Sunday, 28 December 2014

உங்கள் செல்போனில் IMEI நம்பர் இருப்பது தெரியும்,.? But ICE நம்பர் இருக்கிறதா?


நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும். மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் ICE என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.
ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும். இன்று ஏறத்தாழ அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும். இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட எண்களை ICE1, ICE2, ICE3 ..... எனவும் பதிவு செய்துகொள்ளலாம். இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.
சர்வ தேச அளவில் பின்பற்றக்கூடிய ஓரு நல்ல பழக்கத்தை நாமும் பின்பற்றவோம்.!

Sunday, 14 December 2014

Function Key பயன்கள்


நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்ப்போம்.
F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது.CMOS Setup இலும் பயன்படுகிறது.Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.
F2
இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது.CMOS Setup இலும் பயன்படுகிறது.Boot மெனுவுக்கு செல்ல
Microsoft Word இல் இதன் பயன்கள்:
Alt + Ctrl + F2 –> open a new document in Microsoft Word.Ctrl + F2–> display the print preview window in Microsoft Word.
F3
இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது.MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது.MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.
F4
Find window ஓபன் செய்ய(check in the My Computer )கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)Alt+F4 will Close all Programs.Ctrl+ F4 will close current Program.
F5
Reload or RefreshOpen the find, replace, and go to window in Microsoft WordPowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.
F6
cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.
F7
MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc )Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.
F8
விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்
F9
Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது. அதுபற்றி தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்லவும்.
F10
இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)Shift+F10 - Right Click ஆக செயல்படும்.
F11
இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும்.கணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.
F12
MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.Shift+F12 will Save MS WordCtrl+Shift+F12–MS Word print செய்ய பயன்படும்.

Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி?


Android, iPhone, Windows Mobile போன்ற Smart Phone களை பயன்படுத்தும் நண்பர்கள் பலருக்கு அதில் உள்ள நிறைய Application-களை பிடித்து இருக்கும். அத்தோடு அவை கணினியில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பதும் உண்டு. உண்மையிலேயே அவற்றை கணினியில் பயன்படுத்த முடியும் தெரியுமா? எப்படி என்று பார்ப்போம்.
pokki.com என்ற தளம் இந்த வசதியை வழங்குகிறது. இந்த தளத்தில் சென்று. உங்களுக்கு தேவையான Application-ஐ டவுன்லோட் செய்து நீங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
முதலில் Pokki Application – ஐ நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். Pokki.comமுகப்பிலேயே இதை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும்.
அதை இன்ஸ்டால் ஆகி ரன் ஆகும். இப்போது உங்கள் Task Bar – இல் அதன் icon வந்து இருக்கும்.
மேலே படத்தில் Pokki-யும், அதன் Window-வும் உள்ளது.
இப்போது குறிப்பிட்ட Application- ஐ நீங்கள் தெரிவு செய்து Download கொடுத்தால் அது உங்கள் Task Bar க்கு வந்து சேரும்.
உங்களுக்கு எப்போது, எதைப் பயன்படுத்த வேண்டுமோ அப்போது அந்த App மீது கிளிக் செய்து பயன்படுத்த தொடங்கலாம்.
Smartphone – களில் எப்படி செயல்படுமோ அதே போலவே செயல்படுகிறது.
சில பிரபலமான Pokki Apps.
1. Instagrille
பிரபலமான Instagram ஐ கணினியில் பயன்படுத்தும் அனுபவத்தை தருகிறது. மிகச் சிறப்பாக உள்ள இதில் ஒரு பிரச்சினை கணினியில் இருந்து நாம் படங்களை Upload செய்ய இயலாது. மற்றவர் படங்களை பார்த்து அதற்கு கமெண்ட் போடலாம். விரைவில் Upload வசதி வரும் என்று சொல்லப்படுகிறது.
2. Facebook
Smartphone- களில் எப்படி பேஸ்புக் இயங்குமோ அதே போலவே இயங்குகிறது. NewsFeed, Notifications, Messages, Friend Requests போன்றவற்றை நாம் எளிதாக காணலாம். புதிய Status போடலாம், அடுத்தவர்களுக்கு லைக், கமெண்ட் செய்யலாம்.
யாருடைய Profile-க்கும் நாம் செல்ல முடியாது. அதுதான் இதன் குறை. விரைவில் அதுவும் வரும் என்று நம்புவோம்.
3. Gmail
மிக அழகாக இருக்கும் இது தான் எனக்கு மிகவும் பிடித்த App. நாம் படிக்காத மின்னஞ்சல்களின் எண்ணிக்கையை Taskbar-இல் கட்டுவது அழகோ அழகு.
4. Tweeki
ஜிமெயில்க்கு அடுத்து அழகான Application. Timline, Interactions, Messages என ஒவ்வொன்றும் தனித் தனியாக காட்டப் படுகிறது.
இன்னும் நிறைய Applications உள்ளன. உங்களுக்கு எது தேவையோ அதை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் TaskBar- இல் Right Click செய்து Remove கொடுத்து விடலாம்.

Software எதுவும் இல்லாமல் CD/DVD Burn செய்வது எப்படி?


என்ன தான் Pen Drive, Memory Card என்று வந்துவிட்ட போதிலும் இன்னும் நம்மில் பலர் CD, DVD – களை பயன்படுத்தி வருகிறோம். சில சமயங்களில் அவசரமாக CD அல்லது DVD ஒன்றை Burn செய்ய வேண்டி இருக்கும். ஆனால் நம்மிடம் எந்த மென்பொருளும் இருக்காது. அவ்வாறான சமயங்களில் எப்படி மென்பொருள் இல்லாமல் Burn செய்வது என்று பார்ப்போம்.
Windows 7, Vista:
1. DVD or CD – ஐ கணினியில் Insert செய்து விடுங்கள்.
2. உங்கள் My Computer பகுதியில் உள்ள CD Drive ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
3. இப்போது நீங்கள் எந்த File – களை Burn செய்ய வேண்டுமோ அவற்றை Cd Drive – இல் Drag செய்து விடவும்.
4. இப்போது கீழே படத்தில் உள்ளது போல இடது பக்க மெனுவில் உள்ள படி ரைட் கிளிக் செய்து “Burn to Disc” என்பதை கொடுங்கள்.
5. இப்போது Next என்பதை கிளிக் செய்து Burn செய்ய ஆரம்பியுங்கள்.
6. CD or DVD க்கு உங்கள் பெயர் கொடுக்க வேண்டும் என்றால், Burn செய்யும் முன்பே Rename செய்து விடவும்.
Windows XP:
1. DVD or CD – ஐ கணினியில் Insert செய்து விடுங்கள்.
2. உங்கள் My Computer பகுதியில் உள்ள CD Drive ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
3. இப்போது நீங்கள் எந்த File – களை Burn செய்ய வேண்டுமோ அவற்றை Cd Drive – இல் Drag செய்து விடவும்.
4. இப்போது இடது பக்கம் வரும் “Write these files to CD” என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது CD Writing Wizard பகுதிக்கு வருவீர்கள். அதில் Disc பெயர் கொடுக்கவும். அடுத்து Next கிளிக் செய்யுங்கள்.

