Sunday, 1 March 2015

உடலில் சூட்டிலிருந்து விடுதலை பெற இயற்கை வழிகள்.!


உடல் சூட்டால் அவதிப் படுபவர்கள் பன்னீர் ரோஜாப்பூ இருபது எடுத்து அதன் இதழ்களை மட்டும் பிரித்து எடுத்து தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள் .
அதனை ஒரு சில்வர் டப்பாவில் போட்டு விட்டு ,பத்து
ஏலக்காயைத் தோலுடன் அம்மியில் நசுக்கி ரோஜா
இதழ்களுடன் கொட்டி விட வேண்டும் .

அதன் பின்பு நூறு கிராம் சர்க்கரையைக் கொட்டி விட்டு அதனுடன் 250 மி.லி தேன் ஊற்றவும்.
நன்கு கிளறி அந்த டப்பாவை மூடியால் மூடவும்.
நாற்பத்தொரு நாள் வரை அப்பிடியே விடவும்.
42 - ம் நாள் முதல் தினமும் உணவு அருந்திய பின்பு காலை , மதியம் , இரவு என மூன்று வேளையும்
மூன்று தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு விலகி விடும்.

No comments:

Post a Comment