Friday, 10 May 2013

வெள்ளரி மருத்துவ பயன்கள்

1. காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும்கலோரி 18தான்.

2. விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்;பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

3. வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

4. இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

5. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.

6. ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம்,ஆந்திரசமையலில் காரம் அதிகம். 100கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு,மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம்,பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின்‘சி’யும் சிறிதளவுஉண்டு.

7. சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக்கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக்காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.

8. இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது.

9. வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றன. எனவே,வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

10. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும்.

11. காலராநோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.

12. வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

13. தினமும் மிகச்சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக் காய்த்துண்டுகளை நறுக்கிப் போடவும்.அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி,முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டுவைத்து வெஜிடேபிள் சாலட் போல் பரிமாற வேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச் செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ச்செய்யும்.

14. இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

15. மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.

16. முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்,வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில்பூசவேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்கவேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

17. நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.

18. முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும்.வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு, இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு,பச்சடிக் கீரைச் சாறு போன்ற வற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.

19. காரட்கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில் தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.

20. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ்ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமயமலைப் பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.

21. ஜமைகாநாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம்பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். பிரிஸ்ஜில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக்காய் களை பயன்படுத்தலாம்.

22. வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.

23.செரித்தல் அதிகம் ஏற்படுவதால் பசி அதிகமாகும். வெள்ளிரியை உண்பதால் 'பசிரசம்' எனும் ஜீரண நீர் சுரக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இது மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைக் குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளிரிக்கு உண்டு.

24.வெள்ளிரிப் பிஞ்சை உட்கொண்டால் மூன்று தோசமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன. புகை பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரளிக்கின்றது .அதையும் போக்க வல்லது. மூளைக்குக் கபால சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டி புத்துணர்ச்சி தரும்.

25. கபம், இருமல், நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்லதல்ல.

நெருப்பு நெருங்காத மரம்

காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் 

எதனையும் விட்டு-வைப்பதில்லை என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், 

நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை 

அமையப்பெற்ற மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் 

மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.



ரொடோடென்ரன் (Rhododendran) என்ற-ழைக்கப்படும் இந்த மரத்தின் அருகில் 


நெருப்பு சென்றால், பல அடுக்குகளாக அமைந்துள்ள இதன் 

பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கி-விடும். இதனால் இம்மரத்திற்கு 

நெருப்பினால் அழிவு ஏற்படாது.

பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இம்மரங்கள் 


பறவைகளைக் கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் 

வாசஸ்தலமாக 

விளக்குகின்றன. பலத்த காற்றி-னையும் தாங்கக் கூடிய உறுதி 

படைத்தனவாகவும் திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற 


மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் சாறு மருத்துவத் தன்மை கொண்டது.

தமிழில் காட்டுப் பூவரசு எனவும் நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி 


எனவும் அழைக்கப்-படுகிறது. இம் மலர்கள் போரஸ் என்று பூர்வீகக் 

 குடிகளான தோடர் இனத்தவரால் அழைக்கப்-படுகின்றன. மேற்குத் 

தொடர்ச்சி மலைப்பகுதி-களில் (நீலகிரி, ஆனைமலை, பழனி, மேகமலை)

 கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர் உயரத்-திற்கும் அதிகமான 

பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்-துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் 

என்றும் இதனை அழைக்கலாம்.

இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து


ஆகிய நாடுகளிலும் ரொடோடென்ரன் மரங்கள் காணப்படுகின்றன.

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?



அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்...

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.இதற்கு

1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.

3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Clickto Activate my Spypig” என்பதைச் சொடுக்குங்கள்.

4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீதுசுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)” சொடுக்கி copy செய்யவும்.

5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.

நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

ஹிட்லர்

இரண்டாம் உலகப் போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கும் காரணமாக இருந்த ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கை ஒரு சாமான்யனின் பாதையை திருப்பி போடக் கூடியது…

ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நடந்த ஒவ்வொரு விஷயங்களும், அவரின் இறுதி சாசனமும் ஆச்சரியத்துக்குரியவை…

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி அதன் நேச நாடுகளின் ‘கை’ யே ஓங்கியிருந்தது. ஆனால், போரில் ரஷ்யாவும், அமெரிக்காவும் குதித்தபின் நிலைமை மாறியது. ஜெர்மனியின் தலை நகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து அதில் ஹிட்லர் தங்கியிருந்தார். பாதாள அறையின் கூரை மட்டும் 16 அடி இரும்பும், சிமெண்டும் கொண்டு கட்டப்பட்டது.

1945 ஜனவரி16 முதல் அதில் அவர் தங்கியிருந்தார். அவரின் காதலி ஈவா பிரவுனும் அவருடன் தங்கிருந்தார். 1945 ஏப்ரல் 25 அன்று பெர்லின் நகரை ரஷிய படைகள் சூழ்ந்துக் கொண்டு தாக்க ஆரம்பித்தன.

எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.

தன் முடிவை காதலி ஈவாவிடம் தெரிவித்தார். “வாழ்விலும், சாவிலும் உங்களுடன் தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்துகொள்வேன்” என்றாள். காதலியின் உண்மையான அன்பைக் கண்டு ஹிட்லர் நெகிழ்ந்து போனார். “ஈவா! உன் அன்பு என்னை பிரமிக்க செய்கிறது. நீ என்னிடம் எது வேண்டுமோ கேள் தருகிறேன்” என்றார். “இதுவரை உங்கள் காதலியாக இருந்த நான், உங்கள் மனைவியாக சாக வேண்டும். இதுதான், என் கடைசி ஆசை” என்றாள் ஈவா.

ஏப்ரல் 27-ம் தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி அறையில் விருந்து நடந்தது. மறுநாள், 28-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது.
அன்று காலையிலேயே தன் அறையை அலங்கரிக்குமாறு உதவியாளர்களுக்கு உத்தரவிட்டுருந்தார். பிறகு விருந்து நடந்தது. மற்றவர்கள் மது அருந்த, ஹிட்லர் தேநீர் மட்டும் அருந்தினார். 29-ம் தேதி தன் உயிலை எழுதும்படி மனைவி ஈவாவிடம் கூறினார். அதில் அவர் கூற, ஈவா எழுதிய உயில் வருமாறு:

“வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருந்து என் இன்ப-துன்பங்களில் பங்கு கொண்ட ஈவாவை என் வாழ்வின் கடைசி கட்டத்திலாவது மணந்து கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தேன் அதன்படி மணந்து கொண்டேன். நாங்கள் இறந்த பிறகு, எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 ஆண்டு காலமாக பாடுபட்டு வந்தேனோ, அந்த மண்ணிலேயே என்னையும், ஈவாவையும் எரித்து விட வேண்டும். இதுவே என் கடைசி ஆசை. என் சொத்துக்கள் எல்லாம் எனக்கு பிறகு சேரவேண்டும். கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்கு சேரவேண்டும்” -இதுவே ஹிட்லரின் உயில்.

அன்று மாலையில் ஒரு கூட்டத்தை கூட்டினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

“ஜெர்மனி நாட்டு மக்கள் எப்போது போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சமும் கிடையாது. சமாதானத்தையே விரும்புகிறேன். போருக்கு காரணம் நானல்ல யூதர்கள் தான். ஜெர்மனி நாட்டு மக்களின் வீரத்திற்கும், தேசபக்திக்கும் இந்தப் போர் சிறந்த உதாரணம். இந்த போரில் நான் இறக்க நேர்ந்தால் மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவுவேன். ஒருபோதும் எதிரிகளின் கையில் சிக்கி அவமானம் அடைய மாட்டேன். இது உறுதி” இவ்வாறு ஹிட்லர் கூறினார்.