வயதானவர்கள் கடைபிடிக்கவேண்டிய உணவு முறைகள் ..!

உலகிலேயே அதிக ஆயுள் உடையவர்கள் ஜப்பானியர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் தெற்கு ஜப்பானில் உள்ள ஓகினாவன் தீவுகளில் வாழ்பவர்கள் கூடுதல் ஆயுளுடன் வாழ்கின்றனர்.
இதற்குக் காரணம் அவர்களது உணவு முறைதான். அப்படி என்னதான் அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால் நிறைய தானிய வகைகள், சோயா. ஆனால் பால் பொருட்களை அவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்கின்றனர்.

வயதாக வயதாக, உடலின் சக்தி குறைகிறது. அதற்கேற்ப ஊட்டச்சத்துகளின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே அந்த சமயத்தில் இதுபோன்ற உணவு முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆயுள் அதிகரிப்பதோடு, முதுமையினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தாமதமாக ஏற்படும்
குறிப்பாக முதுமையில் ஏற்படும் எலும்புத் தேய்மானம், சர்க்கரை நோய், இருதய நோய் ஆகியவற்றின் விளைவுகளை தவிர்க்க முடியும் அல்லது தள் ளிப் போட ஒவ் வொருவரின் உணவு முறையும் பெரும் காரண மாக அமைகிறது.
வயதான பிறகு சிலருக்கு சாப்பாட்டில் அவ்வளவு ஆர் வம் இருக்காது. இதற்கு பல் வேறு காரணங் கள் உள்ளன. ருசி மற்றும் வாச னை போன்ற புலனுணர்வுகள் சற்றே மங்கி விடுவதும், கடிப்பதில் ஏற்படும் சிரமம், சீரணக் கோளாறுகள் போன்றவையும் பசியைக் குறைத்து விடுகின்றன
வயதான காலத்தில் மற்றவர்களை நம்பி இருக்கும் சூழ்நிலையில், தமக்குத் தேவையான உணவை, தேவையான நேரத்தில் பெற முடியாத சூழலும் பல முதியவர்களுக்கு ஏற்படுகிறது. இதுவும் இவர்களது உடல்நலத்தை பாதிக்கும் சூழ்நிலைகளே.
மாறும் தேவைகள் :
1. வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம், இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், அவர்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகளின் அளவும் மாறுபடுகிறது. அவர்கள் அதிகமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
2. ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் செய்துள்ள ஆய்வு தெரிவிக்கையில், வயதானவர்கள் நன்றாக உணவு அருந்தினாலும்..... வைட்டமின் குறைபாடு ஏற்படும் என்கிறது. எனினும் மல்டி - வைட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்வது உணவை விட சிறந்ததாகாது. ஏனெனில் உணவில் உள்ள கூடுதல் நார்ச்சத்துகள், தாவர ரசாயனங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மல்டி வைட் டமினில் இருக்காது.
3. தினமும் 6 முதல் 8 டம் ளர்கள் தண் ணீர் அருந் துவது மிகச்சிறந்த மருத் துவமாகும். ஏனெனில் வயதானவர் களுக்கு தா கம்கூட குறைந்துவிடும். இதனால் களைப்பும், தலை வலியும் ஏற்படும். ஊட்டச்சத்துகள் போன்றே தண்ணீரும் முக்கியமா னதே. உடல் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்ளவும், உடல் செல்களுக்கு ஊட்டச்சத்துகளை கொண்டு செல்லவும் உடலின் நச்சுப் பொருட்களையும் கழிவுகளையும் அகற்றுவதிலும் தண்ணீரின் பங்கு அபரிமித மானது.
4. இறைச்சி வகைகளைக் கைவிட்டு காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். காய்கறிகளை மென்று தின்ன முடியாத முதியவர்கள் காய்கறிகளை சூப் செய்தும் அருந்தலாம். கீரைகள், பழங்களையும் சீராக சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது ஒரு வகைப் பழத்தை உண்ணலாம். அதுவும் நீரிழிவு நோயாளியாக இருப்பின் பழ வகைகளைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை செய்து சாப்பிடலாம்.
5. பால், தயிர், மோர், போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நலம். அதற்காக அறவே எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சரியல்ல.
6. சர்க்கரை, காரம், உப்பு போன்றவை குறைவாக உணவில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவைகளை தேவையை விட பாதி பங்கு அளவிற்கு உங்கள் உணவில் நீங்களே குறைத்துக் கொள்ளுங்கள். இது பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கும்.
7. வாரத்திற்கு இரு முறை கசப்பான உணவுகளான பாகற்காய், சுண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து வந்தால் நீரிழிவு நோயில் இருந்து தப்பிக்கலாம். வெந்தயம், மிளகு போன்றவற்றை தூள் செய்து வைத்துக்கொண்டு அதனை உணவுப் பொருட்களில் சிறிது கலந்து உட்கொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.
8. கை, கால்களை சுத்தமாகவும், அடிபடாம லும் பார்த்துக்கொள்ளவேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் எளிதில் ஆறாமல் போவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
9. குளிர்ச்சியான பொருட்களை இரவு நேரங்களில் தவிர்த்துவிடுங்கள். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத எந்தப் பொருளையும் உட்கொள்ள வேண்டாம்.
10. எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை மட்டும் இரவு நேரங்களில் உட்கொள்ளுங்கள். அதுபோல் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு தானியம் சேர்ந்த உணவுப் பொருளை உட்கொள்வதும், சிறிது தூரம் நடை செல்வதும் சிறந்தது.
நமது உடலை நாம் உண்ணும் உணவின் மூலமே சரியாக வைத்துக்கொள்ள முடியும். அதை விடுத்து மாத்திரைகளையே உணவாக உட்கொள்ளும் அவசியம் நமக்கு வேண்டாமே.

Saturday, 13 December 2014

தொடந்து கணினியில் அமர்ந்து செய்யும் வேலை செய்பவரா நீங்கள்..?


நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.
கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண் டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு பல நம் கண்களுக்கு பலவகையில் சோதனை களைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப் படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடி வமைப்பார்கள்.
20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட் களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.பொதுவாக நிமிடத்திற்கு ஒருமுறை நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.
இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண் களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.
தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.
தேயிலை பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப் பட்ட துணியை, அலுவலகத் திற்குச் செல்கை யில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்தவுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.
வைட்டமின்கள்: ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்.

