Thursday, 31 October 2013
பாரதப்போரின் உச்சக்கட்டம்.
பாரதப்போரின் உச்சக்கட்டம்...கர்ணனுடன் அர்ஜுனன் விற்போர் செய்தான். ஆனால், கர்ணனின் ஆக்ரோஷத்துக்கு முன்னால், அர்ஜுனனின் காண்டீப சாகசங்கள் எடுபடவில்லை. பாசறைக்கு திரும்பிய அவனை தர்மர் அழைத்தார். போர் செய்யும் லட்சணமா இது! உனது காண்டீபத்தை (வில்) உலகப்புகழ் பெற்றது என்றும், நீயே வில்வித்தையில் சிறந்தவன் என்றும், நீ வைத்த குறி தப்பாது என்றும் ஆன்றோர்கள் சொல்வதாக பெருமையடித்துக் கொண்டாய். இப்போது என்னாயிற்று உன் காண்டீபத்தின் வல்லமை, என இகழ்ச்சியாகப் பேசினார் தர்மர்.
அண்ணன் தர்மர் சொன்ன வார்த்தைகள் தம்பி அர்ஜுனனின் மனதை உறுத்தியது. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தன் காண்டீபத்தை யாராவது கேலி செய்தால், அவர்களைக் கொன்று விடுவதாக சபதம் செய்திருந்தான் அர்ஜுனன்.
எனவே, அண்ணன் என்றும் பாராமல், அவரை நோக்கி வில்லை உயர்த்தினான். கண்ண பிரான் ஓடிவந்து தடுத்தார். அவரிடம், தனது சபதத்தை விளக்கினான் அர்ஜுனன். கண்ணன் ஒரு யோசனை சொன்னார்.
அர்ஜுனா! ஒருவரைக் கொலை செய்து தான் அவரது உயிர் போக வேண்டும் என்பதில்லை. அவர் மீது வீணான பழி போட்டாலே கொலை செய்ததற்கு சமம். எனவே, தர்மர் மீது ஏதாவது பழிபோடு, என்றார். அர்ஜுனனும் ஏதோ ஒரு பழியைப் போட்டு சபதத்தை நிறைவேற்றினான்.
பின்னர், தன் அண்ணனைக் கொன்றதற்கு சமமான பாவத்தை செய்துவிட்டோமே என மனம் வருந்தி தற்கொலைக்கு முயன்றான். அப்போதும் கண்ணன் தடுத்தார்.
அர்ஜுனா! இதென்ன விபரீதம்! சாஸ்திரத்தில் இதற்கும் பரிகாரம் உண்டு. உன்னை நீயே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்கு சமம். நீ உன்னைப் பற்றி ஜம்பமாக பிறரிடம் ஏதாவது பேசு, என்றார். பிறர் மீது பழிபோடுவது, கொலைக்கும், உன்னை நீயே புகழ்வது தற்கொலைக்கும் ஈடானது...
Labels:
தமிழர் வரலாறு
சர்தார்ஜி சிரிப்பு
ஒரு இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக் கொண்டிருந்தனர்.
திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட்
இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து
கீழே குதிக்க முடிவு செய்தனர்.
முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய
டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக்
கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட்
போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை
கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப்
போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ்
நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே
சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்.
அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்"
என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்..."
Labels:
சர்தார்ஜி சிரிப்பு
சர்தார்ஜி சிரிப்பு
அமெரிக்க நகர் ஒன்றில்,
சர்தார் ஒருவர்
காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப்
தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு
தொடர்ந்து வண்டியை
ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப்
சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால்
நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட
அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால்,
சாலை பாதுகாப்பு
வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக
கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு
பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங்
லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம்,
அவர் குடிச்சிட்டு
உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார்,
'நான் அப்பவே
சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'
Labels:
சர்தார்ஜி சிரிப்பு
Friday, 18 October 2013
கள்ளர் பெயர் சொல்
கள்ளர் படைத்த ராஜியங்கள்
கள்ளர் பெயர் சொல்லும் தலைநகர்கள்
வசையின்றி இசைகொண்டு வாழ்ந்தவர்கள் கள்ளர் என்பர்.
சோறுடைத்து சோணாடு என்ற சோழநாட்டின் தலைநகரை
பீடார் உறந்தை என்பர்
காவிரியின் கழிமுகத்தே சோழ்னின் கடற்கரை கோநகர் பட்டினமாம் ஒலிபுனல்
புகார் என்பர்
நன்னன் பெருமான் நல்லாட்சி தந்தவூர் பாழிப்பேரூர் என்பர்
மலையமான் மலடர் கோமான் காரிவள்ளல் வாழ்ந்த வளமான ஊர் திருக்கோயிலூர்ப்
பேரூர் என்பர்
அதியமான் நெடுமான் அஞ்சி ஆய்ந்தவூர் தகடூர் என்பர்
தொண்டைமானின் தொன்மையும் வளமையும்கொண்ட ஊர் காஞ்சி என்பர்
வையாவிக் கோப்பெரும் போகனின் வளநகரை பொதினி என்பர்
பல்லோருக்கும் வாரி வழங்கிய பாரிவள்லல் வழ்ந்த ஊர் பறம்புமலைப் பேரூர்
என்பர்
ஓரிவள்லல் வீற்றிருந்து ஒப்பற்ற ஆண்மையுடன் காத்துவந்த ஊர் கொல்லிமலைப்
பேரூர் என்பர்
வேளீர்கோன் குடியமர்ந்த குன்றமும் அழுந்தூர் என்பர்.
கள்ளர் படைத்த ராஜியங்கள்.
தமிழக வரலாற்றில் மிகத்தொன்மையான காலம் முதற்கொண்டு சிறப்புற்று வாழும்
குடிகளுள் கள்ளர்குடி தனிச் சிறப்புடையதாகும். இக்குடியினர் தம்
இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விழங்குகின்றனர்.
உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ
குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இவ்வினப் பெருமக்கள் தமிழகத்தை ஆண்ட
பல்வேறு அரச குடும்ப தோற்றல்களாகவும், தொடர் புள்ளவர்களாகவும்
இருந்துள்ளனர் என்பதற்கு சோழர் கால கல்வெட்டுகள் காட்டுகின்றன. இன்றைய
நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது
மாற்றத்தோடும் கானப்படுகின்றன.
சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குற்பட்டிருந்த சிற்றரசர்களைத் தம் அரசியலில்
உயரதிகாரிகளாக கொண்டிருந்தனர், அவர்களே கல்வெட்டுகளில் கையொப்பமும்
மேலொப்பமும் இட்டுள்ளனர். சங்ககாலம் முதற்கொண்டு மிகப் பிற்காலம் வரையில்
கள்ளர் மரபினர் நாட்டாச்சியோடு தொடர்புடன் விளங்கியுள்ளனர். மேலும்
சோழர், மலையர், மழவர், பழுவேட்டரையர், சேதிராயர், வாணாதிராயர், பேசாளர்,
சாளுக்கியர், கங்கர், முத்தரையர், பல்லவர், அதியமார் முதலிய கள்ளர்
குலத்தவர் நாடாண்டுள்ளனர் என்பதும் வரலாறு.
சக்கரவர்த்திகளும், மாமனர்களும், மன்னர்களும் தம் கீழ்ப்பணியாற்றிய
அதிகாரிகள், வீரர்கள், சான்றோர்களுக்கு அவர்களின் அருஞ்செயல்களைப்
பாராட்டி அவர்களுக்கு உயரிய பட்டங்களை வழங்குவது மரபாகக்
கடைப்பிடிக்கப்பட்டது. பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார்க்கு உத்தம சோழப்
பல்லவராயன் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
முதலாம் பராந்தகனுக்கு உதவியாக இருந்த கள்ளர் குல கங்க மன்னன் இரண்டாம்
பிரிதிவிபதிக்கு அவன் வாணர்களின் தலைவன் என்பதால் வாணாதிராயன் என்னும் வீர
விருது வழங்கப்பட்டது. இவ்வாரே தென்னவன் மூவேந்த வேளான், இராசராசக்
காடவராயன், ஆளப்பிறந்தான் முதலான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சோழமண்டலத்தில் காணப்பட்ட கல்வெட்டுகளில் ஈழத்தரையர், ஈழமுண்டார்,
கொல்லமுண்டார், கொல்லத்தரையர், கொங்கரையர், கங்கநாட்டார்,
சோழகங்கநாட்டார், காலிங்கராயர், கடாரத்தேவர், கடாரத்தலைவர்,
கடாரம்தாங்கியார், மண்ணையார், சிங்களாந்தான், சிங்களராயர்,
சிங்களேந்தியார், கேளராயர், கேரளாந்தகன் போன்ற பட்டங்கள் போர் வெற்றிகளை
குறித்து வழங்கப்பட்டதாக தெரிகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவலூர் என்ற இன்றைய திருக்கோவலூர் மலையமான்
என்னும் கள்ளர் குல மன்னர்களால் ஆளப்பட்டது. திருமுடிக்காரி இக்குடியில்
பிறந்த வள்ளலாவான். கோவலூரை ஆண்டவர்கள் கோவலராயன் என்றுமழைக்கப்பட்டனர்.