பின்னர் இறுதி சாசனம் ஒன்றை எழுதி நாட்டு மக்களுக்கு சமர்பித்து கையெழுத்திட்டார். 30-ம் தேதி இரவு 9 மணி ”இத்தாலி சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் புரட்சிகாரர்களால் கொல்லப்பட்டனர்” என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை தந்தது. அன்றிரவு 12 மணி. பெர்லின் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும் சூரணம் தகர்க்கப் படலாம் என்றும் ஹிட்லருக்கு தகவல் கிடைத்தது.

ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து தன் தோழர்களுடன் கைகுலுக்கினார். பிறகு, தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, “நானும், ஈவாவும் ஒன்றாக இறந்து விடபோகிறோம். நாங்கள், இறந்த பின்னர், எங்கள் உடல்களை ஒரு போர்வைக்குள் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், உடைகள், டைரிகள், என் பேனா, கண்ணாடி முதலியவற்றையும் சேர்த்து எரித்து விடுங்கள்” என்று கூறி விட்டு தன் மனைவியுடன் அறைக்கு சென்றார்.

அறைக் கதவு தாழிடப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஹிட்லரும், ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்கு தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

அங்கே அவர்கள் கண்ட காட்சி:

ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்பு தான் தன்னை சுட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழே அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஹிட்லர் துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால் தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள்.

ஹிட்லரின் வலதுகரம் ஒரு போட்டோவை அணைத்துக் கொண்டிருந்தது, அது அவரின் அம்மாவின் படம். தாயின் மீது ஹிட்லர் வைத்திருந்த பாசத்தைக் கண்டு அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகிருந்தாள், மனைவி ஈவா. அவளின் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது. ஹிட்லர் மற்றும் ஈவா உடல்களை கம்பளி போர்வையில் சுற்றினார்கள். பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு எரித்து சாம்பலாக்கினார்கள்.

சில மணி நேரம் கழித்து வந்த ரஷிய படைகள் ஹிட்லரை காணமல் திகைத்துப் போயினர். அவர், தற்கொளை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நம்பியவர்கள் ஏராளம்!!!!!

ஹிட்லர் கொடியவராக இருந்தாலும், ஆச்சரியபடத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மாமிசம் சாப்பிடமாட்டார். புகை பிடிக்க மாட்டார்…

“ஹிட்லரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் நிறைய உண்டு….கற்றுக்கொள்ள கூடாத விஷயங்களும் நிறைய உண்டு

Thursday, 9 May 2013

பூமியில் காலடி பதிக்க முடியாத இடம்

சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.

நுனோ கோம்ஸ்
இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை.

ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. நீருக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல.

ஸ்குபா அணிந்து நீச்சல்
எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான சிகரங்கள் அனைத்தையும் மனிதன் வென்றிருக்கிறான். மனிதனின் காலடி படாத பாலைவனங்கள் கிடையாது. உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற தென் துருவத்தை எட்டியிருக்கிறான். வட துருவத்தையும் விட்டு வைக்கவில்லை. சந்திரனுக்கும் சென்று வந்திருக்கிறான். ஆனால் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் உண்டென்றால் அது கடலடித் தரையாகும்.

விண்வெளி வீரர் போல மிகப் பாதுகாப்பான உடை அணிந்து கடலில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் யாரேனும் போய் நிற்க முடியுமா என்றால் அது ஒரு போதும் சாத்தியமில்லை. ஒரே கணத்தில் பற்பசை டியூப் போல நசுக்கப்பட்டு மடிந்து போவார். கடலுக்கு அடியில் அந்த ஆழத்தில் அழுத்தம் மிக பயங்கரமான அளவில் இருக்கும்.

தரையில் நாம் காற்றின் எடையைச் சுமந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். காற்றுக்கு எடை உண்டு. அது நம்மை ஒரு சதுர செண்டிமீட்டருக்கு ஒரு கிலோ வீதம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கிறது. இதை ஒரு மண்டல் அழுத்தம் என்று குறிப்பிடுகின்றனர்.

