உணவு பொருட்கள், தேநீர், காபி போன்றவை பரிமாறப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் பாத்திரங்களின்
தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருளில் புற்று நோய் பாதிப்பு
ஏற்படுத்தக்கூடிய தன்மை உள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகளின்
தயாரிப்பில் ஸ்டைரென் என்னும் வேதிப்பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது. இது
குறித்து அண்மையில் அமெரிக்காவின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட
ஆராய்ச்சியின் முடிவில், ஸ்டைரென் என்னும் இந்த வேதிப்பொருள் மனிதர்களுக்கு
புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலை வெளியிட்ட அமெரிக்க தேசிய ஆய்வு அமைப்பு, 'வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளை சேர்ந்த 10 நிபுணர்கள் பங்கேற்ற ஆய்வில், ஸ்டைரென் மனிதர்களிடையே புற்றுநோயை உண்டாக்க கூடிய தன்மையை கொண்டிருக்கிறது என்று தெரியவந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment