Sunday, 9 February 2014

எச்சரிக்கை

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம்.

ஒரு வீட்டில் சமயலறையில் கேஸ் அடுப்பில் குக்கரில்
சமையல் ஆகிக்கொண்டிருக்கும்போது.,

அடுப்புக்கருகே ஒரு கரப்பான் பூச்சி ஓடுவதை கண்ட அந்த சகோதரி ., உடனே சென்று கரப்பான் பூச்சிகளை கொள்ளும் மருந்து ஸ்ப்ரேயை (spray ) கொண்டுவந்து
அதன் மீது அடிக்க துவங்கினார். ஒருநொடிக்குள் அந்த spray இலிருந்து வெளிவந்த வாயுவுடன் சேர்ந்து வெடித்து அந்த சகோதரி மருத்துவமனையில்உயிருக்கு போராடி இறந்தாள்.

அவளை காப்பாற்ற சென்ற கணவரும் தீப்புண்களோடு மருத்துவமனையில்.

இது போன்ற spray மருந்துகள் ("RAID"..."MORTEIN" போன்ற) எப்போதும் எளிதில் தீப்பற்றக் கூடிய சாதனங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

அவைகளை பயன்படுத்தும் போது அருகில் எதுவும்
எரியும் நிலையில் இருக்க வேண்டாம்.

எச்சரிக்கை.

No comments:

Post a Comment