இக்குடியினரின் மருவிய பட்டப்பெயரே இன்று கோபலர் என்று அழைக்கப்படுகிறது.
இன்றைய தர்மபுரி சங்ககாலத்தில் தகடூராக இருந்தது. தடூரை ஆண்டவர்கள்
அதியமான் என்னும் கள்ளர் குல மன்னர்களாவர். அதியமான் என்னும்பட்டம் மருவி
அதியமார் என்றும் இப்போது அழைக்கப்படுகிறது.
வடக்கே பாலாற்றுக்கரையில் ஆண்டோர் வாணாதிராயர் என்னும் கள்ளர் குல
மன்னர்களாவர். இங்கு வாணாதிராயன் பட்டினம் என்றோர் ஊரும் உண்டு. இவர்கள்
பாலியார், பால்நாட்டார், பாலாண்டார், மாவாலியார் என்னும் பட்டங்களிலும்
அழைக்கப்படுகின்றனர்.
இது போன்று திருமுனைப்பாடியை ஆண்டவர்கள் முனையர் என்ற பட்டமும்,
சேதிநாட்டை ஆண்டவர்கள் சேதிராயர் என்ற பட்டமும், மழவ நாட்டைகொண்டவர்கள்
மழவராயர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் என்பது தெளிவாகிறது.
புதுக்கோட்டை பகுதியிலுள்ள கொடும்பாளூரை ஆண்டோர் கள்ளர்குல இருக்கு
வேளீர்களாவர். இவர்கள் சோழர்களுக்கு பெண் கொடுக்கும் உரிமை
கொண்டோராவர். கொடும்பாளூரை கல்வெட்டுக்கள் கொடும்பை எனக் குறிக்கின்றன.
கொடும்பைராயர் என்ற பட்டம் இன்று மருவி கெடும்புராயர்,
கொடும்பாளூர்ராயர், கொடும்பூராரென்றும் வழங்கி வருகின்றன. மேலும்
இருங்கோ வேளார் என்னும் பெயரும் இன்று இருங்களார் என்ற பட்டமாக மருவி
விட்டது. அண்ணவாயில், பூவனைக்குடி முதலிய இடங்களும் கொடும்பாளூரைச்
சேர்ந்தபகுதியாகும், இப் பகுதி கள்ளர் குலத்தவர்களுக்கு அண்ணவாசல்ராயர்
என்ற பட்டமும், பூவனைக்குடி கள்ளர்களின் பட்டமாகிய பூவனையரையர் என்ற பட்டம்
இன்று பூனையர் என்று திரிந்து வழங்குகிறது. பூவனைக்குடியில் பூதிகளறி
அமரூன்றி என்னும் முத்தரைய மன்னன் இங்கு புட்பவனேசுரருக்கு ஒரு கோயிலைக்
குடைந்திருக்கிறான். கொடும்பாளூர் குறுநில மன்னன் பராந்தகன் சிறிய வேளர்
சுந்தரசோழன் காலத்தில் ஈலத்தை வென்று அப்போரிலேயே உயிநீத்த பெருமையும்
இருக்கு வேளீர் பரம்பரையையே சாரும்.
ஒருநாட்டின் வரலாறு பெரும்பாலும் அந்த நாட்டின் அரசுகளின் தோற்றமும்
மறைவும் பற்றியதாகவே அமைந்திருக்கும். அரசர்களின் செயல்கள், பெற்ற
வெற்றிகள்,கண்டநன்னெறிகள் ஆகியவற்றை ஒட்டியே வரலாறுகளும் அமைந்துள்ளன.
அரசர்களை அடுத்து அந்நாட்டின் சான்றோர்களை கொண்டு வரலாறுகள் புதிய
திருப்பங்களையும் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
மனு (சக்ரவர்த்தி)
சூரிய குலத்தில் தோன்றி ஆரூர் எனும் தேவாரத் திருத்தலத்தை உண்டுபண்ணி
இராசதானியாகக் கொண்டவன். நீதி, நேர்மை, நியாயம் தவறாது ஆட்சி செய்தவன்.
எண்ணிறந்த யாகங்களைச் செய்தவன். பசுவின் கன்றின் மேல் தேரைச் செலுத்திக்
கொன்ற தன் மகன் இக்குவாகுவைத் தேர்க்காலிட்டு அரைத்துக் கொன்றவன். சூரிய
குலத்தில் தோன்றியமையால் மால், சூரியன் எனும் பட்டங்களும் மனுகுலம்
என்னும் குலப்பெயரும் வழங்கலாயிற்று. (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்)
இக்குவாகு
மனு சக்ரவர்தியின் மகன், தேவூர் என்னும் (தேவாரம் பெற்ற சிவதலம்) நகரத்தை
உருவாகக்கி இராஜதானியாக கொண்டவன். இவன் பெயர் தேவராயன், தேவாண்டான், தேவன்
என்றும் வழங்கும். தேவன்குடி, தேவனூர், தேமங்கலம், தேவராயன்பேட்டை,
தேவராயநல்லூர்,தேவணூர்,தேவதானம்
என்னும் ஊர்களையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் தேவராயன், தேகிராயன்,
தேவாண்டான், தேவண்டான், தேவன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: ஆரூர்
நல்லுத்தரன்
இக்குவாகுவின் மகன், தேவூரை இராஜதானியாக கொண்டவன். தேவூரின் தென்புறம இவன்
அமைத்த நல்லுத்தரேச்சரம் சிதைந்த நிலையில் உள்ளது. நல்லூர், நல்லக்குடி,
நல்லாற்றூர் என்னும் ஊர்களையும் உண்டாக்கியவன்.
காலம்: கி மு.
தலைநகரம்: தேவூர்
புறஞ்சயன் (சக்ரவர்த்தி)
நல்லுத்தரன் மகன், புறம்பயம் என்னும் (தேவாரம் பெற்ற சிவதலம்) நகரத்தை
உருவாகக்கி இராஜதானியாக கொண்டவன்.இவன் பெயர் புறம்பயந்தான், புறம்பயன்,
புறம்பயங்கொண்டான் என்றும் வழங்கும். புறவம் (சீர்காழி) புறக்குடி,
புறவச்சேரி, புறமங்கலம், புறங்கரம்பை என்னும் ஊர்களையும், புறவநதி என்னும்
சிற்றாற்றையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் பொறைபொறுத்தான்,
பொய்ந்தான், புறம்பயந்தான், புறம்பயங்கொண்டான், பொய்கொண்டான்,
புறம்பயன், பொறையன் என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: புறம்பயம்
மாமந்தாதா (சக்ரவர்த்தி)
புறஞ்சயன் மகன், மாங்கோட்டை (மாங்காடு) என்னும் நகரத்தை உருவாகக்கி
இராஜதானியாக கொண்டவன். இவன் பெயர் மாங்காட்டான் என்றும் வழங்கும். மாவூர்,
மாகுடி எனும் தேவார சிவதலங்களையும், மாங்குடி, மாம்பட்டி என்னும்
ஊர்களையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் மாங்காட்டான் என்னும் பட்டத்தை
கொண்டனர். (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது)
காலம்: கி மு.
தலைநகரம்: மாங்கோட்டை (மாங்காடு)
மணவாளன்
மாந்தாதா மரபில் வந்தவன்.மணஞ்சேரி (மணற்கால்)என்னும் தேவார சிவ தலத்தையும்,
மணக்கரை,மணக்கரம்பை, மணக்காடு,மணக்குடி, மணம்பூண்டி,மணலி, மணப்பாறை,
மணமேற்குடி, மணவூர்,மணலூர், மணவயல், மணமங்கலம், மணவாளன்பேட்டை என்ற ஊர்களை
உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மணவாளன் என்ற பட்டம் கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: மணவை
வேள்
மனுச்குச் சக்ரவர்த்திக்குப் பின்னும் சோழன் என்னும் அரசனுக்கு முன்னும்,
மனு மரபில் தோன்றி மாந்தாதா மரபில் வந்தவன். பெருவேளூர் எனும் நகரத்தை
உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்ட வேள் என்னும் அரச மரபினர் வேளிர்
எனப்பட்டனர்.மருதநிலமக்களுக்கு வேளாளரென்னும் பட்டம் கொடுத்து
சிறப்பித்தவன். இவன் பெயர் வேளூரன், வேளுடையானெனவும் வழங்கப்பட்டது. வேளுர்
(வைதீஸ்வரன் கோவில்) கீழ்வேளுர், வேட்களம், வேள்விக்குடி என்னும்
சிவதலங்களையும்,வேளுக்குடி, வேளாங்கண்ணி என்னுமூர்களையும் உண்டாக்கியவன்.
