Thursday, 26 February 2015

நகம் கடித்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு

புகைப்பிடிப்பதை விட மிகவும் மோசமான பழக்கம் தான் நகம் கடிக்கும் பழக்கம். அதுமட்டுமின்றி சிகரெட்டை கூட நிறுத்திவிடலாம், ஆனால் நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்தவே முடியாது. அந்த அளவில் அது ஒருவரை அடிமையாக்கிவிடும். இத்தகைய பழக்கத்தை சிறுவயதிலேயே நிறுத்தாவிட்டால், பிற்காலத்தில் அது தீவிரமான உடல்நல பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
இதற்கு காரணம் நகம் கடிப்பதால், சில நேரங்களில் அதனை விழுங்கவும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. இப்படி விழுங்குவதால், அது வயிற்றில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி நகங்கள் தான் கிருமிகளின் இருப்பிடம் என்று சொல்லலாம். எப்படியெனில் கைகளை கண்ட கண்ட இடங்களில் வைத்து, திடீரென்று யோசிக்கவோ அல்லது டென்சன் ஏற்பட்டாலோ உடனே கையை வாயில் வைப்போம். இதனால் நகங்களில் தங்கியுள்ள பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் போன்றவை வாயின் வழியே வயிற்றை அடைகிறது.
Biting Nails Can Causes Cancer
மேலும் நகம் கடிப்பதால், பற்களின் எனாமல் பாதிக்கும். நகத்தை எப்போதும் கடித்தவாறு இருந்தால், விரலில் இரத்தக்கசிவு ஏற்பட்டு விரைவில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புக்களும் அதிகம் உள்ளது. பல்வேறு ஆய்வுகள் அடிக்கடி நகத்தை கடிக்கும் பழக்கம் இருந்தால், புற்றுநோய் வரும் வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கின்றன.
எனவே நண்பர்களே! நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை உடனே நிறுத்துங்கள். உங்கள் குழந்தைகள் நகத்தை கடித்தவாறு இருந்தால், அவர்களையும் நிறுத்த வையுங்கள். இல்லாவிட்டால், பெரும் பிரச்சனையை சந்திக்கக்கூடும்

No comments:

Post a Comment