Thursday, 11 September 2014

நிறுவனங்களுக்குத் தலைவலியாகும் Whatsapp & Viber

ணையம் வந்த பிறகு மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் வந்துள்ளது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்கும் போது ஒரு வகையில் பலருக்கு பயனைக் கொடுத்தாலும் இன்னும் சிலருக்கு இது வினையாக முடிந்து இருக்கிறது. இவ்வளவு நாள் சில விசயங்களில் கொள்ளை அடித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்த கைத்தொலைபேசி நிறுவனங்களுக்கு தலைவலியாகி வருகிறது Whatsapp, Viber போன்ற கைத் தொலைபேசி செயலிகள் (Apps). இது பற்றி பார்ப்போம். Image Credit – www.gamerheadlines.com
முன்பு Whatsapp நிறுவனம், வளர்ந்த நாடுகளில் பிரபலமாக இருந்தது பின் இந்தியாவிலும் பிரபலமாகத் தொடங்கியது. பிரபலமான ஃபேஸ்புக் நிறுவனம் 16+3 பில்லியனுக்கு Whatsapp ஐ விலைக்கு வாங்கியதும் இதன் பயன்பாடு உச்சத்தை அடைந்து விட்டது. தற்போது Whatsapp என்ற பெயரை அடிக்கடி நீங்கள் கேட்க நேர்வதே இதன் பிரபலத்திற்கு சாட்சி. வளர்ந்த நாடுகளில் பிரபலமான போதே Whatsapp பயன்பாட்டால் இங்கிலாந்து கைப்பேசி நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் நட்டம் ஆனதாகக் கூறப்பட்டது. தற்போது எவ்வளோ நட்டம் ஆகிறது என்பதை யோசிக்க மறந்து இதில் இனி லாபம் கிடைக்குமா! என்று நினைக்கத் துவங்கி இருப்பார்கள்.
நான் கடந்த ஒரு இடுகையில் இனி நம்ம ஊரிலும் (தங்கள் கைத் தொலைபேசி நிறுவனத்தின்) குறுந்தகவல் அனுப்புவர்கள் குறைந்து விடுவார்கள், அனைவரும் Whatsapp போன்ற செயலிகளையே பயன்படுத்துவார்கள் என்று கூறி இருந்தேன் ஆனால், இவ்வளவு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தற்போது TRAI தலையிட வேண்டிய அளவிற்கு வந்து விட்டது. எனக்கு மாதம் 900 குறுந்தகவல்கள் இலவசமாக அனுப்ப முடியும் ஆனால், நான் அதிகபட்சமாக 10 தான் பயன்படுத்துகிறேன். மீதி முழுவதும் Whatsapp தான். இனி நம் ஊரிலும் Whatsapp அல்லது இது போன்ற செயலிகளே ஆட்சி செய்யப் போகிறது.