இவன் மரபு வழி வந்தோர் வேளூரன், வேளூரான், வேளூடையான் என்ற பட்டங்களை
கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: பெருவேளூர்
தலைவன்
தலைமன், தலைராயன், முதலி என்னும் பெயர்களையும் பூண்ட இவன் மாந்தாதா வழி
வந்தவன்.தலையாலங்காடு,தலைச்சங்க ாடு
என்ற தேவார சிவ தலங்களையும், தலைஞாயிறு,தலையூர், தலைக்காடு, தலையாமங்கலம்,
தலைக்குடி, தலைச்சேரி,முதலிகுத்தம் என்னும் ஊர்களை உண்டு பண்ணியவன். இவன்
மரபில் வந்தவர்கள் தலைராயன், தலைசைராயன், தனசைராயன், தனராயன், முதலி
என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: தலையூர்,
சேறன்
மாந்தாதா மரபில் வந்தவன், சேறைமன் என்ற பெயரும் கொண்டவன், சேறை (சேற்றூர்)
சேற்றுப்பட்டு முதலிய ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன்
காலம்: கி மு.
தலைநகரம்: சேற்றுப்பட்டு
பழையன்
மாந்தாதா மரபில் வந்தவன், பழையாறுகொண்டான், பழையாற்றரையன் என்னும்
பெயர்களையும் உடையவன். பழையாற்று வடதளி, பழையாற்றுத் தென்தளி, பழையாற்று
மேற்றளி, பழையாற்றுக் கீழித்தளி, பழையனூர், பழையாறு, பழையங்குடி, பழனம்
என்னும் தேவார சிவ தலங்களையும், பழையபுரம், பழையவலம், பழமங்கலம்,
பழங்களத்தூர், பழவனக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி நல்லாட்சி
புரிந்தவன். இவன் மரபு வழி வந்தோர் பழையாறுகொண்டான், பழங்கொண்டான்,
பழங்கண்டான், பழையாற்றரையன், பழையாற்றான், பழத்தான், மாம்பழத்தான் என்னும்
பட்டம்கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: பழையாறு
தளியன்
மாந்தாதா மரபில் வந்தவன், தளிமன் என்றும் பெயர் கொண்டவன். தளிக்கோட்டை,
தளிச்சேரி, தளிக்குளம், தளிச்சாத்தங்குடி என்னும் தேவார சிவ தலங்களையும்,
தளிமங்கலம், தளிக்குடி முதலிய ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன்
காலம்: கி மு.
தலைநகரம்: தளிக்கோட்டை
நாகன்
வேள் மரபில் தோன்றி நாகபட்டினம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக்
கொண்ட நாகன் என்னும் அரச மரபினர் நாகர் எனப்பட்டனர். நாகமன், நாகாளி
என்னும் பெயர்களையும் உடையவன். சிவராத்திரி தினத்தில் முதல் சாமத்தில்
திருக்குடந்தை கீழ்க்கோட்டத்திலும், இரண்டாம் சாமத்தில்
திருநாகேச்சரத்திலும், மூன்றாம் சாமத்தில் திருப்பாமப்புரத்திலும் நான்காம்
சாமத்தில் திரு நாகூரிலும் சிவலிங்கபூசை செய்த பெருமை உடையவன். நாகேச்சரம்
என்னும் சிவதலத்தையும், நாகன்பாடி, நாகன்குடி, நாகன்பேட்டை, நாகமங்கலம்,
நாகலூர், நாகளூர், நாகபட்டினம்,நாகலாபுரம் என்னும் சீர்மிகு ஊர்களையும்
உருவாக்கியவன்.இவன் மரபினர் நாகாளி, நாவிளங்கி,நாக்காடி என்ற பட்டங்களை
கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: நாகபட்டினம்
ஆய்
செம்பியன் மரபில் வந்தவன். ஆய்ப்பாடி, ஆய்மூர்( தேவார சிவதலம்),ஆய்மழை,
ஆய்ப்பட்டி, ஆய்க்குடி, ஆய்ங்குடி, ஆய்மங்கலம் என்னும் ஊர்களை உண்டாக்கி
அரசாண்டவன்.இவன் பெயர் ஆய்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபோர்
ஆய்பிரியன், ஆளற்பிரியன், ஆய் என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: ஆயக்கோட்டை
நள்ளி
நியமி மரபில் வந்தவன், வரையாது கொடுத்த கடையெழுவள்லல் என்ற சிறப்புப்
பெயர் கொண்டவன். நள்ளாறு (தேவார சிவதலம்) நள்ளி என்னும் ஊர்களையும்
உண்டாக்கியவன். இவன் பெயர் நள்ளிப்பிரியன் என்றும் வழங்களாயிற்று. இவன் வழி
மரபோர் நள்ளிப்பிரியன், நல்லிப்பிரியன் என்னும் பட்டங்களை பெற்றனர்
காலம்: கி மு.
தலைநகரம்: நள்ளிக்கோட்டை
சூரன்
காலம்: கி மு.
தலைநகரம்:
மறையன்
மாந்தாதா மரபில் வந்தவன், மறைக்காடு (வேதாரணியம்), மறைக்குடி (வேதிக்குடி)
என்னும் சிவ தலங்களையும், மறைப்புரம்(வேதபுரம்) மறையனூர், மறையூர் முதலிய
ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்
காலம்: கி மு.
தலைநகரம்: மறைக்காடு
கார்யோகன்
மாந்தாதா மரபில் வந்தவன், கார்மன், காரையாட்சி என்னும் பெயர்களையும்
கொண்டவன். காரைக்கோட்டை, காரைவாயில் (காராயில்), காரைமேடு (கழிப்பாழை)
காரைக்காடு, காரைக்கால், காரையூர், காரைப்பாக்கம், காரைப்பட்டு,
காரைப்பட்டி, காரைக்குடி, காரைப்பள்ளம், காரப்பங்காடு, காரைமங்கலம் முதலிய
ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி மரபோர்க்கு காரையாட்சி,
காரைக்காச்சி என்னும் பட்டப்பெயர்கள் வழங்குகின்றது
காலம்: கி மு.
தலைநகரம்: காரைக்கோட்டை,
இராயன்
முசுகுந்தன் மரபில் வந்தவன், இராயபுரம், இராயநல்லூர் (இராயந்தூர்)
இராயபேட்டை, இராயமங்கலம், இராயங்குடி, இராயன்பட்டி (இராங்கியன்பட்டி)முதலிய
ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி மரபினர்க்கு இராயன்,
இராங்கியன், இராயங்கொண்டான், இராயமுண்டான், இராயாளி (இராசாளி)
இராயப்பிரியன் (இராசப்பிரியன், இராங்கிலிப்பிரியன்) என்னும் பட்டப்பெயர்கள்
வழங்குகின்றது
காலம்: கி மு.
தலைநகரம்:
ஆச்சன்
முசுகுந்தன் மரபில் வந்தவன். ஆச்சாபுரம் (பெருமணநல்லூர்) என்னும் தேவார
சிவதல நகரை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன்.ஆதிசைவர்களுக்கும்,
கம்மியர்களுக்கும் ஆச்சாரி என்று பட்டம் கொடுத்தவன். இவன் பெயர்
ஆச்சாப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது.ஆதிச்சபுரம், ஆச்சமங்கலம், ஆச்சனூர்,
ஆச்சங்குடி, ஆச்சான்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி
புரிந்தவன். இவன் மரபினர் ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன் என்னும்
பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: ஆச்சாபுரம்
அரசன், அரசதேவன்
முசுகுந்தன் மரபில் வந்தவன். அரசபுரம் என்ற நகரை உண்டாக்கி இராசதானியாகக்
கொண்டவன். இவன் பெயர் அரசாண்டான், அரசுக்குடையவன் எனவும் வழங்கப்பட்டது.
அரசலி,அரநெறி, அரதைப்பெரும்பாழி என்னும் தேவார சிவ தலங்களையும்,
அரங்குளம்,அரசூர்,அரசங்குடி, அரசமங்கலம், அரசங்குளம் என்னும் ஊர்களையும்
உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன். இவன் மரபினர் அரசாண்டான், அரசுக்குடையவன்,
அரசுக்குழைச்சான், அரச்சுக்குழைச்சான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: அரசபுரம்
ஓமாம்புலிமன்
முசுகுந்தன் மரபில் வந்தவன், ஓமாம்புலியூர் என்ற தேவாரம் பெற்ற சிவதல நகரை
உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஓமாந்தரையன்,
ஓமாமரையன்,ஓமாம்பிரியன், ஓமாமுடையன் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபினர்
ஓமாமரையன், ஓமசையன், ஓமனாயன், ஓமாந்தரையன், ஓந்தரையன், ஓந்திரியன்,
ஓமாம்பிரியன், ஓயாம்பிலியன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: ஓமாம்புலியூர்
முசுகுந்தன் (சக்ரவர்த்தி)
நாகர் பரம்பரையில் தோன்றி புகார்ப்பட்டினம் என்ற நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். முசுகுந்தன் கருவூரில் இருந்து அரசாண்டவன்.இவன்
இந்திரன் என்னும் பேரரசன் ஒருவனுக்கு போரில் பெரும் உதவி செய்து அவனது
நன்மதிப்பைப் பெற்று இந்திரன் பூசித்து வந்த ஏழு சிவலிங்க சிலைகளையும்
பெற்று வந்து அவற்றை திருவாரூர், திருநாகை காரோணம், திருக்காறாயில்,
திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு,திருவாய்மூர் ஆகிய ஏழு
திருப்பதிகளிலும் எழுந்தருளஸ் செய்துள்ளான்.இந்த ஏழு பதிகளும் சப்த
விடங்கத் தலங்கள் எனப்படுகின்றன. முசுகுந்தன் சிலப்பதிகாரம், மணிமேகலை,
கலிங்கத்துப்பரணி, கந்தபுராணம், ஒரு துறை கோவை முதலிய சங்க கால நூல்களில்
குறிப்பிடபட்டுள்ளான்.