கடலுக்குள் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் நம் தலைக்கு மேலே உள்ள அத்தனை தண்ணீரும் சேர்ந்து நம்மை அழுத்தும். அத்துடன் நம்மைச் சுற்றிலும் உள்ள தண்ணீரின் எடையும் சேர்த்து நம்மை அழுத்தும். அந்த அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதை விட இரண்டு மடங்காக இருக்கும். 20 மீட்டர் ஆழத்துக்குச் சென்றால் அழுத்தம் மூன்று மடங்காகி விடும். 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தும் நான்கு மடங்காகி விடும்.

உலகின் கடல்களின் சராசரி ஆழம் நான்கு கிலோ மீட்டர். அந்த ஆழத்தில் அழுத்தம் 400 மடங்காக இருக்கும். ஒருவரைப் படுக்க வைத்து அவர் மீது பல சிமெண்ட் மூட்டைகளை வைத்தால் எப்படி இருக்கும்? கடலில் மிக ஆழத்தில் நிலைமை அதை விட மோசமாக இருக்கும்.

கடல்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ளது. அந்த  இடத்தின் பெயர் மரியானா அகழி (Mariana Trench). அந்த அகழியின் நடுவே தான் உலகிலேயே மிக ஆழமான பள்ளம் உள்ளது. அதன் பெயர் சேலஞ்சர் மடு (Challenger Deep), ஆழம் சரியாக 10,902 மீட்டர். அவ்வளவு ஆழத்தில் அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு. ஆகவே யாராலும் என்றுமே அந்த ஆழத்துக்குப் போய் கடலடித் தரையில் காலடி பதிக்க முடியாது

1960 ஆம் ஆண்டில் இரண்டே இரண்டு பேர் கனத்த உருக்கினால் ஆன ஒரு கோளத்துக்குள் உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடுவில் போய் இறங்கினர். கனத்த பிளாஸ்டிக்கினால் ஆன ஜன்னல் வழியே கடலடித் தரையை சிறிது நேரம் கண்டனர். அதோடு சரி. ட்ரீயஸ்ட் என்னும் பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கு கலத்தின் மூலம் இவ்வாறு சென்றவர்களில் ஒருவர் கடல் ஆராய்ச்சி நிபுணரான ஜாக் பிக்கா, மற்றொருவர் அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ்.

ட்ரீயஸ்ட் நீர் மூழ்கு கலம். அடிப்புறத்தில் அமைந்த
கோளத்தில் தான் இருவரும் இருந்தனர்
கடலில் மிக ஆழத்தில் கடும் அழுத்தம் மட்டுமில்லை - சுமார் 800 மீட்டர் ஆழத்துக்கு கீழே சென்றால் ஒரே காரிருள் சூழ்ந்திருக்கும். தவிர, கடல் நீரானது கடும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படியாக கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவதில் பிரச்சினைகள்.

சிவப்பு வட்டம் - பசிபிக் கடலில்
மரியானா அகழி அமைந்த இடம்
கடந்த பல ஆண்டுகளில் கடல் ஆராய்ச்சித் துறையில் பல நவீன தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் ஆழ் கடலை மனிதனால் இன்னும் வெல்ல முடியவில்லை.

எனினும் பிக்கா, வால்ஷ் ஆகியோரைத் தொடர்ந்து சேலஞ்சர் மடுவுக்கு நவீன நீர் மூழ்கு கலங்கள் மூலம் செல்ல இப்போது மூவர் தனித்தனியே திட்டமிட்டுள்ளனர்.. மூவருமே உலகப் பிரசித்தி பெற்றவர்கள். கோடீசுவரர்கள்.