இரண்டு வருடம் முன்பு பலபயன் தொலைபேசி (ஸ்மார்ட் ஃபோன்) இந்த அளவிற்கு அனைவரும் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தோமா! வசதி உள்ளவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்தி வந்தார்கள் தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது. இப்ப யாரைப் பார்த்தாலும் தொலைபேசியில் டொக் டொக்குன்னு தட்டிட்டு இருக்காங்க! எனவே பலர் இவற்றைப் பயன்படுத்துவதால் இது தொடர்புடைய செயலிகளின் பயன்பாடும் அதிகரித்து விட்டது. இதுவே Whatsapp போன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் அதிகரிக்கக் காரணம். ஒரு காலத்தில் Whatsapp என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தேன். “Whatsapp இல்லையா!” என்று இரண்டு வருடம் முன்பு என்னிடம் ஆச்சர்யமாகக் கேட்ட சக ஊழியரின் நினைவு வருகிறது. Whatsapp துவங்கப்பட்ட ஆண்டு 2009 நம்மிடையே பிரலமான ஆண்டு 2014.
தற்போது பண்டிகைக் காலங்களில் குறுந்தகவல் அனுப்பினால் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் நம்ம ஆளுங்க முந்தைய நாளே வாழ்த்து!! செய்தி அனுப்பினார்கள் இதனால், நிறுவனங்களும் பண்டிகை நாளும் அதற்கு முந்தைய நாளும் இரட்டிப்புக் கட்டணம் என்று வசூலித்தார்கள். பண்டிகைக் காலங்களில் எதற்கு இவர்கள் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்க வேண்டும்? இது திருட்டுத்தனம் தானே! இனியெல்லாம் பண்டிகை நாட்களில் இலவசமாக கொடுத்தால் கூட யாரும் பயன்படுத்த மாட்டார்கள். எல்லோரும் இனி Whatsapp போன்ற செயலிகள் தான். தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது பார்த்தீர்களா?!
இதனால் கைப்பேசி நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இதே பரவாயில்லை எனும் நிலை தான் இனி வரப் போகிறது. ஏனென்றால் இன்னும் 2 வருடங்களில் அதிகபட்சம் நான்கு வருடங்களில் (இதே அதிகம்) பெரும்பாலனவர்கள் அழைப்பதற்கும் இணையத்தையே பயன்படுத்தப் போகிறார்கள். தற்போது எப்படி உங்களுக்கு இலவசமாக கிடைக்கும் குறுந்தகவல்கள் பயன்படுத்த அவசியமில்லாமல் இருக்கிறதோ அது போல 100 – 200 நிமிட இலவச அழைப்புகள் கூட குறுந்தகவல் போல பயன்படுத்த அவசியமில்லாமல் இருக்கும். இதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.
தற்போது குறுந்தகவலுக்கு Whatsapp போல, அழைப்புகளுக்கு பலர் Viber பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கும் இணையம் இருந்தால் போதும், உலகம் முழுக்க எவருடனும் இலவசமாகப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் நீங்கள் கைப்பேசிக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வது குறைக்கப்படும். உதாரணத்திற்கு நான் சமீபமாக என் வீட்டில் உள்ளவர்களுடன் பேச Viber பயன்படுத்துகிறேன். முன்பு (சிங்கப்பூரில் இருந்து பேச) மாதம் 2000 ருபாய் செலவாகிறது என்றால் தற்போது 500 தான் ஆகிறது. ஊரில் உள்ள வீட்டு கைப்பேசிக்கு 200 ரூபாய்க்கு இணைய வசதி கொடுத்தால் 1 GB கொடுப்பார்கள், இது போதுமானது. எனக்கு ஏற்கனவே 3 GB கொடுக்கிறார்கள். இதற்கு கைத்தொலைபேசி இணையம் தான் வேண்டும் என்பதில்லை, உங்கள் வீட்டில் இணையம் இருந்து அதில் Wifi வசதி இருந்தால் கூட போதும். தற்போது Viber வசதி இல்லாதவர்களுடன் பேச மட்டுமே எனக்கு செலவாகிறது.
தற்போது கைப்பேசி இணையம் நம் ஊரில் அந்த அளவிற்கு வேகம் இல்லை ஆனால், மோசமில்லை. இன்னும் சில வருடங்களில் நிச்சயம் வேகம் அதிகரிக்கும், அதிகரித்தே ஆக வேண்டும். அப்போது யாரும் பணம் கொடுத்து அழைக்காமல், Viber போன்ற வசதிகளையே பயன்படுத்துவார்கள். Whatsapp இந்த ஆண்டு இறுதியில் குறுந்தகவல் வசதியோடு Viber போல அழைக்கும் வசதியையும் கொண்டு வரப்போவதாகக் கூறி இருக்கிறது. இதன் பிறகு கடும் போட்டியாகி விடும்.
இந்தப் பிரச்சனை நம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதை TRAI உணர்ந்துள்ளது. இதனால் ஏற்படும் நட்டத்தைத் தவிர்க்க Whatsapp, Viber போன்ற நிறுவனங்களுக்கு வேறு வகையில் கட்டணம் விதிப்பார்கள் அல்லது பயன்பாட்டில் விதிமுறைகளைப் புகுத்துவார்கள். இதன் மூலம் தற்போது போல செயலிகளை எளிமையாகப் பயன்படுத்தி விட முடியாத நிலை வரும். இணையக் கட்டணம் அதிகரிக்கலாம். வேறு வகையில் மறைமுகக் கட்டணங்களை விதிக்கலாம் ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கவே முடியாது. எவ்வளவு தடை போட்டாலும் வேறு வகையில் ஏதாவது ஒரு வசதி வந்து கொண்டே இருக்கும் என்பது தான் உண்மை.
தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளுங்கள் அதன் வசதிகளைப் பாதுகாப்புடன் பயன்படுத்துங்கள். உலகில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. எந்த ஒரு இலவசத்தின் பின்பும் ஏதாவது ஒரு மறைமுகக் காரணம் / லாபங்கள் இருக்கும். எனவே இலவசம் என்பதற்காக கண்மூடித்தனமாகப் பயன்படுத்தாமல், எதைப் பயன்படுத்தினால் பாதுகாப்பு என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.
கொசுறு 1
நன்மை இருந்தால் பிரச்சனை இல்லாமல் இருக்குமா! தற்போது Whatsapp பிரபலம் அடைந்து வருவதால் பலரும் புது குழுக்களை உருவாக்கி மற்ற நண்பர்களை இணைத்து வருகிறார்கள். இது பெரும் தொல்லையாக உருவாகி வருகிறது. பலருக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கிறது ஆனால், இதை தடுக்கவும் வழி இருக்கிறது. தற்போது Whatsapp ல் எத்தனை குறுந்தகவல் அனுப்பினாலும் கட்டணம் இல்லை என்பதால், சிலர் ஒரே குறுந்தகவலில் அனுப்பக்கூடிய செய்தியைக் கூட 4 குறுந்தகவல்களாக அனுப்புவார்கள். Alert நிறுத்தி வைக்கவில்லை என்றால் “டின் டின்” என்று குறுந்தகவல்கள் சத்தமாகக் கேட்டு கடுப்பேத்தும்.
சுருக்கமாக, சரியாகப் பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம், தெரியாதவர்களுக்கு இவை தொல்லை. தொழில்நுட்பம் எப்போதுமே பல வசதிகளைக் கொடுத்து தொல்லைகளை தவிர்க்கவும் உதவுகிறது. எனவே இவற்றை முறையாகப் பயன்படுத்தினால் நமக்கு லாபமே!
கொசுறு 2
டெல்லி காவல் துறையினர், லஞ்சம் வாங்கும் காவல் அதிகாரிகளைப் பற்றி புகார் கொடுக்க Whatsapp முறையைக் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் லஞ்சம் கேட்பதைக் காணொளி எடுத்து இவர்கள் கொடுத்துள்ள கைத்தொலைபேசி எண்ணிற்கு அனுப்பினால் நடவடிக்கை எடுக்கிறார்கள். இதற்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. நாம் புகார் கொடுக்க நேரடியாக யாரையும் அணுகத் தேவையில்லை எனும் போது இது எளிதாகி விடுகிறது. எவரும் லஞ்சம் வாங்குபவரை காணொளி எடுத்து அனுப்ப முடியும். ஒலிப் பதிவையும் அனுப்பலாம். இதில் கூறப்பட்டுள்ளது உண்மையா என்று உறுதி செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சமூகத்தளங்கள் வந்ததில் இருந்து பலருக்கு குடைச்சல் ஆகி விட்டது. சென்னையில் ஒருவரிடம் குடித்து விட்டு வண்டி ஓட்டுகிறாரா என்ற சோதனையில் அநாகரீகமாக நடந்து கொண்ட காவல் துறை அதிகாரியை காணொளி எடுத்து, அதை பாதிக்கப்பட்டவர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். இது காட்டுத் தீயாகப் பரவி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலும் இந்த Whatsapp முறையைக் கொண்டு வரலாம், நன்கு வரவேற்பு இருக்கும்.

50 இலட்சம் ஜிமெயில் அக்கவுண்ட்டுகள் ஹேக் செய்யப்பட்டன, உங்களுடைய மெயில் திருடப்பட்டதா என்று சரி பாருங்கள்!

50 இலட்சம் ஜிமெயில் அக்கவுண்ட்களின் பாஸ்வேர்ட்கள் ரஷ்யாவின் ஆன்லைன் ஃபோரம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. - See more at: http://www.satrumun.net/2014/09/5-million-gmail-passwords-leaked-check.html#sthash.VyOga3e0.dpuf

கூகிள் தனது சர்வர்களில் யாரும் நுழைந்து எதையும் திருடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் வெளியிட்ட 50 இலட்சம் பாஸ்வேர்களில் 60% பாஸ்வேர்ட்கள் இன்னும் வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர். 
ஹேக்கர்கள் ஹேக் செய்த பாஸ்வேர்ட்களில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டும் உண்டா என்று இந்த லிங்க்கில் சென்று பார்க்கலாம், இந்த லிங்கில் சென்று உங்கள் ஜிமெயில் ஐடியை டைப் அடித்தால் உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதா என்று தெரியும், முழு ஜிமெயில் ஐடி தர விருப்பம் இல்லாதவர்கள் உங்கள் மெயில் ஐடியில் மூன்று எழுத்துகளுக்கு பதில் *** அடித்தால் போதும் https://isleaked.com/en 


Tuesday, 2 September 2014

பாலைவனத்தில் கற்கள் நகரும் மர்மம் என்ன?