காலம்: கி மு.
தலைநகரம்: புகார்ப்பட்டினம். கரூர்.
பனையன், பனையமன்
முசுகுந்தன் மரபில் வந்தவன். பனையகோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன்.பனையூர், பனந்தாள், பனங்காடு, பனங்காட்டூர்
என்னும் தேவாரம் பாடப்பெற்ற சிவதலங்களையும், பனையப்பட்டி, பனங்காடி,
பனங்குடி, பனம்பாக்கம், பனங்குளம், பனமங்கலம், பனம்பட்டி என்ற
ஊர்களையுமுண்டு செய்து சிறப்புடன் நல்லாட்சி செய்தவன். இவன் பெயர்
பனைகொண்டான் மற்றும் தாளியன் என்றும் வழங்கப்பட்டது. இவன் வழி வந்த
மரபினர் பனையன், பன்னையன், பனைகொண்டான், பன்னிகொண்டான், பண்ணிகொண்டான்,
பன்றிகொண்டான், பண்ணிமுண்டான், பணிகொண்டான், பணிபூண்டான், தாளியன்,
தாளிதியன் என்ற பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: பனையகோட்டை
பருதிமன்
முசுகுந்தன் மரபில் வந்தவன். பருதி (பருத்திக்கோட்டை) என்னும் நகரத்தை
உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பருத்தீச்சரம் (பருத்தியப்பர் கோவில்)
மிகைச்சூர் என்னும் தேவாரம் பாடப்பெற்ற சிவதலங்களையும், பருத்திகுடி,
பருத்தியூர், பருத்திச்சேரி, பருத்திமங்கலம், பருத்திப்பள்ளம், என்ற
ஊர்களையுமுண்டு செய்து சிறப்புடன் நல்லாட்சி செய்தவன். இவன் பெயர்
பருதிகொண்டான், பருதியாண்டான், ப்ருதிப்பிரியன், என்றும் வழங்கப்பட்டது.
இவன் வழி வந்த மரபினர் பருதிகொண்டான், பருதியாண்டான் என்ற பட்டங்களை
கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: பருத்திக்கோட்டை
விசலன். விசலமன்
முசுகுந்தன் மரபில் வந்தவன். விசலூர் என்னும் தேவாரம் பாடப்பெற்ற சிவதலத்தை
உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் விசலாண்டான், விசலாளி,
விசல்கொண்டான் என்றும் வழங்கப்பட்டது. இவன் வழி வந்த மரபினர் விசலாண்டான்,
விசலண்டான், பிசலண்டான், வீசண்டான், விசலாளி, விச்சாடி, விசல்கொண்டான்,
விசலுண்டான், பிசலுண்டான் என்ற பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: விசலூர்
வாளமரன்
முசுகுந்தன் மரபில் வந்தவன். வாளமரன்கோட்டை என்னும்நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். வாட்போரில் மிகவும் சிறந்தவீரன். இவன் பெயர்
வாளால்வெட்டி என்றும் வழங்கப்பட்டது. வாட்போக்கி, வாள்கொளிபுத்தூர்
என்னும் தேவார சிவதலங்களையும்,வாள்மங்கலம், வாளையங்கண்ணி என்னும்
ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன்இவன் வழி வந்த மரபினர்
வாளால்வெட்டி, வாள்வெட்டி என்ற பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: வாளமரன்கோட்டை
நெல்லி. நெல்லிமன்
முசுகுந்தன் மரபில் வந்தவன். நெல்லிக்கோட்டை என்னும்நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் நெல்லிப்பிரியன் என்றும்
வழங்கப்பட்டது. நெல்வாயில் (சிவபுரி) நெல்வெண்ணை, நெல்லிக்கா,
நெல்வாயிலாத்துரை என்னும் தேவார சிவதலங்களையும், மேலநெல்வேலி(மீனவல்லி)
என்னும் சிவதலத்தையும், நெல்லி, நெல்லிச்சேரி, நெல்மலி, நெல்லூர் என்னும்
ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன்இவன் வழி வந்த மரபினர்
நெல்லிப்பிரியன், நல்லிப்பிரியன் என்ற பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: நெல்லிக்கோட்டை
பத்தாளன்
முசுகுந்தன் மரபில் வந்தவன். பத்தாளன்கோட்டை என்னும்நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பத்தாட்சி என்றும் வழங்கப்பட்டது.
பத்தூர் என்னும் தேவார சிவதலத்தையும், பத்தகுடி, பத்தமங்கலம்,
பத்தாளன்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன்இவன் வழி
வந்த மரபினர் பத்தாளன், பத்தாட்சி, பெத்தாச்சி என்ற பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: பத்தாளன்கோட்டை
மங்களன். மங்கலன்
முசுகுந்தன் மரபில் வந்தவன். திருமங்கலக்கோட்டை என்னும்நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மங்கலதேவன் என்றும் வழங்கப்பட்டது.
மங்கலக்குடி என்னும் தேவார சிவதலத்தையும், மங்கலம், மங்கலூர் என்னும்
ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன் இவன் வழி வந்த மரபினர் மங்கலன்,
மங்கதேவன், மங்கல்தேவன் என்ற பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: திருமங்கலக்கோட்டை
நியமி சக்ரவர்த்தி
முசுகுந்தன் மரபில் வந்தவன். புகார் பட்டினம் என்னும்நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். நியமம் என்னும் தேவார சிவதலத்தையும்,
நியமித்தான்பட்டி, நியமக்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி
புரிந்தவன்
காலம்: கி மு.
தலைநகரம்: புகார் பட்டினம்
சேய்ஞன்
நியமி மரபில் வந்தவன். சேய்ஞலூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். சேயூர், சேய்க்குடி, சேய்மங்கலம் என்னும்
ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன். சேயாறு என்னும் பேராற்றையும்
வெட்டி விரிவாக்கி விவசாயம் மேம்பட உதவியவன். இவன் பெயர் சேய்ஞற்கொண்டான்,
சேய்ஞற்பிரியன், சேய்ஞலரையன் எனவும் வழங்கும். இவன் வழி மரபோர்
சேய்ஞற்லரையன்,சேய்ஞற்பிரியன், சேய்ஞற்கொண்டான், செம்மைக்காரன், சேப்பிளன்
எனும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: சேய்ஞலூர்
கருப்பைமன்
நியமி மரபில் வந்தவன்.தேவாரம் பெற்ற சிவதல கருவூர் நகரத்தை உண்டுபண்ணி
இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் கருவூரான்,கருக்கொண்டான்
என்வும்வழங்கும்.கருக்காவூர்,கர ுக்குடி,
கருப்பாறியலூர்,கருவிலி என்னும் தேவார சிவதலங்களையும், கருப்பூர்
என்னும்சிவ தலத்தையும், கருப்புக்களர், கருப்பஞ்சேரி,
கருப்பட்டிமூலை,கருங்குளம், கருங்கண்ணி, கருவாக்குரிச்சி, என்னும்
ஊர்களையுமுர்வாக்கி அரசாண்டவன். இவன்மரபோர் கருப்பையன், பருப்பட்டியான்,
கருவூரான், க்ருப்பூரான்,கருக்கொண்டான்,கர ுப்பூண்டான்
என்னும் பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: கருவூர்
உறையன்,உறந்தைமன்
நியமி மரபில் வந்தவன். உறையூர் என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி
இராசதானியாக கொண்டவன். உறத்தூர் என்னும் ஊரையும் உருவாக்கி நல்லாட்சி
செய்தவன்.இவன் உறந்தைராயன், உறந்தைகொண்டான், உறந்தைப்பிரியன் என்வும்
வழங்கழாயிற்று. இவன் மரபோர் உறந்தைராயன் என்னும்பட்டம் கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: உறையூர்.
ஒளிமன்
நியமி மரபில் வந்தவன். ஒளி கோட்டை (உள்ளி கோட்டை) என்னும்நகரத்தை
உருவாக்கி இராசதானியாக கொண்டவன். இவன்பெயர்
ஒளிராயன்,ஒளிகொண்டான்,ஒளிப்பிர ியன்
என்வும் வழங்கழாயிற்று.அறிவிலும், புகழிலும், வீரத்திலும் சிறந்து
விழங்கியவன். ஒளியூர், ஒளிமங்களம், ஒளிகுடி,ஒளிக்கடை (உள்ளிக்கடை) ஒளிமதி
என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஒளிராயன்,
ஒளிகொண்டான், ஒளிப்பிரியன், ஒண்டிப்பிலியன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: உள்ளிக்கோட்டை
கொற்றவன், கொற்றமன்.