சூரிய ஒளியால் இயங்கும் விமானம்

அந்த விமானத்தின் பெயர் சோலார் இம்பல்ஸ். பெயரிலிருந்தே அது சூரிய ஒளியால் இயங்குவது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பொதுவில் விமானங்கள் அவற்றில் அமைந்த எஞ்சின்களைப் பொருத்து விசேஷ பெட்ரோல் அல்லது உயர் ரக கெரசினை எரிபொருளாகப் பயன்படுத்தும். சோலார் இம்பல்ஸ் விமானத்துக்கு இப்படியான எரிபொருள் தேவையில்லை. இந்த விமானம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றிக் கொள்கிற்து. அந்த மின்சாரம் விமானத்தை இயக்கப் பயன்படுத்தப்படுகிற்து.
முற்றிலும் சூரிய ஒளியால் இயங்கும் சோலார் இம்பல்ஸ் விமானம்
இதை சற்று விளக்கியாக வேண்டும். முன்புறம் சுழலிகள் (புரொப்பல்லர்கள்) பொருத்தப்பட்ட விமானத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.இந்த் சுழலிகள் சுழன்றால்  தான் விமானம் பறக்கும். அதற்குத் தான் விசேஷ பெட்ரோல்.

சோலார் இம்பல்ஸ் விமானத்தில்  நான்கு மின்சார பேட்டரிகள் இருக்கும். இவை இறக்கைகளின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன். சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் இவற்றில் சேமிக்கப்படும்.விமானத்தின் புரொப்பல்லர்களை இயக்க இந்த மின்சாரம் பயன்படுத்தப்படும்.இந்த விமானத்தை மின்சார விமானம் என்று அழைத்தாலும் தப்பில்லை. அந்த அளவில் இது மின்சார கார் மாதிரி என்றும் சொல்லலாம்.

விமானத்தின் புரொப்பல்லர்கள் இயங்க நிறைய மின்சாரம் வேண்டுமே. ஆகவேதான் சோலார் இம்ப்ல்ஸ் விமானத்தின் இறக்கைக்களின் மேற்புறம் மீது சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற சுமார் 12,000 சோலார் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன்.
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கிளம்பிய போது...
இவ்வளவு மின்சார செல்களைப் பொருத்த நிறைய இடம் தேவை என்பதால் தான் இந்த விமானத்தின் இறக்கைகள் மிக நீளமாக உள்ளன். இடது புற இறக்கையின் நுனியிலிருந்து வலது புற இறக்கையின் நுனி வரை இறக்கைகளின் நீளம் 63 மீட்டர். ( சுமார் 208 அடி).  விமானத்தின் பின்புறத்திலும் மேல் பகுதியில் சோலார் செல்கள் உண்டு.

தரையில் இந்த விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் போது மேலிருந்து பார்த்தால் ஏதோ குச்சிப் பூச்சி உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றும்.

இந்த விமானம் நிறைய இடத்தை அடைத்துக் கொள்ளும் என்றாலும் இதன் எடை ஒரு காரின் எடைக்குச் சமம்.அவ்வள்வுதான்.

 பல புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பெருஞ்செலவில் பரீட்சார்த்த அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் அதை இயக்கும் பைலட் ஒருவர் தான் ஏறிச் செல்ல முடியும்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ராண்ட் பிக்கார்ட், ஆண்டோ போர்ஷ்பெர்க் ஆகிய இருவரில் ஒருவர் தான் இதை வானில் ஓட்டிச் செல்வார், இரவானாலும் சரி, பகலானாலும் சரி இந்த விமானம் தொடர்ந்து 26 மணி நேரம் பறக்கத்தக்கது.

சோலார் இம்பல்ஸ் விமானம் இந்த மாதம் மூன்றாம் தேதி காலை சுமார் 6 மணி அளவில் அமெரிக்காவின் மேற்குக் கரையோரமாக உள்ள  சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து கிழக்குக் கரையில் உள்ள நியூயார்க் நகரை நோக்கிக்  கிளம்பியது. வழியில் பீனிக்ஸ், டல்லஸ், செயிண்ட் லூயி, வாஷிங் டன்,DC ஆகிய நகரங்களில் இறங்கி அங்கு தங்கி விட்டு ஜூலை மாத வாக்கில் நியூயார்க் நகருக்குப் போய்ச் சேரும்.
,வானில் கிளம்புவதற்கு ஆயத்த நிலையில் சோலார் இம்பல்ஸ்
இத்துடன் ஒப்பிட்டால் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து கிளம்பி வழியில் எங்கும் இறங்காமல் பல நூறு பயணிகளை ஏற்றிச் செல்கின்ற விமானங்கள் சுமார் ஆறரை மணி நேரத்தில் ( சுமார் 4000 கிலோ மீட்டர் தூரம்)  நியூயார்க் போய் சேருகின்றன.

