Wednesday, 29 January 2014

ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்


ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்...! ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும ், தசைகளை ரிலாக்ஸ் செய்யும். எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்ப்டும் போது தகுந்த பயனை அளிக்கும். சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும். ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.

ரத்தக் கொழுப்பை சீராக வைத்துக் கொள்ள


ரத்தக் கொழுப்பை சீராக வைத்துக் கொள்ளவும், இதயம் என்றும் பழுதின்றி இயங்கவும், பூண்டு மற்றும் வெங்காயம் மிகவும் அவசியம்...! சின்ன வெங்காயம் மற்றும் சிறிய பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். பல்லாரி வெங்காயத்தை விட சிறு வெங்காயம் பலம்டங்கு பலன்கள் கொண்டது. மலைப்பூண்டை விட சிறு பூண்டில் சத்துக்கள் அதிகம் உள்ளது. பூண்டில் உள்ள அலிசின் என்ற சத்து மாரடைப்பைத் தடுக்கும். மேலும் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பூண்டையும் வெங்காயத்தையும் ஒதுக்காமல் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு குட் பை சொல்லுங்கள்.

பூவரசம் பூ



அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தரும் பூ பூவரசம் பூவைச் சம அளவு கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துத் தேமல் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் தேமல் மறைந்து தோல் மினுமினுப்படையும்.

Saturday, 25 January 2014

சர்க்கரை நோய்


சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும். சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா!!! அடிக்கடி சிறுநீர் கழித்தல் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது. அதீத தாகம் சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு எழும். உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதினால், அந்த நீர் இழப்பை ஈடுகட்ட வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தைகளும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. மங்கலான கண் பார்வை அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதினால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும். மேலும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும். சர்க்கரை வியாதிக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அது கண் பார்வை குறைவை உண்டாக்கும். ஏன் சில சமயங்களில் கண் பார்வையை கூட பறித்து விடும். எடை குறைதல் இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற்படுகிறது. சோர்வு சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும். கைகள் மரத்துப் போதல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும். சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குணமாகும் இது சர்க்கரை நோய்க்கான மிகப் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்றலை இழந்துவிடும். திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்கள் குணமடைவதை தாமதப்படுத்தும். சரும வறட்சி புறநரம்பு மண்டல கோளாறு காரணமாக, வியர்வை சுரப்பியின் சுழற்சி மற்றும் இயக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மேற்புற சருமம் வறட்சியடைந்து, அரிப்பு ஏற்படும். எப்போதும் பசி இருப்பது போல் தோன்றும் நீங்கள் எவ்வித கடின உடற்பயிற்சியை மேற்கொள்ளாத போதும் அல்லது நிறைவாக சாப்பிட்டிருந்தாலும் கூட, எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான். ஏனெனில் சர்க்கரை நோய், குளுக்கோஸை உயிரணுக்களுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இந்நிலையில் நீங்கள் உண்ணும் உணவை ஆக்க சக்தியாக மாற்றும் திறன் உங்கள் உடலுக்கு இல்லாமல் போய்விடும். அதனால் உங்கள் உயிரணுக்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உருவாகும். வீக்கமடைந்த ஈறுகள் கிருமிகளில் பெரும்பாலானவை வாய் மூலமாகவே உடலுக்குள் நுழைகின்றன. சர்க்கரை நோய் இத்தகைய கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை குறைக்கும். இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த ஈறுகள், தாடை எலும்புகளின் தேய்மானம் மற்றும் நாளடைவில் பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கும். சில சமயம் வாய்க்குள் புண்களையும் உண்டாக்கும். சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

செவ்வாழைப் பழத்தின் சிறப்புகள்...




திருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம்.


வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.


பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.


கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.


பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

Friday, 24 January 2014

வைட்டமின் E

வைட்டமின் E உபயோகத்தால் உண்டாகும் நன்மைகள் மற்றும் குறைபாடுகளினால் ஏற்படும் விளைவுகள் :-

மனித உடலுக்கு சக்தியைக் கொடுப்பது வைட்டமின்கள்தான். உணவின் மூலமே இந்தவைட்டமின்கள் அதிகளவு உடலுக்குக் கிடைக்கிறது. வைட்டமின்கள் மொத்தம்பதின்மூன்று உள்ளன. இவற்றில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், நீரில்கரையும் வைட்டமின்கள் என இரு வகைகள் உள்ளன.

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் உடலின் தேவைக்கு ஏற்பஉபயோகப்படுத்தப்பட்டு, மீதமுள்ளவை கொழுப்பு பொருட்களாக கல்லீரலில்சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் நீரில் கரையும் வைட்டமின்கள் உடலின்தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளப்பட்டு மீதி கழிவுகள் மூலம் வெளியேற்றப் படுகிறது.

