Friday, 1 May 2015

பூண்டு சிறந்த தூக்கத்திற்கு நல்லது


கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம்
பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.
அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில......
குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.

No comments:

Post a Comment