நியமி மரபில் வந்தவன்.கொற்றங்குடி என்னும்நகரத்தை உருவாக்கி இராசதானியாக
கொண்டவன்.அறிவிலும், புகழிலும், வீரத்திலும்,வெற்றியிலும் சிறந்து
விழங்கியவன்.கொற்றமங்கலம் (கொத்தமங்கலம்) கொற்றங்குடி (கொத்தங்குடி)
கொற்றூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன்பெயர்
கொற்றங்கொண்டான், கொற்றப்பிரியன் எனவும் வழங்கழாயிற்று. இவன் மரபோர்
கொற்றங்கொண்டான், கொன்னமுண்டான், கொற்றப்பிரியன்,
கொத்தப்பிரியன்என்னும் பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: கொற்றங்குடி
நன்னியன், நன்னிமன்.
நியமி மரபில் வந்தவன். நன்னிபள்ளி என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி
இராசதானியாக கொண்டவன். இவன்பெயர் நன்னியன் எனவும் வழங்கழாயிற்று. நன்னிலம்
என்னும் தேவார சிவதல நகரையும், நன்னிமங்கலம், நன்னிக்குடி,நன்னிகுத்தே (
நயினான்) என்னும் ஊர்களையு முருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் நன்னியன்,
நயினியன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்:
நீலமன்
நியமி மரபில் வந்தவன்.நீலப்பாடி என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக்
கொண்டவன்.இவன் பெயர் நீலங்கொண்டான்,நீலப்பிரியன், எனவும் வழங்கும்.
நீலக்குடி என்னும் தேவார சிவதலத்தையும், நீலவெளி என்னும்
சிவதலத்தையும்,நீலநல்லூர்(நீலத் தநல்லூர்)
நீலமங்கலம், என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபோர்
நீலங்கொண்டான், நெறிமுண்டான், என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: நீலப்பாடி
வைகன்
நியமி மரபில் வந்தவன்.வைகல் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக்
கொண்டவன்.இவன் பெயர் வைகைராயன் எனவும் வழங்கும்.வைக்காவூர், வைகல் என்னும்
தேவார சிவதலத்தையும், வைகளத்தூர்,வைகச்சேரி, வைகம்பட்டி என்னும்
ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபோர் வைகராயன், வயிராயன்,வயிரவன்
என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: வைகல்
சாத்தன்
நியமி மரபில் வந்தவன்.சாத்தமங்கை என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக்
கொண்டவன்.இவன் பெயர் சாத்தயன், சாத்தரயன் எனவும் வழங்கும்.சாத்தமங்கை
(சாத்தமங்கலம்) என்னும் தேவார சிவதலத்தையும், சாத்தனூர், சாத்தங்குடி,
சாத்தமங்கலம், சாத்தூர், என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன்
மரபோர் சாத்தயன், (சாதகன்) சாத்தரையன், சாமுத்தரையன், சாமுத்திரியன்
என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்:
மருங்கன்
நியமி மரபில் வந்தவன்.மருங்காபுரி என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக்
கொண்டவன்.இவன் பெயர் மருங்கராயன் எனவும் வழங்கும்.மருதூர், மருகல்,
மருத்துவக்குடி என்னும் தேவார சிவதலத்தையும், மருதவனம்,மருதூர்,மருதங்குடி,
மருதங்காவளி, மருதம்பட்டி, மருவூர், மருங்கூர், மருங்குப்பள்ளம் என்னும்
ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபோர் மருங்கராயன், பருங்கைராயன்,
கைராயன் என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: மருங்காபுரி.
பூமன்
நியமி மரபில் வந்தவன். பூவளூர் என்னும் சிவதல நகரத்தை உண்டாக்கி
இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் பூவாட்சி எனவும் வழங்கும்.
பூந்துருத்தி, பூவனூர் என்னும் தேவார சிவதலங்களையும், பூங்குடி, பூங்குளம்,
பூவத்தூர், பூவத்தகுடி, பூவலூர், பூந்தோட்டம், பூண்டி என்னும் ஊர்களையும்
உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபோர் பூவாட்சி, பூட்சி,திருப்பூட்சி என்னும்
பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: பூவளூர்
வேங்கைமன்
நியமி மரபில் வந்தவன் வேங்கை (உழுவூர்) என்னும் நகரத்தை உண்டாக்கி
இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வேங்கைராயன், உழுவாண்டான் எனவும்
வழங்கும். வேங்கூர் என்னும் தேவார சிவதலத்தையும்,
வேங்கூர்,உழுவூர்,உழுமங்ககலம், உழுந்தூர்பேட்டை என்னும் ஊர்களையும்
உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபோர் வேங்கைராயன், வேங்கிராயன், உழுவாண்டான்,
உழுவண்டான்என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: வேங்கை (உழுவூர்)
விடையன்
நியமி மரபில் வந்தவன். விடையபுரம் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக்
கொண்டவன்.விடைவாய்குடி என்னும் தேவார
சிவதலத்தையும், விடைக்கழி, விடைமங்கலம், விடைக்குடி என்னும் ஊர்களையும்
உருவாக்கி அரசாண்டவன்.
காலம்: கி மு.
தலைநகரம்: விடையபுரம்
அன்னி
நியமி மரபில் வந்தவன். இவன் மரபோர் என்னும் பட்டங்களை கொண்டனர்என்னும்
நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன்.அன்னிமங்கலம், அன்னிகுடி
என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.
காலம்: கி மு.
தலைநகரம்: இவன் மரபோர் என்னும் பட்டங்களை கொண்டனர்
கஞ்சமன்
நியமி மரபில் வந்தவன் கஞ்சனூர் என்னும் சிவதல நகரத்தை உண்டாக்கி
இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் கஞ்சராயன் எனவும் வழங்கும் கஞ்சனூர்
என்னும் தேவார சிவதலத்தையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபோர்
கஞ்சராயன்,கஞ்சன் என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: கஞ்சனூர்
குறுக்கைமன்
நியமி மரபில் வந்தவன் குருக்கை என்னும் சிவதல நகரத்தை உண்டாக்கி
இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் குறுக்கைராயன் எனவும் வழங்கும்.
குறுக்கை, குறுமாணிகுடி என்னும் தேவார சிவதலங்களையும், குறுங்குடி,
குறும்பூர், குறுங்களம், குறுங்குளம் என்னும் ஊர்களையும் உருவாக்கி
அரசாண்டவன்.வேளாளரில் ஒரு வகுப்பாருக்கு குறுக்கையர் என்னும் பட்டத்தினை
அளித்தவன், இவன் மரபோர் குறுக்கையாண்டான், குறுக்காண்டான் என்னும்
பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: குருக்கை
தில்லைமன்
செம்பியன் மரபில் வந்தவன். தில்லை (சிதம்பரம்) என்னும் சிவதல நகரத்தை
உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர்
தில்லைராயன்,தில்லைகொண்டான், தில்லையாண்டான், தில்லைப்பிரியன், தில்லையாளி
எனவும் வழங்கும். தில்லைவிடங்கன், தில்லையாளி நல்லூர், தில்லைவளகம்,
தில்லையம்பூர் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.
காலம்: கி மு.
தலைநகரம்: தில்லை
வேலமன்
செம்பியன் மரபில் வந்தவன். வேலூர் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக்
கொண்டவன்.இவன் பெயர் வேல்ராயன், வேலாண்டான்,வேற்கொண்டான், வேற்பிரியன்,
வேலாளி எனவும் வழங்கும். வேற்காடு என்னும் தேவார சிவதலத்தையும், வேலூர்,
வேலங்குடி, வேலங்காடு, வேற்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி
அரசாண்டவன்.இவன் மரபோர் வேல்ராயன், வேலாண்டான்,வேற்கொண்டான்,
வேற்பிரியன், வேலாளி என்னும் பட்டங்களை கொண்டனர்
தலைநகரம்:வேலூர்.
பட்டிமன்
நியமி மரபில் வந்தவன்.பட்டுக்கோட்டை என்னும் நகரத்தை உண்டாக்கி
இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் பட்டுராயன்,பட்டுகொண்டான்,பட்ட ாண்டான்,பட்டுப்பிரியன்,
பட்டாளி எனவும் வழங்கும். பட்டீச்சரம் என்னும் தேவார சிவதலத்தையும்,
பட்டிமங்கலம், பட்டவெளி, பட்டம்,பட்டுராயன்பட்டி(பவட்டுர ான்பட்டி)
என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபோர் பட்டுராயன்,
பவட்டுரான் என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: பட்டுக்கோட்டை
சத்தி
நியமி மரபில் வந்தவள். பழையாறு என்னும் சிவதல நகரத்தை உண்டாக்கி
இராசதானியாகக் கொண்டவள்.சத்திமுத்தம் என்னும் தேவார சிவதலத்தையும்,
சத்திமங்கலம், சத்திவேடு,சத்திகுடி,என்னும் ஊர்களையும் உருவாக்கி
அரசாண்டவள்.
காலம்: கி மு.