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் ஓரிடத்தில் பாறைகள் தாமாக இடம் பெயர்ந்து செல்கின்றன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது பெரும் புதிராக இருந்து வந்துள்ளது. அவை இடம் பெயரும் மர்மத்துக்கு இப்போது விடை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பாறைகள் இவ்விதம் இடம் பெயரும் இடத்தின் பெயர் ரேஸ்டிராக் பிளாயா என்பதாகும். இது மரணப் பள்ளத்தாக்கு எனப்படும் பாலைவனத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பெயர் தான் ரேஸ்டிராக்கே தவிர இங்கு ரேஸ் எதுவும் நடப்பதில்லை.
ரேஸ்டிராக் பிளாயா பகுதி. ஒரே சம தரையாக
அமைந்துள்ளதைக் கவனிக்கவும்
அதை ஒரு பாலைவனம் என்றும் சொல்லலாம். ஆனால் மணல் கிடையாது. என்றோ வற்றிப்போன ஏரியின் படுகை என்றும் வருணிக்கலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை செடி கொடி கிடையாது. புல் பூண்டு கிடையாது. விலங்குகளும் இல்லை. மனித நடமாட்டமும் கிடையாது.

ஆனால் இங்குமங்குமாக சிறிய பாறைகள் கிடக்கின்றன. வெடிப்பு விட்ட  தரையில் அந்தப் பாறைகள் சட்டென்று கண்ணில் புலப்படும். பல பாறைகளின் எடை சுமார் 13 கிலோ. 300 கிலோ எடை கொண்ட பாறைகளும் உண்டு.
பல பாறைகள் நகர்ந்துள்ளதால் ஏற்பட்ட தடங்கள்
வானிலிருந்து எடுக்கப்பட்ட படம்.
ஓரிடத்தில் கிடக்கின்ற பாறை பின்னர் பார்த்தால் இடம் மாறியிருக்கும். அந்தப் பாறை நகர்ந்து சென்ற தடம் தெரியும். இவை “கால் முளைத்த” பாறைகள்.ஒன்றல்ல பல  பாறைகள் நகர்ந்து சென்ற தடம் தெளிவாகத் தெரிகிறது. தடத்தை வைத்துச் சொல்வதானால் சில பாறைகள் 1500 அடி அளவுக்கு நகர்ந்துள்ளன.

அந்தப் பாறைகளை யார் நகர்த்தியிருப்பார்கள்? காற்றில் உருண்டு சென்றிருந்தால் இப்போது தெரிகின்ற தடம் ஏற்பட வாய்ப்பில்லை. யாராவது கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்றால் மட்டுமே பாறை நகர்ந்து சென்ற தடம் ஏற்பட முடியும்.
ஒரு பாறை எவ்வளவு தூரம் நகர்ந்து வந்துள்ளது என்பதைக் கவனிக்கவும்.
அப்படி யாரேனும் இழுத்துச் சென்றிருந்தால் அவரது காலடித் தடமும் மண்ணில் பதிவாகியிருக்கும். ஆகவே பாறைகள் தானாகத் தான் நகர்ந்து சென்றிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒன்று அவற்றை நகரச் செய்திருக்க வேண்டும்.

1900 ஆம் ஆண்டிலிருந்தே இந்த மர்மம் குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வந்துள்ளன. எதிலும் மர்மத்தைக் காண விரும்புகிறவர்களோ இது வேற்றுலகவாசியின் வேலையாக இருக்கலாம் என்று கூறினர்.
ஒரே நேர்கோட்டில் நகர்ந்து வந்துள்ள பாறை
ஆனால் இந்தப் பாறைகள் நகருவதை கடந்த காலத்தில் யாருமே நேரில் கண்டதில்லை. காமிராவிலும் இது பதிவாகியது இல்லை.

இந்த நிலையில் தான் நிபுணர் ஜேம்ஸ் நாரிஸ்  அங்கு தானியங்கி காமிராவைப் பொருத்தி விட்டு வந்தார். அது விட்டு விட்டு அவ்வப்போது படம் எடுக்கின்ற காமிராவாகும்.

அந்த காமிரா சரியாக செயல்படுகிறதா என்று சோதிக்க அண்மையில் அவர் ரேஸ்டிராக் பிளாயாவுக்குச் சென்றார். அவருடன் ரிச்சர்ட்  நாரிஸும் சென்றார்.

அங்கு அவர்கள் ஒன்றல்ல சுமார் 60 பாறைகள் தாமாக நகர்வதைக் கண்ணால் கண்டனர். அவை நகர்ந்த போது லேசான சத்தமும் கேட்டது.பாறைகளை நகர்த்தியது வேறு எதுவுமல்ல. நீரில் மிதக்கின்ற பனிக்கட்டி வில்லைகள்தான். தண்ணீர் எங்கிருந்து வந்தது?

பாறைகள் எப்படி நகருகின்றன என்பதை பின்னர் ஜேம்ஸ் நாரிஸ் விவரித்தார்.

ஜோடியாக நகர்ந்து வந்துள்ள பாறைகள்
பாறைகள் நகருவதில் பெரிய மர்மம் எதுவுமில்லை. அந்த இடத்தில் மழை என்பது அபூர்வம். வருஷத்தில் இரண்டு அங்குலம் மழை பெய்தால் உண்டு. குளிர் காலத்தில் இப்படி மழை பெய்தால் களிமண் பூமி என்பதால் இரண்டு மூன்று செண்டிமீட்டர் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்கும்.

அது கடும் குளிர் வீசுகின்ற பகுதியாகும். ஆகவே தேங்கும் தண்ணீரின் மேற்புறம் உறைந்து போகும். உறைந்த பனிக்கட்டி சில்லு சில்லுகளாக நீரில் மிதக்கும்.  தேங்கும் தண்ணீர் குறைவு என்பதால் பாறைகளின் மேற்புறம் தண்ணீருக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

அந்தப் பகுதியில் குளிர்காலத்தில் தென்மேற்கிலிருந்து வட கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசும். இதன் விளைவாக மிதக்கும் பனிக்கட்டி சில்லுகள் பாறைகள் மீது மோதும். இவை மெல்லியவை தான். ஆனால் கெட்டியானவை.

தேங்கும் தண்ணீர் காரணமாக நீருக்கடியில் உள்ள களிமண் தரை சறுக்கிச் செல்வதற்கு உகந்த அளவில் இருக்கும்.  கடும் காற்று பனிக்கட்டி சில்லுகளைத் தாக்கும் போது அவை பாறை மீது மோத பாறைகள் சறுக்கியபடி நகருகின்றன. காற்று விட்டுவிட்டு அடிக்கும் போது ஒவ்வொரு தடவையும் பனிக்கட்டி சில்லுகள் மோதும் போது பாறை சில மில்லி மீட்டர் நகரலாம்.

பின்னர் வெயில் காரணமாக தண்ணீர் ஆவியாகி விடும். பாறைகள் நகர்ந்த இடம் காய்ந்து தெளிவான தடமாகத் தெரியும்.

 குளிர்காலமாக இருக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். மிதக்கும் பனிக்கட்டி சில்லுகள் இருக்கவேண்டும்.கடும் காற்று வீச வேண்டும். இப்படியாக பல நிலைமைகளும் ஒன்று சேரும் போது தான் பாறைகள் நகருகின்றன.

