Thursday, 27 February 2014

ஆல்கஹால்

ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 அபாயங்கள் !

இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அள
வில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர்.

தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள்.

ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது.

ஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால், பின் ஆல்கஹால் அதன் உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டும். அதாவது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல்கஹால் பருகினால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது.

இப்போது அவ்வாறு ஆல்கஹால் பருகுபவர்களின் உடலில் சாதாரணமாக எந்த நோய்கள் வரும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1.கல்லீரல் இழைநார் வளர்ச்சி :
இந்த நோய் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும். இந்த நோயால் கல்லீரலில் உள்ள செல்களில் டாக்ஸின்கள் தங்கி, அந்த செல்களை அழிக்கும். இவை தொடர்ந்தால், இறுதியில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் குறைந்து, இறப்பு ஏற்படும்.

2.அதிக இரத்த அழுத்தம் :
பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

3.அதிக எடை :
வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.

4.இதய நோய் :
இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.

5.அனீமியா :
அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.

6.மன அழுத்தம் ;
மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.

7.மூட்டு வலி :
மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.

8.கணைய பாதிப்பு :
ஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.

9.நரம்பு பாதிப்பு :
ஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்

Thursday, 20 February 2014

மின்னஞ்சல் முகவரி சிக்கல்

நீங்கள் இணைய உலாவி மூலம் இணையத்தை பயன்படுத்துகையில் உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட இணைய உலாவியில் சேமிக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் செல்லும் தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிகள் முகவரிகள் என அனைத்தும் சேமிக்கப்படும்.

எனவே பொது இடங்களில் பயன்படுத்தும் கணனிகளில் அல்லது உங்கள் தனிப்பட்ட கணணி அல்லாத வேறு கணனிகளில் நீங்கள் இணையத்தினை பயன்படுத்திய பின் நீங்கள் எந்த எந்த தளத்துக்கெளலாம் சென்றுள்ளீர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி போன்றவைகளை இன்னுமொருவரால் குறிப்பிட்ட கணனியை பயன்படுத்தி அறிந்து கொள்ளவும் முடியும்.

எனவே இது போன்ற சிக்கல்களை தவிர்த்து பாதுகாப்பான இணைய உலாவலை மேற்கொள்ள, அதாவது நாம் இணையத்தினை பயன்படுத்தும் போது எமது எவ்வித நடவடிக்கைகளையும் சேமிக்காமல் இணையத்தினை உலாவருவதற்கு ஏராளமான இணைய உலாவிகள் தன்னகத்தே வசதிகளை கொண்டுள்ளது.

அந்த வகையில் மிகவும் பிரதான இணைய உலாவிகளான Google Chrome, மற்றும் Mozilla Firefox போன்றவைகளும் இந்த வசதியினை தன்னகத்தே கொண்டுள்ளது.

இது Google Chrome இணைய உலாவியில் "incognito" Mode எனவும் Mozilla Firefox இல் "Private" Mode எனவும் அழைக்கப்படுகின்றது.

எனவே நீங்கள் இதனை Google Chrome இணைய உலாவியில் பயன்படுத்திக் கொள்ள Google Chrome இணைய உலாவியின் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் Customize and control எனும் Menu இனை சுட்டி New incognito window என்பதனை சுட்டுக (Ctrl+Shift+N).

இனி தோன்றும் புதிய சாளரத்தில் உங்கள் இணைய உலாவலை மேற்கொள்ளுங்கள். இதில் உங்கள் எவ்வித இணைய நடவடிக்கைகளும் சேமிக்கப் பட மாட்டாது.

இதனை Mozilla Firefox இணைய உலாவியில் பயன்படுத்திக் கொள்ள குறிப்பிட்ட இணைய உலாவியின் இடது மூலையில் தரப்பட்டிருக்கும் Firefox Menu ஐ சுட்டி New Private Window என்பதனை சுட்டுக (Ctrl+Shift+N).

நீங்கள் இணையத்தினூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போதும் உங்கள் வங்கிக் கணக்குகளை இணையத்தின் ஊடாக பயன்படுத்தும் போதும் மேற்கூறிய முறையை பின்பற்றுங்கள். அதுவே மிகவும் பாதுகாப்பானது.

