Friday, 28 June 2013

பியோக்ளிடசோன் மாத்திரைகள் இந்தியாவில் விற்கத் தடை

அனால்ஜின், நோவால்ஜின் உட்பட சர்க்கரை நோய்க்கான பியோக்ளிடசோன் மாத்திரைகள் இந்தியாவில் விற்கத் தடை விதித்துள்ளது மத்திய அரசு!

1977ம் ஆண்டே இந்த மாத்திரைக்கு அமேரிக்கா தடை விதித்துவிட்டது!

இந்த மாத்திரையால் ஏற்படும் தீங்கு காரணமாக, இவற்றை தங்கள் நாட்டில் தடை செய்யத் தவறியதற்காக கொரிய உணவு மற்றும் மாத்திரைகள் நிர்வாக ஆணையர் ஷிம் சாங்-கூ சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்!

நமது அண்டை நாடான நேபாளத்தில் கூட இந்த மாத்திரை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது!

விலங்குகளுக்கு கூட இந்த மாத்திரை மற்றும் மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்கா 1995ம் ஆண்டில் தடை விதித்துள்ளது!

இந்தியாவில் ஆயிரக்கணக்கானவர்கள் Bone Marrow Depression உருவாக்கும் இந்த மாத்திரையை இன்னும் வலி நிவாரணியாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனராம்!

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட, சில மருந்துகள் தொடர்ந்து இந்தியாவில் விற்பனையில் உள்ளது எப்படி?

பிரிட்டனால் தடை செய்யப்பட்டு இன்னும் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மற்றொரு மாத்திரை Cisapirde. இந்த மாத்திரையை சாப்பிடு வதால் முறையற்ற, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டு பலர் மரணம் அடைய நேரிடுமாம்!


சில மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட, பரவலாக உபயோகிக்கப்படும் சர்க்கரை நோய்க்கான பியோக்ளிடசோன், வலி நிவாரணியான அனால்ஜின், மன சோர்விற்கான டீன்சிட் ஆகிய மூன்று மருந்துகளையும் தடை செய்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. மருந்து உற்பத்தியாகும் அதன் சொந்த நாட்டிலேயே தடை செய்யப்பட்டால், உடனடியாக அம்மருந்தினை இந்தியாவிலும் தடை செய்ய வேண்உம் என்பது நமது சட்ட விதிமுறைகளில் ஒன்று. அந்த வகையில், அவற்றை முற்றிலுமாக தடை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு.

உலக அளவில் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் இந்தியாவில் தங்கு தடையின்றிவிற்கப்படுகின்றன என்ற ஒரு பட்டியல் வெளியானது. அதில் நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள ஆக்ஷன் 500-ல் ஆரம்பித்து, நமக்குள்இரண்டறக் கலந்து விட்ட காய்ச்சல் - தலைவலி மாத்திரைகள் பலவும்தான் அந்தப்பட்டியலில் முதல் வரிசையில் நின்றன!“ இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்ப்பு, சிறுநீரகபாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல பக்க விளைவுகளைக் கொண்டிருப்பதால்தான்பெரும்பாலான உலக நாடுகள் அவற்றைத் தடை செய்துள்ளன!\

உலக நாடுகள் வெகு நாட்களுக்கு முன்பே தடை செய்த பின்பும் இந்தியாவில் விற்பனையில் இருந்த இந்த மாத்திரைகள் இப்போதுதான் தடை செய்யப்படுகின்றன.

பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா?
1 . அனால்ஜின் ( Analgin)
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
2 . நிமிசுலைட் (Nimisulide)
பயன்பாடு - வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு - கல்லீரல் செயல் இழப்பு
3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine )
பயன்பாடு - சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு - மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்
4 . சிசாபிரைடு ( cisapride )
பயன்பாடு - மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்து
பக்க விளைவு - இதயத் துடிப்பு சீர்கேடு
5 . குயிநோடக்ளர் (quinodochlor )
பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு - கண்பார்வை பாதிப்பு
6 . பியுரசொளிடன் (Furazolidone )
பயன்பாடு - வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – புற்றுநோய்
7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone )
பயன்பாடு - கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு – புற்றுநோய்
8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone )
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு
9 . பைப்பரசின் ( Piperazine )
பயன்பாடு - வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு - நரம்புச் சிதைவு
10 . பினப்தலின் (Phenophthalein )
பயன்பாடு - மலமிலக்கி
பக்க விளைவு – புற்றுநோய்
சரி, இந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா
1 . அனால்ஜின் - Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் - D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் - Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் - Entero quinol

No comments:

Post a Comment