தலைநகரம்: பழையாறு
செட்டி
நியமி மரபில் வந்தவன். செட்டிமங்கலம் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக்
கொண்டவன்.செட்டியகாடு,செட்டிபு லம், செட்டிகுத்தே, செட்டியமூலை,செட்டிக்குளம்,செட் டிக்குடி
என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபோர் செட்டிரையன்,
செட்டியன் என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: செட்டிமங்கலம்
கரும்பூரன்
நியமி மரபில் வந்தவன். கரும்பூரான் கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி
இராசதானியாகக் கொண்டவன். கரும்பூர் என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன்.
இவன் மரபோர் கரும்பூரான் என்னும் பட்டம் கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: கரும்பூரான் கோட்டை
கீழைமன்
நியமி மரபில் வந்தவன்.கீழக்கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி
இராசதானியாகக் கொண்டவன். வேளாளரில் ஒருவகுப்பாருக்கு கீழார் என்னும்
பட்டம் கொடுத்தவன். கீழையூர், கீழைவழி, கீழையம் என்னும் நகரங்களையும்
உருவாக்கி அரசாண்டவன். இவன் பெயர் கீழாண்டான், கீழ்கொண்டான், கீழுடையான்,
கீழ்ப்பிரியன், கீழாளி எனவும் வழங்கும். இவன் மரபோர் கீழாண்டான், கிழண்டன்
என்னும் பட்டம் கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: கீழக்கோட்டை
இடைமன்
நியமி மரபில் வந்தவன். இடங்கான்கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி
இராசதானியாகக் கொண்டவன். முல்லை நில மக்களுக்கு இடையர் என்ற பட்டம்
அளித்தவன். இவன் பெயர் இடங்காப்பிறந்தான் எனவும் வழங்கும். இடைமருதூர்,
இடையாறு, இடைவாய்,இடைக்குளம், இடைப்பள்ளி என்னும் தேவார சிவ தலங்களையும்,
இடையாதிமங்களம், இடைக்கோரை, இடையூர், இடைகாடு, இடைகுடி என்னும் ஊர்களையும்
உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் இடங்காப்பிறந்தான் என்னும் பட்டம்
வழங்கழாயிற்று.
காலம்: கி மு.
தலைநகரம்: இடங்கான்கோட்டை
கன்னன்
நியமி மரபில் வந்தவன். கன்னபுரம் என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக்
கொண்டவன். இவன் பெயர் கன்னாண்டான், கன்னகொண்டான், கன்னமுடையான்,
கன்னப்பிரியன், கன்னாளி எனவும் வழங்கும். வரையாது கொடுத்த இடையெழு
வள்ளல்களில் ஒருவன். கன்னாறு என்னும் ஆற்றையும் உருவாக்கினான். கன்றாப்பூர்
(கன்னாப்பூர்) என்னும் சிவதலத்தையும், கன்னாரப்பேட்டை,கன்னான்குளம்,
கன்னத்தங்குடி கன்னக்கொடையான் என்னும் ஊர்களையும் உருவாக்கி நல் ஆட்சி
புரிந்தவன். இவன் மரபோர் கன்னமுடையான், கன்னப்படையன் என்னும் பட்டங்களை
பூண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: கன்னபுரம்
சாய்மன்
நியமி மரபில் வந்தவன்.சாய்க்கோட்டை(கலய நல்லூர்) என்னும் தேவார சிவதலத்தை
உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கலயன் எனவும் வழங்கும்.
சாயக்காடு, சாய்க்களூர் என்னும் சிவதலங்களையும் உருவாகி அரசாண்டவன். இவன்
மரபோர் கலயன் என்னும் பட்டம் கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: சாயக்கோட்டை
நம்பன்
நியமி மரபில் வந்தவன். நம்பன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன்
காலம்: கி மு.
தலைநகரம்:
வாமனன். வாமன்
நியமி மரபில் வந்தவன். வாகோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக்
கொண்டவன். இவன் பெயர் வாகொண்டான், வாயாண்டான், வாய்ப்பிரியன், வாயாளி
என்வும் வழங்கும். இவன் மரபோர் வாப்பிரியன், வாப்பிலியன், வாயாளி, வாயாடி
என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: வாகோட்டை
பாச்சில்மன்
நியமி மரபில் வந்தவன். பாச்சிற்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் பாச்சிற்கொண்டான், பாச்சிலாண்டான்,
பாச்சிற்பிரியன், பாச்சிலாளி எனவும் வழங்கும். பாச்சிலாச்சிராமம்,பாச்சூர்
என்னும் தேவார சிவதலங்களையும், பாச்சூர், பாச்சிமங்கலம் என்னும் ஊர்களையும்
உண்டாக்கி அரசாண்டவன்இவன் மரபோர் பாச்சிலாளி, பிச்சாடி என்னும் பட்டங்களை
கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: பாச்சிற்கோட்டை
ஓரி
நியமி மரபில் வந்தவன். வரையாது கொடுத்த கடையெழுவள்லல் என்ற சிறப்புப்
பெயர் கொண்டவன்.இவன் பெயர் எனவும் வழங்கும். என்னும் தேவார
சிவதலங்களையும், என்னும் ஊர்களையும் உண்டாக்கி அரசாண்டவன்இவன் மரபோர்
என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்:
காரி
நியமி மரபில் வந்தவன். வரையாது கொடுத்த கடையெழுவள்லல் என்ற சிறப்புப்
பெயர் கொண்டவன்.இவன் பெயர் எனவும் வழங்கும். என்னும் தேவார
சிவதலங்களையும், என்னும் ஊர்களையும் உண்டாக்கி அரசாண்டவன்இவன் மரபோர்
என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்:
சமயன்
நியமி மரபில் வந்தவன். சமயபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக்
கொண்டவன்.இவன் பெயர் சமயன், சமயதேவன், சமயாளிஎனவும் வழங்கும்.சமயனூர்,
சமயங்குடிகாடு என்னும் ஊர்களையும் உண்டாக்கி அரசாண்டவன்இவன் மரபோர் சமயன்,
சமயாளி, சவுளி, சவுட்டி, சமட்டி என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: சமயபுரம்
சோனைமன்
நியமி மரபில் வந்தவன். சோணாகோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சோணையன் சோணாடுகொண்டான் எனவும்
வழங்கும்.இவன் மரபோர் சோணையன், சோணாடுகொண்டான், சோணாருண்டான் என்னும்
பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்:சோணாகோட்டை
காசிமன்
நியமி மரபில் வந்தவன். காசாங்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காசிராயன், காசிநாடன் எனவும்
வழங்கும். தென்காசி, சிவகாசி, என்னும் பிரபல சிவதலங்களையும், காசாங்காடு,
தென்காசி, என்னும் ஊர்களையும் உண்டாக்கி அரசாண்டவன்இவன் மரபோர் காசிராயன்,
காசிநாடன் என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: காசாங்கோட்டை
நரசிங்கன்
நியமி மரபில் வந்தவன். நரசிங்கபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் நரசிங்கம்பிரியன் எனவும் வழங்கும்.
நரசிங்கமங்கலம், நரசிங்கம்பேட்டை என்னும் ஊர்களையும் உண்டாக்கி
அரசாண்டவன்இவன் மரபோர் நரசிங்கன், நரங்கியன், நரசிங்கபிரியன்,
நரங்கிப்பிலியன் என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: நரசிங்கபுரம்
கரம்பையன்
நியமி மரபில் வந்தவன். கரம்பைக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கரம்பைகொண்டான், எனவும் வழங்கும்.
கரவீரம், கரபுரம் என்னும் தேவார சிவதலங்களையும், கரம்பை, கரம்பையம்,
கரம்பைக்குடி, கரஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையும் உண்டாக்கி அரசாண்டவன்இவன்
மரபோர் கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டான் என்னும் பட்டங்களை
கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: கரம்பைக்கோட்டை
மானங்காத்தான், மானங்காத்தமன்
நியமி மரபில் வந்தவன். மானலூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக்
கொண்டவன். இவன் பெயர் மானத்தரையன், மானம் விழுங்கி, எனவும் வழங்கும்.
மானகாத்தான்கோட்டம், மானலூர், மானூர் என்னும் ஊர்களையும் உண்டாக்கி
அரசாண்டவன்இவன் மரபோர் மானங்காத்தான், மானத்தரையன், மானமுத்திரையன்,
மானம்விழுங்கி, மானமுழுங்கி என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: மானலூர்
மண்டலன்
நியமி மரபில் வந்தவன். மண்டலக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மண்டலராயன், மண்கொண்டான் எனவும்
வழங்கும். மண்டளி என்னும் தேவார சிவதலங்களையும், மண்கொண்டான் என்னும்
ஊரையும் உண்டாக்கி அரசாண்டவன்இவன் மரபோர் மண்டலராயன்,
மண்டராயன்,மண்கொண்டான்,மங்கொண ்டான்,மங்கண்டான்
என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: மண்டலக்கோட்டை
செம்பியன்
முசுகுந்த அரச மரபில் தோன்றி செம்பியபுரம் நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன் சிபி சக்ரவர்த்தி, செம்பியன் என்ற பட்டம்
பெற்றான்.இவன் பெயர் செம்பியத்தரையன், செம்பியரையன் என்றும் வழங்கும்.