இந்தப் பகுதியானது  சிறிது கூட மேடுபள்ளம் இன்றி நூல் பிடித்தது போல சமதரையாக இருப்பதும் பாறைகள் நகருவதற்குக் காரணமாக உள்ளது.

 பாறைகள் நகரும் சூழ்னிலைகள் உண்டானாலும் அந்தத் தடவை மிகச் சிறிது தூரமே நகரலாம். வேறு சில சமயங்களில் அதிக தூரம் நகரலாம். அல்லது  தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாறைகள் அதே இடத்தில் காணப்படலாம். ஆகவே பாறைகள் இடம் பெயருவது என்றோ எப்போதோ நடைபெறுவதாக இருக்கிறது.. ஆகவேதான் இது யார் கண்ணிலும் படாமல் இதுவரை மர்மமாக இருந்து வந்துள்ளது.

LINK

Monday, 11 August 2014

கள்ளிப்புறா பற்றிய தகவல்கள்

கள்ளிப்புறா(உயிரியல் பெயர்:ஸ்டிக்மாதோப்பெலிய செனேகாளென்சிஸ்) (லாஃபிங்க் டவ்), சிரிக்கும் புறா என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறியவகை புறா இனத்தைச் சார்ந்தது.ஆப்பிரிக்காவின் தெற்கு சகாராப் பகுதிகளிலும்,அரபு நாடுகளிலும்,கிழக்கு ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியா வரையிலும், மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் காணப்படுகிறது. அந்தந்த பகுதிகளில் செவ்வனே இனப்பெருக்கமும் செய்யும் இயல்புடையதாக இருக்கிறன.
இப்புறாவானது, சிறும்புறா இனமாகும்.நீளமான இறகுகளை உடைய இவை, அளவு 25 செ.மீ. இருக்கும். இறக்கைகளும், வாலும் சிவப்பு கலந்து பழுப்பு நிறத்திலும், இறக்கையில் சாம்பல் நிறமும் கலந்து இருக்கும்.தொண்டையில் கரும்புள்ளிகள் காணப்படுகிறது. தலைப்பகுதி இளஞ்சிவப்பிலும், வயிற்றுப் பகுதியில் வெள்ளைநிறப்பரவலும் அமைந்துள்ளது.
இவை குச்சிக்களைக் கொண்டு, கூடுகளை, மரத்தின் மேற்புறத்திலேயேக் கட்டுகின்றன. தனது இணையுடன் கடைசி வரையில் வாழ்கிறது.
விதைகள், புற்கள், தானியங்களை பெரும்பாலும் உண்ணுகின்றன. அவ்வப்பொழுது, சிறு பூச்சிகளையும் உண்ணுகின்றன.
வெள்ளை நிறத்தில், இரு முட்டைகளை மட்டுமே இடுகின்றன

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் தன் நறுமணத்தாலும், சுவையாலும், சத்து பொருட்களாலும் உலகலாவிய புகழ் பெற்றது. இந்த எண்ணெய், அறுவடை செய்யப்படும் ஆலிவ் காய்களின் முதிர்ச்சிக்கு ஏற்ப நிறம் மாறும். ஆலிவ் எண்ணெய் உடலுக்கு அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. 100 கிராம் ஆலிவ் எண்ணெய் சுமார் 884 கலேரிகள் ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.
அதிக கொதிநிலை கொண்டது ஆலிவ் எண்ணெய். 210 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில்தான் ஆவியாகும் என்பதால் உணவுப் பண்டங்கள் விரைவில் சமைக்க உதவியாக இருக்கிறது. அதிக அளவில் லிப்பிடுகள் இதில் உள்ளன. இவை பூரிதமான கொழுப்பு, ஒற்றை பூரிதமாகாத கொழுப்பு, பலபூரிதமாகாத கொழுப்புகளை ஆரோக்கியம் வழங்கும் பொருட்களாக மாற்றி வழங்கும்.
கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். ஆலிவ் ஆயில்கள் எளிதில் கெடுவதில்லை. நல்ல குளிர்ச்சி கொண்டது. நீண்ட காலம் வைத்திருந்து சமைக்கப் பயன்படுத்தலாம். ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்புகள் இதய பாதிப்புகள் மற்றும் முடக்குவாதம் ஏற்படாமல் காப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஆலிவ் எண்ணெயில் உள்ளன. இவை மூளைத்திறனுக்கு அத்தியவாசியமாகும். ஏராளமான நோய் எதிர்ப்பு பொருட்களும் ஆலிவ் எண்ணெயில் இருக்கின்றன. ஆலிரோபின், ஆலோகேன் தால் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள் குறிப்பிடத்தக்கவை.
இவை வைட்டமின்களுடன் இணைந்து புற்றுநோய், உடல்எரிச்சல், கரோனரி தமனி பாதிப்பு, நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு எதிராக செயலாற்றக் கூடியது. ஆலிவ் எண்ணெயில் 'வைட்டமின் இ' உள்ளது. 100 கிராம் ஆலிவ் எண்ணையில் 14.39 மைக்ரோகிராம் அளவு உள்ளது.
இது தினமும் உடலில் சேர்க்க வேண்டிய அளவான ஆர்.டி.ஏ. அளவின்படி 96 சதவீதமாகும். இது செல் சவ்வுகள் உறுதியாக இருப்பதற்கும், தீங்கு தரும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து தற்காப்பு பெறவும் உதவியாக இருக்கும். வைட்டமின் கே, ஆலிவ் எண்ணெயில் சிறிதளவு உள்ளது. இது எலும்பின் எடையை அதிகரிக்க அவசியமாகும். நரம்பு பாதிப்புகளை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கும்.
பயன்பாடுகள்:
ஆலிவ் எண்ணெய் பெரும்பாலும் சமையலில் பயன்படுகிறது. பொறித்தெடுக்கும் எண்ணெய்ப் பண்டங்கள் தயாரிக்க உகந்தது ஆலிவ் எண்ணெய். ஸ்பெயின் நாட்டில் 'ஆன்டலுசியன் சாலட்', ஆலிவ் எண்ணையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
தக்காளி, வெள்ளரிக்காய், குடமிளகாய், வெங்காயம் மற்றும் நறுமண இலைகளுடன் ஆலிவ் எண்ணெயும் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. இத்தாலியில் 'எக்பிளான்ட் பிரை' பிரசித்தி பெற்றது. கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம் ஆகியவை ஆலிவ் எண்ணெயில் பொறித்து தயாரிக்கப்படுகிறது இந்த உணவு.
பிரான்சில் 'ஆலிவ் டபனேட்' விரும்பி சுவைக்கப்படுகிறது. அக்ரோட்டுக் கொட்டைகள், வெங்காயம், பூண்டு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு ஆகியவை ஆலிவ் எண்ணெயில் ஊற வைத்து சுவைக்கப்படுகிறது.

