1. வாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும், ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்தது.
2. உப்பு பாத்திரத்தில் ஈரம் சேர்ந்துவிட்டால் அதில் சிறிதளவு அரிசியை
போட்டுவிடவும், கட்டி கட்டிகளாக இருக்கும் உப்பு முன்பிருந்த மாதிரி
மாறிவிடும்.
3. ஆம்லேட் செய்ய
முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோள மாவு சேர்த்தால்
ஆமலேட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும்
இருக்கும்.(விருந்தினர் வரும்போது சிக்கனம் கூடுதல் சுவை)
4.
கொத்தமல்லி மற்றும் புதினா நீண்ட காலத்திற்கு வாடாமல் இருக்க, அவற்றை
அலுமினியம் ஃபாயில் ( Aluminium Foil) சுற்றி குளிர்சாதன பெட்டியில்
வைக்கவும்.
5. எலுமிச்சம் பழம் மிக கடினமாக மாறிவிட்டால், அவற்றை
பிழிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் வெதுவெதுப்பான நீரில் போட்டுவிடவும்,
இவ்வாறு செய்தால் எலுமிச்சம் பழம் புதிதுபோல் ஆகிவிடும்.
No comments:
Post a Comment