செம்பியன்பள்ளி, செம்பொன்பள்ளி, செம்பியன்குடி, என்னும் தேவார சிவ
தலங்களையும்,செம்பியன்மங்களம், செம்பியன்களர் என்னும் ஊரையும் உண்டாக்கி
அரசாண்டவன். இவன் மரபினர் செம்பியன்,செம்பன், செம்பியரையன், செம்பரையன்,
செம்படையன், செம்பியத்தரையன், செம்பியமுத்திரியன், செம்பியமுத்தரசு,
செம்பியமுத்தரையன் போன்ற பட்டங்களை கொண்டனர்.
காலம்: கி மு.
தலைநகரம்: செம்பியபுரம்
வங்காரமன்
செம்பியன் மரபில் வந்தவன். வங்கநகர் என்னும் நகரத்தை உருவாக்கி
இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வங்கன், வங்கராயன், வங்கத்தரையன்
எனவும் வழங்கும். வங்காரம், பேரையூர், வங்காரம்பேட்டை, வங்கத்தான்குடி,
வங்கமங்கலம், என்னும் ஊர்களையும் உண்டாக்கி அரசாண்டவன்இவன் மரபோர் வங்கன்,
வங்கனன், வங்கராயன், அங்கராயன், அங்கரான், வங்கத்தரையன்,
வங்காரமுத்தரையன், வங்காரமுத்திரியன் என்னும் பட்டங்களை கொண்டனர்
காலம்: கி மு.
தலைநகரம்: வங்கநகர்
பாரதத்தையும் கடல் கடந்த நாடுகளையும் கட்டியாண்ட ஓர் இனத்தின் வீர வரலாறு
கரிகாலன் ஆற்றிய பெரும்போர் வாகைப் பறந்தலைப் போராகும். கரி, பரி, தேர்,
காலாட்படைகளை மிகுதியாக பெற்றிருந்த சேரன், பாண்டியன் மற்றும்
பதினொருவேளீர்களையும் ஒன்று சேர வாகைப்பறந்தலை, வெண்ணியில் வெற்றிகண்டவன்
மாமன்னன் அடங்காபிரியன் பெருவளத்தான் கரிகாலன். பகைவர்கள் தம் கொற்றக்
குடைகளையும், புகழ்க் கொடிகளையும் களத்தில் எறிந்துவிட்டு ஓடினர் என்று
பரணர் விரித்துரைத்துள்ளார். போர்களத்தை சூடாவாகை என்றும் பரணர்
உரைத்துள்ளார். இதன் மூலம் வாகையை போர்க்களம் என்றும் வெற்றிக்குரிய பூவாக
நாம் நினைக்க இடமில்லை என்றும் அறிய முடிகிறது
அவைகூடி வந்தமர்ந்தான் மாமன்னன் அடங்காபிரியன் பெருவளத்தான் கரிகாலன்
உளமார வாழ்த்தினான் உய்யங்கொண்டான்
பகைவனின் வருகை சொல்ல புயல் போல் வந்தான் புரங்காட்டான்.
பகையான் படையுடன் வரும் செய்தி பகிர்ந்தான் பணிபூண்டான்
எடுத்துரைத்தான் பேரறிவு ஒளிகொன்டான்
கொதித்தெழுந்தான் அரசுக்குடையான்.
அண்டமும் நடுங்க ஆவேசம் கொண்டான் அடங்காபிரியன்
சிலிர்த்தெழுந்தான் சிலுப்பியன்.
போர் ஒன்றே முடிவு என்றான் போர்பொருக்கியான்
களம் கான துடித்தான் காங்கேயன்
இராசதந்திரம் பகின்றான் இராசகண்டியன்
இசைவுடன் கண் அசைத்தான் இராசப்பிரியன்
ஒற்றையர் படை தந்தான் ஒற்றையன்
எதிரியின் பலம் படித்தான் எண்ணாட்டுப்பிரியன்
தலை அசைத்து ஆமோதித்தான் ஆளியான்
போர் விளைவினை விவாதித்தான் போர்முட்டியான்
கலங்காமல் போர் இலக்கனம் தொகுத்தான் கரைமீண்டான்
காவலில் தன் பங்கை எடுத்துரைத்தான் காவல்குடியான்
மதிணுற்பம் பகின்றான் மழநாட்டு மழவராயன்
அணிகலன் திரட்டினான் ஐந்னூற்றுப்பிரியன்
சேனை திரட்டினான் சேதி நாட்டான் சேதிராயன்
நம் படை பலம் பகன்றான் வில்லேந்தி வில்லவராயன்
வியூகமமைதான் விஞ்சிராயன்.
துனை நின்றான் மதினுட்ப இராசாளியன்
தனிப் படை அமைத்தான் தனிராயன்
வெண்ணியில் களம் காண்போம் என்றுரைத்தான் வெண்ணுமலையான்
வெண்ணியில் வாகைப்பறந்தலை தேர்ந்தெடுத்தான் வாண்டையான்
களவழி அமைத்தான் காடுவெட்டி களனி கண்ட காடுவெட்டியான்
நெடுங்களம் அமைத்தான் நெடுவாண்டான்
அமுது பொங்க வழி வகுத்தான் உழுக்கொண்டான்
நீர் நிலைகள் காண விரைந்தான் விசலாண்டான்
மருந்தகம் அமைந்திட நிலம் தேடினான் நிலங்கொண்டான்
வைதியர் பட்டியல் பரைசாற்றினான் வைதும்பராயன்
வடக்கே வாற்படை அமைத்தான் வங்கத்தரையன்
தென் திசையில் அணி படைத்தான் தெங்கொண்டான்
மேற்கு மேட்டில் காத்து நின்றான் மேற்கொண்டான்
கிழக்கில் கிளர்தெழுந்தான் கிளாமுடையான்
குதிரைப்படையுடன் குடிகொண்டான்
காலால்படையுடன் கார்கொண்டான்
விற்படையுடன் வில்லத்தேவன்
வாட்படையுடன் வாள்கொண்டான்
ஈட்டியுடன் ஈழத்தரையன்
யானைகளுடன் சாமுத்திரியன்
புரவி மேல் புன்னகை பூத்தான் புலிக்கொண்டான்
தலைமை ஏற்றான் அச்சமறியான்
ஆத்திமாலை புனைந்து ஆர்பரித்தான் ஆர்சுத்தியான்
வீரத்திலகமிட்டான் வீரமுண்டான்
சங்கொலி எழுப்பினான் சங்கப்பிரியன்
படைகள் களமிறங்க வாள் வீசினான் வாணாதிராயன்
ஆயிரக்கணக்கான மறவர்கள் பங்கேற்க களம் கண்டான்ஆயுதபிரியன்
மோதல் வெடித்தது எங்கும் கள்ளர்குல மறவர்களின் ஆரவாரம்
முதல்நாள் சேரன் தன் பலம் இழந்தான் முழக்கமிட்டான் சேனாதிபதியான்
இரண்டாம் நாள் பாண்டியன் தன் முடி இழந்தான் கர்ஜித்தான் தஞ்சிராயன்
மூன்றாம் நாள் பதினொருவேளீர்களும் படை இழந்தனர் வாகை சூடினான்
சூரக்கோட்டையான்
எதிரிகள் படை இழந்து ஓட எழுச்சியுடன் நின்றான் ஏனாதிகொண்டான்
புலிக்கொடி அசைத்து கொண்டாடினான் கொடிகொண்டான்.
போர் முடிந்து வெற்றி முரசு கொட்டினான் முடிகொண்டான்
மன்னனுடன் கலங்கிய கண்களுடன் களம் வந்தான் கலிங்கராயன்
மடிந்தோர் முன் மண்டியிட்டான் மாமன்னன்
செங்குருதி நீக்கி நீராட்டினான் செயங்கொண்டான்
மலர் தூவி மரியாதை செய்தான் மன்றாயன்
ஆத்திமாலை அணிவித்தான் மாலையிட்டான்
சிதையிட்டான் சிவலிங்கதேவன்
நீர் தெளித்தான் மன்னவன் அரசுடையான்
கூடி நின்றோரை கைகூப்பி நின்றான் கூராயன்
கல் நட்டான் கங்கைநாட்டான்
கண்ணீர் விட்டான் கலங்கா கருப்பூண்டான்
அனைத்துக்கும் ஆணையிட்டு அடங்கி நின்றான் அண்டங்கொண்டான்
பகைவரின் உயிரில்லா உடல் அனைத்திற்கும் சிதையூட்ட ஆனையிட்டான்
பெருவளத்தான்.
செவ்வனே செய்து முடித்தான் செம்மைகொண்டான்
பரிவாரங்களுடன் களம் அகன்றான் தலைநகர் நோக்கி அரசுக்குடையான்.