சோலார் இம்பல்ஸ் விமானம் சுமார் மூன்று மாத காலம் எடுத்துக் கொள்வதற்குக் காரணம் உண்டு. அது மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாகும்.( மற்ற விமானங்கள் மணிக்கு சுமார் 700 கிலோ மீட்டர் வேகத்தில் செல்பவை). மெதுவாகப் பறக்கிறது என்பதால் சோலார் இம்பல்ஸ் முதல் கட்டமாக பீனிக்ஸ் நகருக்கு வந்து சேரவே 19 மணி நேரம் பிடித்தது.

சோலார் இம்பல்ஸ் விமானத்தை ஓட்டிச் செல்பவர் தனியொருவராகப் பயணிக்கிறார்.விமானத்தைத் தக்கபடி கட்டுப்படுத்தி ஓட்டுவதற்கு மிகுந்த கவனமும் மனப் பக்குவமும் தேவை. எனவே தான் பிக்காரடும், போர்ஷ்பெர்க்கும் யோகாசனமும் ப்யின்றுள்ளனர்.

 பகலில் நல்ல வெயில் அடிக்கிற நேரத்தில் இந்த விமானம் சுமார் 9000 மீட்டர் உயரத்தில் பறக்கும். மாலை நேரம் வந்ததும் 1500 மீட்டர் உயரத்தில் பறக்கத் தொடங்கும்.

பொதுவில் விமானங்கள் உறுதியான அலுமினிய கலப்பு உலோகத் தகடுகளால் உருவாக்கப்படும். இதற்கு மாறாக சோலார் இம்பல்ஸ் விமானம் உலோகமல்லாத பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ நார்ப் பொருளுடன் பிசினைச் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மிக மெல்லிய் ஷீட்டுகளை  கொண்டு இந்த விமானத்தின் உடல் பகுதியும் இறக்கைகளும் உருவாக்கப்பட்டன.

 நீண்ட இறக்கைகள் மீது சோலார் செல்கள் பதிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்
இந்த விமானம் 2009 ல் கட்டி முடிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் முதல் தடவையாகப் பறந்தது. பின்னர் பரிசோதனையாக ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டுக்குப் ப்றந்தது.  இப்போது அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்குப் பறப்பதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இப்போதைய மாடல் HB- SIA  என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் சில புதிய அம்சங்களுடன் அடுத்த மாடல் தயாரிக்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டில் இப்புதிய மாடல் விமானம் உலகைச் சுற்றி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளியால் இயங்கும் விமானத்தை உருவாக்கியதன் பிரதான நோக்கம் காற்று மண்டலத்தைக் கெடுக்காத தொழில் நுட்பத்தின் மீது அரசுகளும் தனியார் துறையினரும் அக்கறை காட்டும்படி செய்வதேயாகும் என்று இந்த விமானத்தை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

விமானத்தை ஓட்டுகின்ற ஒரே ஒருவர் மட்டும் ஏறிச் செல்லும் வகையிலான ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளதால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கும் அவர்களிடம் பதில் உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் லிண்ட்பெர்க் 1927 ஆம் ஆண்டில் நியூயார்க்கிலிருந்து பாரிஸ் நகருக்கு அவர் ஒருவர் மட்டுமே ஏறிச் செல்கிற விமானத்தை ஓட்டிச் சென்று சாதனை படைத்தார். ஆனால் அதற்கு 25 ஆண்டுகள் கழித்து அமெரிக்கா- ஐரோப்பா இடையே  200 பேர் செல்கின்ற விமானப் பயணம் சாத்தியமாகியது.சூரிய ஒளியால் இயங்கும் இப்போதைய விமானத்தை அந்த அளவில் தான் பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை



லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம். லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?

# ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).

# எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.

# அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.

# செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.
நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.

# இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.

# சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.

எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!

ஆமைகளின் வழித்தடத்தில் கடல்வழிகண்ட தமிழர்கள்

ஆய்வாளர் ஒரிசா பாலு வழித்தடத்தைப் பின்பற்றி கடல்வழிகளைக் கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர் என்று ஒருங்கிணைந்த பெருங்கடல் கலாசார ஆய்வு அறக்கட்டளை தலைவர் சிவ. பாலசுப்பிரமணி என்ற ஒரிசா பாலு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாதாந்திர கருத்தரங்கு எழும்பூர் தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொல்லியல்துறை ஆணையர் (பொறுப்பு) சீ.வசந்தி தலைமை வகித்தார். இதில் ஆமைகளின் கடல் வழியில் -கடலோடி தமிழர்களின் தொன்மை" என்ற தலைப்பில் ஒரிசா பாலு பேசியதாவது: ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் பாலசுப்பிரமணி.

Wednesday, 8 May 2013

ஒரு கட்டுரை

ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார் 
தலைப்பு கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள் 
ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார்
அதை கண்ட அவர் கணவர் என்ன ஆச்சு ஏன் அழுகிறாய் என்றார்

என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள்
என்று கொடுத்தார் அதில்

கடவுளே என்னை என் வீட்டில் இருக்கும் டிவியை போல் ஆக்கிவிடு
நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும்.அதை போல் வாழ வேண்டும்
எனக்கான இடம், என்னை சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர்
நான் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சை கவனமாக கேட்க வேண்டும்,அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும்.தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்பு கவனத்தை போல் நானும் பெற வேண்டும்
அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம்
அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும் என்னை விளக்க கூடாது
என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும் சண்டையிடவேண்டும்
என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும்
கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும்
என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை.நான் டிவியை போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார் அந்த குழந்தை பாவம் என்ன பெற்றோர் இவர்கள் குழந்தையை கவனிக்காமல் என்ன ஜென்மமோ

ஆசிரியை தன் கணவரிடம் கூறினார் இந்த கட்டுரையை எழுதியது நம் மகன்

பெற்றோர்களே டீவீக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நம் குடும்ப உறவுகளை தூரமாக்கி விடாதீர்கள்

டிவியில் வரும் சில ப்ரோக்ராம்கள் கூட குழந்தைகளிடம் எதிமறையான விளைவுகளை ஏற்படுத்த கூடியவைகளாகவே பெரும்பாலும் இப்பொழுது உள்ளன

எனவே பொன்னான நேரத்தை சிறிது குடும்பத்தினருடன் செலவிட பலக்கபடுத்திகொள்ளுங்கள்.

நேபாள அரசு

பாலங்கள் இல்லாத நிலையில் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு செல்லும் மாணவிகள்...இடம் நேபாளம்....பாரட்டபடவேண்டியவர்கள் இந்த மாணவிகள் வெட்கப்பட வேண்டியது நேபாள அரசு

யாழ். சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில் தேர்த் திருவிழா!

1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த யாழ். சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவிலின் வருடாந்த தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. வசந்த மண்டப பூஜைகளைத் தொடர்ந்து சிவபெருமான் பார்வதி சகிதம் உள்வீதி வலம் வந்து தேரில் எழுந்தருளி அடியவர்களுக்கு காட்சியளித்தார். 