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்


1. வைட்டமின் ஏ

2. வைட்டமின் டி

3. வைட்டமின் இ

4. வைட்டமின் கே

வைட்டமின் E உடலில் கலக்கும் முறை

வைட்டமின் E உள்ள உணவுப் பொருட்களை உண்ணும் போது, அவை சிறுகுடலில் உள்ளஉறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்பட்டு அடிபோஸ் திசுக்களில் சேகரிக்கப்படுகிறது.பின் அவை தேவைக்கேற்ப உபயோகிக்கப்படுகிறது.

வைட்டமின் E அதிகமுள்ள உணவுப் பொருட்கள்


1· பருத்தி விதை எண்ணெய்

2· சோள எண்ணெய்

3· சூரியகாந்தி எண்ணெய்

4· சோயாபீன்ஸ்

5· முட்டைகோஸ்

6· சிறுகீரை

7· ஆப்பிள் விதைகள்

8· பட்டாணி கடலை

9· ஈஸ்ட்

10. பால் : ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.

11. சோயா : உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.

12. தானியங்கள் : எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.

13. காளான் : அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)

14. நிலக்கடலை : நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.

15. மீன், பருப்பு வகைகளைப் பொரித்து உண்பதை விட வேகவைத்து உண்பதே மிகச்சிறந்தது. வைட்டமின் 'ஈ' (E) சத்து இவற்றில் அதிகம் உள்ளது. சமைத்தவுடன் சாப்பிடுவது சாலச்சிறந்தது.

வைட்டமின் E-ன் உபயோகத்தால் விளையும் நன்மைகள்


1· இரவில் கண்டதசையில் எற்படும் தசைப்பிடிப்பு (Nocturnal Muscle cramps) - இது வைட்டமின் E சத்துள்ள உணவுகளை உட்கொள்வதால் குறையும்.

2· ரத்த நாளத்தில் கொழுப்பினால் ஏற்படும் அடைப்புகளை கரைக்கும் தன்மை (Atherosclerosis) வைட்டமின் E க்கு உண்டு.

3· மார்பகத்தில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகளை (Fibrocystic breast disease) கரைக்கும் தன்மை வைட்டமின் E க்கு உண்டு.

வைட்டமின் E குறைவினால் உண்டாகும் நோய்கள்:

தசைவாதம் (Muscular dystrophy)

இன்றைய உலகில் பெரும்பாலான குழந்தைகள் தசைவாதம் என்னும் நோயால் அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் E சத்து குறைவதால் தசைகளில் உள்ளகொழுப்புச் சத்து குறைந்து போகிறது. இதனால் தசைவாதம் உண்டாகிறது. இந்நோய் தீருவது மிகவும் அரிதாகும்.


இரத்தச் சோகை (Haemolytic anaemia)

வைட்டமின் E சத்து குறைவதால் இரத்த சிவப்பணுக்கள் அழிந்துபோகின்றன. இதனால் இரத்தச் சோகை உருவாகிறது. இரத்தச் சோகையைப் போக்க வைட்டமின் E சத்து அதிகமுள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


கல்லீரல் தாபிதம் (Dietary Hepatic necrosis)

கல்லீரலில் உள்ள திசுக்கள் அழிவதால் இந்நோய் வரக்கூடும். எனவே இவ்வகைநோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வைட்டமின் E கலந்த உணவை உட்கொள்ளவேண்டும்.

வைட்டமின் E சத்தானது மலட்டுத்தன்மையை குறைத்து மகப்பேறு ஏற்படச் செய்யும். இந்த சத்து குறையுமானால் மலட்டுத்தன்மை உண்டாகும்.

அண்மையில் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் மூளையில் உண்டாகும் திடீர் அதிர்வை தடுக்கவும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும் வைட்டமின் E மிகவும் தேவையென கண்டறிந்துள்ளனர்.

தேன்


தேன்...! தேன்... கிட்டத்தட்ட 8,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கும் இனிப்பு. வெள்ளைச் சீனியைத் தொலைக்க விரும்புவோரின் முதல் தேர்வு. தேனும் இனிப்புதானே என்போருக்கு ஒரு செய்தி. இனிப்பைத் தாண்டி ஏராளமான நலக் கூறுகள்கொண்ட அமிழ்தம் அது. 200-க்கும் மேற்பட்ட நொதிகள், இரும்பு முதலான கனிமங்களுடன் கூடிய இந்தக் கூட்டுச் சர்க்கரையில், தேனீ எந்தப் பூவின் மகரந்தத்தில் இருந்து தேனைச் சேகரித்ததோ, அந்த மலரின், தாவரத்தின் மருத்துவக் குணத்தையும் தன்னுள்கொண்டிருப்பதுதான் தனிச் சிறப்பு. சாதாரணமாக வெள்ளைச் சீனி, புண்ணை அதிகரிக் கும். தேன், ஆறாத புண்ணையும் ஆற்றும். குறிப்பாக தீப்புண்ணுக்கு நல்ல தேன் முதலுதவி மருந்து. தேன் ஓர் எதிர் நுண்ணுயிரி. புற்று நோயைக்கூடத் தடுக்கக்கூடிய வல்லமை தேனுக்கு உண்டு என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