வெற்றியின் விலை சொன்னான் வெற்றியன்
தலை அசைத்து ஆம் என்றான் தானாதிபதியான்
அரன்மனை காத்து நின்றான் காவாளியான்
வெற்றிச்செய்தி செப்பினான் வெள்ளங்கொண்டான்
மனமகிழ்ந்தான் மந்திரியான்
மங்களம் பாடினான் மதில்சுற்றியான்
முரசு கொட்டி முழக்கமிட்டான் முனையதரையன்
நாடே வீர மறவர்களை வரவேற்க காத்திருக்க தலைமை ஏற்றான் நாட்டரசன்.
தலைநகரில் கால் பதித்தான் மாமன்னன் கரிகாலன்.
மரித்த மறவர்களின் மனை நோக்கி நடந்தான் பெருவளத்தான்
உயிர் நீத்த மறவர் வாரிசுகளுக்கு ஆறுதல் பகிர்ந்து கொடை
அளித்தான்அரசுக்குடையான்
புண்பட்ட மறவர்களுக்கு ஆவண செய்ய பணிக்கப்பட்டான் புண்ணைகொண்டான்
அரன்மனை நோக்கி நகர்ந்தது மன்னனின் தேர் சாரதியானான் அங்கராயன்
நாடே விழாக்கோழம் கண்டது தலைமை ஏற்றான் சோழப்பிரியன்
அரன்மனை வாயிலில் வரவேற்றான் வணங்காமுடிபண்டாரத்தான்
வென்ஆத்தி மலர் தூவி வரவேற்றான் வெற்றிகொண்டான்
வாழ்த்துரை வழங்கினான் வாயாளியான்
பாமாலை பாடினான் பத்துடையான்
வெண்சாமரை வீசினான் விளப்பன்
இசைமழை பொழிந்தான் இராங்கியன்
உடலில் நல்ல மாற்றங்கள் நிகழ...
சிவப்பு அழகு வேண்டுமா? என்று கேட்டு, எத்தனையோ வகையான கிரீம்கள்
விளம்பரம் செய்யப்படுகின்றன! உடற்பயிற்சியே செய்யாமல், நொறுக்குத்
தீனிகளையும் கைவிடாமல், உடல் எடை குறையும் என்றுகூறி விதவிதமான
மாத்திரைகள்- தைலங்கள் விற்பனையாகின்றன! எப்போதும் ஒலி- ஒளிபரப்பாகும் அழகு
குறிப்புகளைப் பார்த்து, அதை அரைகுறையாக கடைபிடித்து உலக அழகி
ஐஸ்வர்யாராய் போல் ஆக வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள்
விரும்புகிறார்கள்.
அப்படி ஆசைப்படுகிறவர்களுக்கு தம் உடலில் இருக்கும் ஒரு பிரதான உறுப்பே அழகு, ஆரோக்கியத்தின் ஊற்று என்பது தெரியுமா?!
மனித உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. மனித உடலில் இருக்கும் பஞ்ச பூதங்கள்
பிரபஞ்ச சக்தியிலிருந்து தனக்கு தேவையான பஞ்ச பூத சக்தியை வாங்கி உடலை
புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கின்றன. எப்படியென்றால்...
நம்
தோலுக்கடியில் மிக துல்லியமான பாதை ஒன்று உள்ளது. இதை உயிர்ச்சக்தி பாதை
என்று கூறுவார்கள். இதன் வழியேதான் பஞ்ச பூத சக்தி ஊடுருவி சென்று
உறுப்புகளைச் சேரும். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு நேரத்தில் மட்டுமே
இந்த உயிர் சக்தி பிரதானமாய் செல்லும். உதாரணமாக நுரையீரலுக்கு அதிகாலை 3 -
5 மணி, மண்ணீரலுக்கு காலை 9.11 மணி. இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும்
குறிப்பிட்ட நேரம் வகை செய்யப்பட்டிருக்கிறது.
நாம் உண்ணும் உணவு
ஜீரணம் ஆவதற்கான செரிமான செயலாக்கம் வயிற்றில் மட்டுமே நடைபெறுவதில்லை.
செரிமான செயலாக்கம் ஆரம்பிக்கும் இடம் வாய். வாயில் உள்ள உமிழ்நீர்தான்
செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது.
உமிழ்நீரில் இருக்கும்
நுண்கிருமிகள் உணவில் கலந்து செரிமான வேலையை துவங்கும். மனிதனின் உடல்
பஞ்சபூத கலவை என்பதுபோல நாக்கிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன. இதனால் மிக
நிதானமாக நாக்கின் எல்லா பகுதியிலும் உணவுபடும்படி முழுக்கவனம் செலுத்தி
மென்று உண்ணுதல் வேண்டும்.
ஒவ்வொரு பஞ்சபூதமும் ஒரு சுவையோடு
தொடர்பு உடையது. நெருப்பு- கசப்பு சுவையுடனும், மண்- இனிப்பு சுவையுடனும்,
காற்று - துவர்ப்பு மற்றும் காரச் சுவையுடனும், நீர்- உப்பு சுவையுடனும்,
ஆகாயம் - புளிப்பு சுவையுடனும் தொடர்புடையது.
இவைகளை நாம்
புரிந்து கொண்டு சாப்பிட பழகிக் கொண்டால் குறைவாக சாப்பிட்டாலே நம்
உடலுக்கு போதுமான சக்தி கிடைத்துவிடும். உதாரணமாக 4 இட்லி
சாப்பிடுபவர்களுக்கு 2 இட்லியே போதுமானதாக இருக்கும்.
அழகையும்,
ஆரோக்கியத்தையும் விரும்புகிறவர்கள் காலை உணவை 7- 7.30-க்குள் மேலே சொன்ன
முறைப்படி நிதானமாக, மென்று சாப்பிட வேண்டும். சமைக்காத உணவுகள், பழங்கள்,
காய்கறிகள், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் ஊறவைத்த பருப்பு வகைகள்
போன்றவைகளை காலை உணவில் சேர்க்கவேண்டும். பருப்பு வகைகளை நன்றாக அலசி முதல்
நாள் இரவே மண் சட்டியில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் 7 மணிக்கு
அந்த தண்ணீரை பருகிய பின்பு ஒவ்வொன்றாக கடித்து மெதுவாக மென்று சாப்பிட
வேண்டும்.
இப்படி சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்?
வயிறு பிரபஞ்சத்திலிருந்து சக்தியை காலை 7 முதல் 9 மணிவரை பெறுகிறது.
அதனால் 7 மணிக்கு ஆரம்பித்து நிதானமாக 7.30-க்குள் காலை உணவை மென்று
முடிக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீர் பருக வேண்டும்.
பின்பு 7.45-லிருந்து காலை 11 மணி வரை தண்ணீர் கூட பருகக்கூடாது.
ஏனென்றால் மண்ணீரல் சக்தியை உள்வாங்கும் நேரம் காலை 9.11 வரை. இது மிக
அளப்பரிய சக்தியாகும். அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தி அதற்கு முழுமையாக
கிடைக்க, அந்த நேரத்தில் எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும்.
மண்ணீரல் பஞ்சபூதத்தில் மண்ணை சார்ந்தது. மண்ணீரல் சக்தியை பெற்று உடலில்
சேமித்தால் அது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும்.
அப்படி நச்சுக்கள் வெளியேறும்போது நம் தோல் அதற்குரிய மினுமினுப்பை பெறும்.
அழகு தானாக வரும். இதை பின்பற்றினால் 6 மாதத்திற்குள் உடலில் நல்ல
மாற்றங்கள் நிகழும்.
மண்ணீரலின் சக்தி உடலுக்குள் பல விதங்களில்
பயன்படும். ஒரு சில நேரங்கள் சாப்பிடாமல் இருந்தாலும் இந்த மண்ணீரல்
உடலுக்கு தேவையான சக்தியை மாற்றி கொடுக்கும். இதைதான் சித்தர்களும்,
முனிவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் முதலில் மண்ணீரலின் சக்தியை
சேமித்து பின் வருடக்கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார்கள். அப்போது
மண்ணீரல்தான் தேவையான சக்தியை உடலுக்கு அளித்துக்கொண்டே இருக்கும்.
அது மட்டுமல்லாமல் நம் உடலில் பிற உறுப்புகள் தொய்வடையும்போது மண்ணீரல்
தன் சக்தியை அதற்கு தேவையான சக்தியாக மாற்றிக் கொடுக்கும். உதாரணமாக
சிறுநீரகம் பஞ்ச பூதங்களில் நீரை சார்ந்தது. சிறு நீரக செயல்பாடு
குறையும்போது மண்ணீரல் அதற்கு தேவையான நீர் சக்தியாக மாறி உதவும்.
மதிய உணவை 1-2 மணிக்குள்ளும், இரவு உணவை 7-8 மணிக்கும் சாப்பிட வேண்டும்.
மென்று சாப்பிட்டு 15 நிமிடம் கழித்து தண்ணீர் பருக வேண்டும். குறைந்தது 3
மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும். சாதாரணமாக 6 மணி நேரம் முதல் 8 மணி
நேரம் வரை தூங்குவது நல்லது. இவ்வாறு செய் தால் அழகையும் ஆரோக்கியத்தையும்
பேணலாம்.
Subscribe to:
Posts (Atom)