Sunday, 9 February 2014

நமது மொபைல் போனில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான தொலைப்பேசி எண்கள்


அவசர உதவி அனைத்திற்கும்————–911
வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
போலீஸ் SMS :- ———————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
போலீஸ் : —————————————–100
தீயணைப்புத்துறை :—————————-101
போக்குவரத்து விதிமீறல——————–103
விபத்து :——————————————–100, 103
ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
பெண்களுக்கான அவசர உதவி : ———–1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
கண் வங்கி அவசர உதவி : ——————-1919
விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்..

நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்

எச்சரிக்கை

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம்.

ஒரு வீட்டில் சமயலறையில் கேஸ் அடுப்பில் குக்கரில்
சமையல் ஆகிக்கொண்டிருக்கும்போது.,

அடுப்புக்கருகே ஒரு கரப்பான் பூச்சி ஓடுவதை கண்ட அந்த சகோதரி ., உடனே சென்று கரப்பான் பூச்சிகளை கொள்ளும் மருந்து ஸ்ப்ரேயை (spray ) கொண்டுவந்து
அதன் மீது அடிக்க துவங்கினார். ஒருநொடிக்குள் அந்த spray இலிருந்து வெளிவந்த வாயுவுடன் சேர்ந்து வெடித்து அந்த சகோதரி மருத்துவமனையில்உயிருக்கு போராடி இறந்தாள்.

அவளை காப்பாற்ற சென்ற கணவரும் தீப்புண்களோடு மருத்துவமனையில்.

இது போன்ற spray மருந்துகள் ("RAID"..."MORTEIN" போன்ற) எப்போதும் எளிதில் தீப்பற்றக் கூடிய சாதனங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

அவைகளை பயன்படுத்தும் போது அருகில் எதுவும்
எரியும் நிலையில் இருக்க வேண்டாம்.

எச்சரிக்கை.

Thursday, 6 February 2014

மனிதன்

* இருமலின் வேகம் மணிக்கு 100
கிலோ மீட்டர்.
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-
வது
மாதத்திலிருந்து உரு வாகின்றன.
* கை, கால்கள் நகங்களின்
அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்
பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்
ஆகின்றன. கால் நகங்களை விட
கைவிரல் நகங்கள் வேகமாக
வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்
40 முதல் 100 தலைமுடிகள்
உதிர்ந்து விடுகின்றன.
* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள்
பணிபுரிந்து விட்டு பார்வையை சி
நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில்
செலுத்தினால் அந்தக் காகி தம்
இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
* ஆண்களின் உடல் பாகத்தில்
மிகவும் வளரக்கூடிய முடி,
தாடியில் வளரும் முடிதான்.
ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில்
தாடியை எடுக்காவிட்டால் அது 30
அடி நீளம் வரை வளர்ந்து விடும்.
* 60 வயதாகும்போது நாக்கின்
சுவை மொட்டுகளின் பெரும்
பகுதி அழிந்து போய்விடுகின்றன.
* மனித தாடை 80
கிலோ எடையை இழுத்து அசைக்கக்
கூடிய தாகும்.
* சிரிப்பது நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகி
றது. 6 வயது வரை குழந்தைகள்
ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக்
கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள்
ஒரு நாளைக்கு 100
தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.
* ஒரு மனிதனின் உடம்பில் 600-
க்கும் அதிகமான தசைகள்
இருக்கின்றன. இது உடல் எடையில்
40 சதவீதமாகும்.
* உலகில் மனிதர்களிடம் பொதுவாக
காணப்படும் ரத்த குரூப் ஓ.
அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச்.
இந்த ரத்த குரூப்
கண்டு பிடிக்கப்பட்ட பின்னர்
உலகில் மொத்தம் 10 பேரிடம்
மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ள
து.
* மனிதனின்
நரம்புகளை ஒட்டு மொத்தமாக
நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக
இருக்கும்.
* மனிதனின் உடலில்
ஒரு நிமிடத்திற்கு 300
கோடி அணுக்கள்
செத்து மடிகின்றன.
* மனித மூளையில் 85 சதவீதம்
தண்ணீர்தான் உள்ளது.
* ஒரு மனிதனின் தலையில்
சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்
கும்.
* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16
ஆயிரம் காலன் தண்ணீர்
குடிக்கிறான்.