Friday, 10 May 2013

ஹிட்லர்

இரண்டாம் உலகப் போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கும் காரணமாக இருந்த ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கை ஒரு சாமான்யனின் பாதையை திருப்பி போடக் கூடியது…

ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நடந்த ஒவ்வொரு விஷயங்களும், அவரின் இறுதி சாசனமும் ஆச்சரியத்துக்குரியவை…

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி அதன் நேச நாடுகளின் ‘கை’ யே ஓங்கியிருந்தது. ஆனால், போரில் ரஷ்யாவும், அமெரிக்காவும் குதித்தபின் நிலைமை மாறியது. ஜெர்மனியின் தலை நகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து அதில் ஹிட்லர் தங்கியிருந்தார். பாதாள அறையின் கூரை மட்டும் 16 அடி இரும்பும், சிமெண்டும் கொண்டு கட்டப்பட்டது.

1945 ஜனவரி16 முதல் அதில் அவர் தங்கியிருந்தார். அவரின் காதலி ஈவா பிரவுனும் அவருடன் தங்கிருந்தார். 1945 ஏப்ரல் 25 அன்று பெர்லின் நகரை ரஷிய படைகள் சூழ்ந்துக் கொண்டு தாக்க ஆரம்பித்தன.

எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.

தன் முடிவை காதலி ஈவாவிடம் தெரிவித்தார். “வாழ்விலும், சாவிலும் உங்களுடன் தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்துகொள்வேன்” என்றாள். காதலியின் உண்மையான அன்பைக் கண்டு ஹிட்லர் நெகிழ்ந்து போனார். “ஈவா! உன் அன்பு என்னை பிரமிக்க செய்கிறது. நீ என்னிடம் எது வேண்டுமோ கேள் தருகிறேன்” என்றார். “இதுவரை உங்கள் காதலியாக இருந்த நான், உங்கள் மனைவியாக சாக வேண்டும். இதுதான், என் கடைசி ஆசை” என்றாள் ஈவா.

ஏப்ரல் 27-ம் தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி அறையில் விருந்து நடந்தது. மறுநாள், 28-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது.
அன்று காலையிலேயே தன் அறையை அலங்கரிக்குமாறு உதவியாளர்களுக்கு உத்தரவிட்டுருந்தார். பிறகு விருந்து நடந்தது. மற்றவர்கள் மது அருந்த, ஹிட்லர் தேநீர் மட்டும் அருந்தினார். 29-ம் தேதி தன் உயிலை எழுதும்படி மனைவி ஈவாவிடம் கூறினார். அதில் அவர் கூற, ஈவா எழுதிய உயில் வருமாறு:

“வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருந்து என் இன்ப-துன்பங்களில் பங்கு கொண்ட ஈவாவை என் வாழ்வின் கடைசி கட்டத்திலாவது மணந்து கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தேன் அதன்படி மணந்து கொண்டேன். நாங்கள் இறந்த பிறகு, எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 ஆண்டு காலமாக பாடுபட்டு வந்தேனோ, அந்த மண்ணிலேயே என்னையும், ஈவாவையும் எரித்து விட வேண்டும். இதுவே என் கடைசி ஆசை. என் சொத்துக்கள் எல்லாம் எனக்கு பிறகு சேரவேண்டும். கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்கு சேரவேண்டும்” -இதுவே ஹிட்லரின் உயில்.

அன்று மாலையில் ஒரு கூட்டத்தை கூட்டினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

“ஜெர்மனி நாட்டு மக்கள் எப்போது போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சமும் கிடையாது. சமாதானத்தையே விரும்புகிறேன். போருக்கு காரணம் நானல்ல யூதர்கள் தான். ஜெர்மனி நாட்டு மக்களின் வீரத்திற்கும், தேசபக்திக்கும் இந்தப் போர் சிறந்த உதாரணம். இந்த போரில் நான் இறக்க நேர்ந்தால் மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவுவேன். ஒருபோதும் எதிரிகளின் கையில் சிக்கி அவமானம் அடைய மாட்டேன். இது உறுதி” இவ்வாறு ஹிட்லர் கூறினார்.

பின்னர் இறுதி சாசனம் ஒன்றை எழுதி நாட்டு மக்களுக்கு சமர்பித்து கையெழுத்திட்டார். 30-ம் தேதி இரவு 9 மணி ”இத்தாலி சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் புரட்சிகாரர்களால் கொல்லப்பட்டனர்” என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை தந்தது. அன்றிரவு 12 மணி. பெர்லின் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும் சூரணம் தகர்க்கப் படலாம் என்றும் ஹிட்லருக்கு தகவல் கிடைத்தது.

ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து தன் தோழர்களுடன் கைகுலுக்கினார். பிறகு, தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, “நானும், ஈவாவும் ஒன்றாக இறந்து விடபோகிறோம். நாங்கள், இறந்த பின்னர், எங்கள் உடல்களை ஒரு போர்வைக்குள் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், உடைகள், டைரிகள், என் பேனா, கண்ணாடி முதலியவற்றையும் சேர்த்து எரித்து விடுங்கள்” என்று கூறி விட்டு தன் மனைவியுடன் அறைக்கு சென்றார்.

அறைக் கதவு தாழிடப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஹிட்லரும், ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்கு தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

அங்கே அவர்கள் கண்ட காட்சி:

ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்பு தான் தன்னை சுட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழே அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஹிட்லர் துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால் தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள்.

ஹிட்லரின் வலதுகரம் ஒரு போட்டோவை அணைத்துக் கொண்டிருந்தது, அது அவரின் அம்மாவின் படம். தாயின் மீது ஹிட்லர் வைத்திருந்த பாசத்தைக் கண்டு அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகிருந்தாள், மனைவி ஈவா. அவளின் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது. ஹிட்லர் மற்றும் ஈவா உடல்களை கம்பளி போர்வையில் சுற்றினார்கள். பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு எரித்து சாம்பலாக்கினார்கள்.

சில மணி நேரம் கழித்து வந்த ரஷிய படைகள் ஹிட்லரை காணமல் திகைத்துப் போயினர். அவர், தற்கொளை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நம்பியவர்கள் ஏராளம்!!!!!

ஹிட்லர் கொடியவராக இருந்தாலும், ஆச்சரியபடத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மாமிசம் சாப்பிடமாட்டார். புகை பிடிக்க மாட்டார்…

“ஹிட்லரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் நிறைய உண்டு….கற்றுக்கொள்ள கூடாத விஷயங்களும் நிறைய உண்டு

No comments:

Post a Comment