News Link: http://www.tamilcnn.org/archives/166242.html

மனிததன்மை

முதிர்ந்த பாட்டியிடம் அந்த போலீஸ்காரர் காட்டும் அன்புக்கும் மனிததன்மை ்கும் நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

கத்திரி வெயிலை சமாளிக்க ஆனந்த குளியல் போடும் சிறுவர்


நம் நாடு


ஆடம்பரத்திற்காக பட்டு புடவை வாங்கும்பொழுது பேரம் பேசுவதில்லை, நம் உடல்நலத்தை கெடுக்கும் குளிர்பானம், பீட்சா, பர்கர், வெளிநாட்டு கோழிக் கறிகள் இவற்றை வாங்கும் பொழுது பேரம் பேசுவதில்லை, நம் அந்தஸ்த்தை காட்ட அணியும் அணிகலன்கள் வாங்கையில் பேரம் பேசுவதில்லை, ஆனால் நமக்காக நம் உடல்நலத்தை மனதில் கொண்டு நல்ல காய்கறிகளை உற்பத்தி செய்யும் ஏழ்மை பட்ட விவசாயிகளிடமும், காய்கறிகளை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் காய்காரர்கள், கீரை விற்கும் பெண்மணியிடமும் பேரம் பேசுகிறோம்.

அந்நிய நாட்டில் தயாரிக்கப் பட்டது என்றால் அது என்னவென்றே தெரியாவிட்டாலும் அதிக விலை கொடுத்து வாங்க முன்வரும் இந்த சமூகம் நம்நாட்டில் தயாரிக்கப் படும் தின்பண்ட்களை வாங்க மறுக்கிறது.

அந்நிய நாட்டு பொருட்களை வாங்கி உன்னை அழித்துக்கொண்டு அந்நியர்களை வாழவைப்பதை விட நம் நாட்டு பொருட்களை வாங்கி உண்டு நீயும் வாழலாம் மற்றவர்களையும் வாழவைக்கலாம்.

தமிழில் ஒரு சிற்பான தளம்

தமிழில் ஒரு சிறப்பான தளம்

http://www.maathiyocee.com

Sunday, 5 May 2013

பைத்தியம்

ஒரு மெண்டல் ஆஸ்பத்திரியில் எல்லா பைத்தியங்களும் அழுத வண்ணம் இருக்கிறார்கள் .

ஒரே ஒரு பைத்தியம் மட்டும் தூங்குது

டாக்டர்க்கு ஒரே ஆச்சிரியமா இருக்கு

டாக்டர் அந்த பைத்தியத்திடம் போய் பார்த்து கேட்கிறார்

டாக்டர் :-ஆமா நீ மட்டும் எப்படி? இப்படி? அமைதியா தூங்கற ? எல்லாம்
அழும்போது !

அதற்கு அந்த பைத்தியம் கெத்தா சொல்லுது ,

பைத்தியம் :-அதுவா நான் தான் செத்து போயிடேனே அதற்க்குதான் அவங்க எல்லாம் அழறாங்க !!!!

தாய்ப்பால் அதிகமாக சுரக்க

தாய்ப்பால் அதிகமாக சுரக்க... 

கல்யாண முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்கும். பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும். ஆலம் விழுதின் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

அமுக்கிராங்கிழங்கு இலையினை கஷாயம் காய்ச்சி பருகினால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

1 கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும். வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.

முருங்கை கீரையை சாப்பிட்டுவர தாய்ப்பால் அதிகரிக்கும். தக்காளி இலைகளை காடியில் அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும். அருகம்புல் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும். இளம் இலைகளைச் சமைத்து உண்ண தாய்ப்பால் சுரக்கும். அகத்தி இலையைச் சமைத்து உண்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

அம்மான் பச்சரிசி இலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்துவர தாய்ப்பால் அதிகரிக்கும். குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

சிறிதளவு கேழ்வரகு மாவு, எள்ளு ஒன்றாக சேர்த்து இடித்து அடை செய்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் பின்பு தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு வேண்டிய தாய்ப்பால் சுரக்கும்.

சிறிதளவு அம்மான் பச்சரிசி கீரையின் பூக்களை 1 கப் எடுத்து சுத்தம் செய்து நன்றாக மைய அரைத்து பாலுடன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

முருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். இளம் பிஞ்சான நூல்கோலை சமைத்து உணவுடன் உண்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். ஒரிதழ் தாமரை இலையை அரைத்து சிறிதளவு மோரில் கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.

அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதேஅளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.