சவுச்சவ் Chayote

சவுச்சவ்வின் (Chayote) மருத்துவ குணங்கள்:- சவுச்சவ் இதய நொய்யாளிகளுக்கு நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும். சவுச்சவ் பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்ய படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதை பற்று இருப்பதால் இதைல் சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகுவும் சாப்பிடலாம். 1. இதயத்திற்கு நல்லது. . . (Homocystein) ஒரு அமினோ ஆஸிட் ஆகும், இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ ஆஸிட் வளர்வதை 'B' விடமின் தடுக்கிறது. இந்த Folate எனப்படும் 'B' விடமின் சவுச்சவ்வில் நிறைந்து இருக்கிறது. 2.புற்றுநோயை தடுக்க உதவுகிறது(வைட்டமின் சி) . . . வைட்டமின் சி, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ்(antioxidants) ஆகும். இந்த சாரம் நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசேய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சவுச்சவ்வில் வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும், இது . 17% வழங்கும். 3. உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese). . . சவுச்சவ் முட்டை போடிமாஸ்யை காலை உணவாக உன்ணுங்காள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மாங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளத்தால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை எநர்ஜீ(Energy) ஆகா மாற்றும். 4. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber). . . குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் சவுச்சவ்வை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள். 5. தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும் (Copper). . . தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்தும் அயோடின்க்கு, தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும். 6. ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது (Zinc). . . சவுச்சவ் துத்தநாகம்(.) ஒரு நல்ல மூலமாகும். தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஹார்மோன்கலை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும். 7. எலும்பு இழப்பு தடுக்க உதவுகிறது (Vitamin K). . . உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை சவுச்சவ் சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் கே மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 8. இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது (Potassium). . . சவுச்சவ் உங்கள் உடலின் தினசரி படாஸீயம் தெவயை பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது. 9. மூளை வார்சிக்கு நல்லது (Vitamin B6). . . ஆய்வின் பங்கேற்பாளர்கள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு மூளை நினைவக திறனை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள் 10. கால் தசைப்பிடிப்புக்கலை தடுக்க உதவுகிறது

Thursday, 23 January 2014

நரைக்கு எண்ணெய் குளியல்

சிலர் கொஞ்சம் வெள்ளை முடி தோன் றினாலே பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நமக்கு வயதாகி விட்டது என்று தோன்றும்.  சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. அதற்கு மருதாணி தலைக்கு போட்டு கொள்வது நல்லது. இளநரைக்கு எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே  தீர்வு காணலாம். இளநரை உள்ளவர்கள் மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன், நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

(கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதெல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள். இதை மேலே  குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு  இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து குளிக்கவும்.

இந்த கலவையை தொடர்ந்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். வாரம் இருமுறை நல்லெண்ணை தேய்த்து  எண்ணெய் குளியல் போட்டாலும் நரை முடி வருவதை தவிர்க்கலாம். இது உடல் சூட்டையும் தணிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நல்லெண்ணை  தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் கூட இளநரை வராமல் இருக்கும்.

செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நிறைய எண்ணெய் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை  குளித்தால் முடியும் வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும். முடி செம்பட்டையாகாமல் இருக்கும் கருவேப்பிலை பொடி, கறிவேப்பிலையை உணவு  அதிக அளவில் சேர்த்து கொண்டால் தலை முடி கருகருவென வளரும். நரைமுடி வருவதையும் தவிர்க்கலாம்.

தகவல்

தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)

பேடன் பவல், சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)

ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம், லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)

முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)

இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)

Wednesday, 22 January 2014

சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி

ஜெர்மன்  உலக சாதனை...! சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜெர்மன் உலக சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜெர்மன் தனது அணு மின் திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது. இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜெர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது. இந்தாண்டு ஜெர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது. இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்‌கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்) இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ஜெர்மன் ‌ சாதனை படைத்துள்ளது. நம் இந்தியா....... ? நம் தமிழ் நாடு.....???? ஒட்டு மொத தமிழகத்துக்கு 12-13 ஆயிரம் மெஹா வாட் மின்சாரம் மட்டுமே...தேவை.... 22 ஜிஹா வாட் மின்சாரம் இருந்தால் இந்தியாவுக்கு தடை இல்லா மின்சாரம் வழங்க முடியும்....????? மிக குறைந்த செலவிலும்....பாதுகாப்பாகவும்....???