிறைச்சி , மாட்டிறைச்சி பன்றி இறைச்சி வகைகள், நண்டு, இறால், முட்டை மஞ்சள்கரு, எண்ணெயில் வறுத்த,பொரித்த உணவு வகைகளை இளம் வயதிலிருந்தே குறைத்தால் ஆரோக்கியமான இதயம் நிச்சயம்.
இதயத்தை பாதுகாக்க உடல் எடை, இடைஅதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் 135/85னீனீ பிரீ-க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரத்த பரிசோதனை செய்து கொள்ளவும் புகைப்பிடித்தல்,மது அருந்துதலை தவிர்க்கவும்.
உணவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள், முளைக்கட்டிய பயறு வகைகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். யோகா,தியானம் போன்ற பயிற்சிகளை கற்றுக் கொண்டு தினமும் செய்யவும். உடற்பயிற்சியை தொடர் பயிற்சியாக்கி ஆரோக்கியமான இதயத்துக்கு வழி வகுத்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment