Wednesday, 10 July 2013

துளசி

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 4 கோடி. மேலும் சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. சர்க்கரை நோயால ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சகட்டமாக முதலில் பாதிக்கப்படுவது இருதயம்,கிட்னி,கண்கள்,நரம்புகள் மற்றும் பாதம்.பொதுவாக துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் மூலம் அலர்ஜி மற்றும் ஆஸ்த்மா போன்றவைகள் குணமாவது நாம் ஏற்க்கனவே அறிந்த ஒன்று.

துளசி இலைகள் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறைக்க மட்டுமின்றி உடல் உறுப்புகளையும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் என ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர்.ஜி. முரளி கிர்ஷ்ணன் தலைமையிலான மாணவர்குழு மேற்கொண்ட ஆய்வில் துளசி இலையில் உள்ள ஆசிமம் சாங்க்டம் என்ற சத்து சர்க்கரை நோயை போக்கிவிடும் என கண்டுபித்து ஆய்வு பூர்வமாக நிருபித்துள்ளனர்.

இந்த குழு முதலில் எலிகளை கொண்டு அதற்க்கு ஸ்ரேப்டோசிசின் என்ற ரசாயனத்தை செலுத்தி அதனுடைய சர்க்கரை அளவை அதிகபடுத்தி பின்ன இந்ததுளசி இலைகளில் கண்டு பிடித்த் மருந்தை ஒரு நாளுக்கு ஒரு முறை என 30 நாளும் செலுத்தி வந்தனர். முடிவில் உடலில் உள்ள சர்க்கரை அளவு குறைவது மட்டுமின்றி உடல் உறுப்புகளான கிட்னி, மற்றும் லிவ்வர் பாதிக்கப்படாமல் பாத்காக்கப்பட்டதையும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் குழு ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்
நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

கோடை காலம்த்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.
சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்குவது கடினம்.

துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு

இன்னும் நிறைய மருத்துவம் உடையது துளசி .

No comments:

Post a Comment