கம்புவின் (Millet – மில்லட்)மருத்துவ குணங்கள்

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.
* மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர்.
* இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
* அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.
* கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

Sunday, 10 August 2014

சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.
* சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
மருத்துவ பயன்கள்:
1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.
4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்

கொழுப்பை விரட்டும் கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான் உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.
கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.
கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.
கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற பி- காம்பிளக்ஸ் வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.

நியாசின் (வைட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோளிணி எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

Saturday, 9 August 2014

உங்கள் ரத்தம் தானம் செய்ய தேவையான அடிப்படை தகுதிகள்

ரத்ததானம் செய்பவரின் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்பவர்களின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். சாதாரண மனிதனின் உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்ததானத்தின்போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும்.
நாம் தானம் செய்யும் ரத்தம், 24 மணி நேரத்தில் மீண்டும் உற்பத்தியாகிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய 20 நிமிடங்கள் போதும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகளில் ஈடுபடலாம். சர்க்கரை நோய், பல்வேறு நோய் தடுப்பூசிகள் போட்டிருப்பவர்கள், ஹார்மோன் தொடர்பான மருந்துகள், போதை மருந்து உட்கொண்டவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாது. மலேரியா, டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் மூன்று மாதத்திற்குப் பின்புதான் ரத்ததானம் செய்ய வேண்டும். மது அருந்துவிட்டு ரத்ததானம் செய்யக்கூடாது. 


பெண்கள் மாதவிடாய் காலம், கருவுற்றிருக்கும் போது, குழந்தைக்கு தாய்ப்பால் தரும்போதும் ரத்ததானம் செய்யக் கூடாது. எச்ஐவி பாதித்தவர்கள் ரத்ததானம் செய்யக்கூடாது. அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆறு மாதங்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது. ரத்த தானாம் செய்வதால் மாரடைப்பு தவிர்க்கப்படும். புதிய ரத்த அணுக்கள் உருவாகும். ரத்த தானம் செய்தால் ஒருவரது உடலில் சுமார் 500 கலோரிக்கும் மேல் செலவிடப்படும்.

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்

முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

வேப்பம் பட்டையுடன் நீர்,எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி, சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும்.

Friday, 8 August 2014

2200 ஆண்டு பழமையான சுடுமண் உறைகிணறு ஏரி தூர்வாரும்போது கண்டுபிடிப்பு

வடலூர்: கடலூர் அருகே ஏரி தூர்வாரும் போது 2200 ஆண்டு பழமையான சுடுமண் உறைகிணறு கண்டு பிடிக்கப்பட்டது. கடலூர் முதுநகர் அருகே உள்ள அப்பர் குட்டைக்கும் தெற்கே உள்ள கொண்டங்கி ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் ஏரியை தூர்வாரும் போது வட்டவடிவில் மண்ணால் செய்யப்பட்ட தொட்டி கிடைத்திருப்பதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்றுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

இது குறித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்றுத் துறையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர், பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் கூறியதாவது:
இது சுமார் 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கேணிக்கு பயன்படுத்தப்பட்ட வட்டவடி விலான சுடுமண் உறை. இது 42 செ.மீ உயரம், 54 செ.மீ விட்டம் 181 செ.மீ சுற்றளவு கொண்டதாகும்.

மேலும் ஏரியின் தெற்கு பகுதியில் கருப்பு, சிவப்பு மட்கல ஓடுகளும், சுமார் 200 அடி தூரத்தில் முதுமக்கள் தாழிகளின் உடைந்த பாகமும் கிடைத்துள்ளது. இவற்றை ஆய்வு செய்ததில் இப்பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. உறைகேணிக்கு பயன்படுத்தப்பட சுடுமண் உறை நன்கு சுடப்பட்டதாகும். இதன் தயாரிப்பு தொழில் நுட்பத்தை பார்க்கும் போது, கி.மு. 2ம் நூற்றாண்டை சார்ந்தது என அறியமுடிகிறது. சுடுமண் உறை கேணி கிடைத்த இடத்தில் கடற்கரை மணல் பெருமளவில் கிடைப்பதால் அக்காலத்தில் இந்த பகுதி வரை கடல் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
link

கடலுக்கடியில் உறங்கும் தமிழனின் வரலாறு!

கடலுக்கடியில் உறங்கும் தமிழனின் தொன்மை வரலாறு!
தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.
புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.
சிந்துவெளி நாகரிகம்:
சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.
நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.
சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:
1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர்.கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.
2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.
3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.
4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.
5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.
6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.
7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை.
(Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)
9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.
10.சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )
11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது.ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.
12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.
‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷிய, பின்லாந்து, அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘ தமிழர் நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.
கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு தமிழ்மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).
சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது தமிழ் மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.
அண்மைக் காலங்களில் டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.
சிந்துவெளி நாகரிகம் தமிழரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (indian Express - Madras - 5 August 1994)
Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.
தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வு', 'பெயராய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந்துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்” புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்
'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.
சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.
புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.
சிந்துவெளி மக்கள் தமிழர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.
எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்
பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.
பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.
எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
நதிகள், மலைகளின் பெயர்கள்
நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.
கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பஃறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.
பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.
தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.
இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.
இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.

தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
2 - பூம்புகார்
பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.
''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.
மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.
அந்த ''அண்டர்வேர்ல்ட்” தொலைக்காட்சித் தொடரை தேன்மழையில் இங்கு காணலாம்-[விழிய இணைப்பு]
மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்
1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.
12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் குமரி மாவட்டத்தில் மிகவும் பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கோயில் ஆகும்.இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகின்றது . ஆண்கள் சபரி மலைக்கு இருமுடி கட்டி செல்வதுபோல் இங்கு பெண்கள் இருமுடி கட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றார்கள்.இங்கு வருடத்தில் 10 நாட்கள் திருவிழா,எட்டாம் கொடை மற்றும் பரணி கொடை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மண்டைக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது.இது நாகர்கோவிலில் இருந்து 23 கி மி தொலைவிலும்,குளச்சலில் இருந்து 7 கி மி தொலைவிலும் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து 75 கி மி தொலைவிலும் அமைந்துள்ளது.இங்கு நடைபெறும் பத்தாவது திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை ஆகும்.
அருள் மிகு மண்டைக்காடு பகவதி அம்மன்
அம்மன் : பகவதி அம்மன்
பெருமை : பெண்களின் சபரிமலை
சிறப்பு : உயரமான புற்று
விசேசம் : மண்டையப்பம்
தல மரம் : வேம்பு மரம்.
வழிபாடு : வெடிவழிபாடு
பிரசாதம் : புட்டமுது
ஊர் : மண்டைக்காடு
புராணபெயர் : மந்தைக்காடு
மாவட்டம் : கன்னியா குமரி
பிரார்த்தனை
கல்யாண வரம், குழந்தை வரம்,உடல் உறுப்புகள் குறைபாடு,திருஷ்டி , தோசம் , தலைவலி நீங்குதல் முதலிய பிரார்த்தனைகள்
நேர்த்தி கடன்
கல்யாண காரியங்களுக்கு பட்டு தாலி காணிக்கை செலுத்தலாம்
உடல் நலம் குணமாக வெள்ளியில் கை,கால் வடிவம் செய்து வைத்து வழிபட்டால் நோய் குணமாகிறது. மண் சோறு சாப்பிடலும் நடக்கிறது
குழந்தை வரத்திற்கு தொட்டில் கட்டி விடலாம்.
திருஷ்டி தோசம் கழிய வெடி வழிபாடு செய்யப்படுகிறது.
கோயிலின் சிறப்பம்சம்
கோயில் அமைப்பு : ஆரஞ்சு கலரில் முகப்பு . ஓடு வேய்ந்த மேற் கூரையுடன் மலையாளச் சாயல் படிந்த எளிமையுடன் இருக்கும் கோயில்.அதற்குள் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கும் புற்று.அதன் தலைப் பகுதியில் பகவதி அம்மன்.
மண்டையப்பம்: பச்சரிசி மாவு சர்க்கரை வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் தலைவலி நோய் குணமாகும் அதிசயம் நடக்கிறது.
தல பெருமைகள் :
*பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மிகப் பிரலமான கோயில்.
*15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது சிறப்பு
*இருமுடி கட்டி பெண்கள் பரவசமாக வந்து அம்மனை தரிசிக்கிறார்கள்
*தரையிலிருக்கும் ஸ்ரீ சக்சரம் மேல் புற்று வளர்ந்து கொண்ேட வந்தது
*கோயில் 3 தடவைக்கு மேல் இடித்து கட்டப்பட்டுள்ளது.
*காலை மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப் படுகிறது.
முக்கிய திருவிழாக்கள்
மாசிப் பெருந்திருவிழா 10 நாள் திருவிழா10 லட்சம் பக்தர்கள் கூடுவர்.
மாதாமாதம் பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய் வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.
தல வரலாறு
சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீ சக்கரம் வைத்து பூஜை செய்கின்றரார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீ சக்கரம் திரும்ப வரவே இல்லை.எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை.இந்த இடத்திலேயே இருந்து சித்து விளையாட்டுக்கள் நடத்தி மண்ணுக்குள் சமாதி ஆகிவிட்டார்.அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது.அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது.இந்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு தெரிவிக்கப் பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார். பின்பு காலப்போக்கில் அம்மனின் மகிமை பரவ பரவ பக்தர்கள் பெரும்அளவில் வந்து வழிபடும் பெரிய கோயிலாக புகழடைந்ததாக கூறப்படுகிறது.
மாதாமாதம் பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
நாகர்கோயில் 23 கி.மீ.
குளச்சலில் 7 கி.மீ.
திருவனந்தபுரம் 75 கி.மீ.
திருநெல்வேலி 95 கி.மீ.
தங்கும் வசதி : கோயிலில் விடுதி உள்ளது. கட்டணம் ரூ.25 , ரூ.50.
தவிர குடும்பத்தோடு வரும் பக்தர்கள் நாகர்கோயில் நகரில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
கட்டணம் ரூ.150 முதல் ரூ.400 வரை.
போக்குவரத்து வசதி : *தென்தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து நாகர்கோயிலுக்கு நிறையபஸ் வசதி உள்ளது.அங்கிருந்து சாலை மார்க்கமாக மண்டைக்காடு கோயிலுக்கு செல்லலாம்.
*அருகிலுள்ள ரயில் நிலையம் இரணியல், நாகர்கோயில்
*அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம்,

Monday, 4 August 2014

கார்டியன் அலர்ட் - "Guardian Alert"

B Safe - FREE APP to track your Children and Family Members - "bSafe"
பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு கட்டிகொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
அவர்களின் கவலையை போக்க பி ஸேஃப் என்னும் புது வகை ஆப்பை ஆன்ட்ராயிட் / ஆப்பிள் பிளாட்பாரத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் பிள்ளைகளின் மொபைல் ஃபோனில் இதை இன்ஸ்டால் செய்து விட்டால் - கொஞ்சம் கவலை இல்லாமல் இருக்கலாம்.
இதன் மூலம் உங்களின் பிள்ளைகளை நீங்கள் துள்ளியமாக கண்கானிக்க முடியும்.
அவர்கள் எங்கு இருக்கின்றனர் எங்கு செல்கின்றனர் - ஏதாவது ஒரு இடத்தில் அதிக நேரம் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறார்களா என்று வீட்டின் கணனியில் நீங்கள் அவர்கள் இருக்கும் ஊர் - தெரு - கதவிலக்கம் முதற்க்கொண்டு பார்க்க முடியும்.
அது போக இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்திருக்கும் பிள்ளைகள் தங்களுக்கு ஏதாவாது விபரீதம் ஏற்படுகிறது என உணர்ந்தால் இதில் உள்ள கார்டியன் அலர்ட் - "Guardian Alert" என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு அவர்கள் ஆபத்தில் உள்ளார்கள் என இலவசமாக தகவல் வரும்.
இந்த அலெர்ட் வசதி பெற்றோர் அல்லது பல நண்பர்களுக்கு கூட ஒரே நேரத்தில் தெரிவிக்க இயலும்.
சில சமயம் நீங்கள் ஒரு இடத்தில் மாட்டிகொண்டீர்கள் அல்லது அங்கிருந்து யாரும் சந்தேகபடாமல் தப்பிக்கவும் இதில் இன்னொரு வசது உண்டு
அது தான் ஃபேக் கால் - "Fake Call" - மொபைலை நோண்டுவது போல் இந்த பட்டனை அழுத்தினால் உங்க ஃபோனுக்கு சிக்னல் இல்லைனா கூட கால் வரும் - உடனே நீங்களும் உங்களுக்கு கால் வந்திருக்கிறது - எக்ஸ்கியூஸ் மீன்னு எஸ் ஆகிடலாம் -
இது பிள்ளைகள் மற்றும் தனியே வேலைக்கு செல்லும் பெண்கள், இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிசாதாமக அமையும்.
உடனே தயக்கம் என்ன - மொபைல் இல்லாத வளர்ந்த பிள்ளைகளே இல்லை என்னும் இந்த காலத்தில் இந்த வசதியை இலவசமாக் செய்து கொடுங்கள்
உங்களின் பிள்ளைகளின் கவலையை அடியோடு மறந்து விடுங்கள்.
இதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் ந்டவடிக்கையை கூட நீங்கள் கண்கானிக்க முடியும்.
இது பல மாணவ / மாணைகளின் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க முடியும்.
என்ன மகிழ்ச்சி தானே பெற்றோர்களே
Apple Patrons FREE Download Link - https://itunes.apple.com/in/app/bsafe-personal-safety-app/id459709106?mt=8